உள்ளடக்கத்துக்குச் செல்

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி)
  நிறுவனர் நாடுகள் (1961)
  பிற உறுப்பினர் நாடுகள்
தலைமையகம்பாரிசு, பிரான்சு
அங்கத்துவம்34 நாடுகள்,
20 நிறுவனர் நாடுகள் (1961)
தலைவர்கள்
• செயலாளர் நாயகம்
யோசு ஆங்கெல் குரியா
நிறுவுதல்
• ஓஇஇசி ஆக 1
ஏப்ரல் 16, 1948
• ஓஇசிடி என திருத்தப்பட்டது
செப்டம்பர் 30, 1961
  1. ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பு (OEEC).

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development, அல்லது ஓஇசிடி, பிரெஞ்சு மொழி: Organisation de coopération et de développement économiques, OCDE) 1961ஆம் ஆண்டில் உலக வணிகத்தையும் பொருளியல் வளர்ச்சியையும் தூண்டிட 34 நாடுகளால் நிறுவப்பட்ட ஓர் பன்னாட்டு பொருளியல் அமைப்பாகும். மக்களாட்சி மற்றும் சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கை உடைய நாடுகளின் அரங்கமாக தங்கள் நிதிக்கொள்கைகளை பகிர்ந்து கொள்ளுதல், பொதுவான சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், நல்ல நடைமுறைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றை உரையாடவும் உறுப்பினர்களின் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் இது உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மீள்கட்டமைப்பிற்கான மார்ஷல் திட்டத்தை செயல்படுத்த 1948ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பிலிருந்து (OEEC) ஐரோப்பாவில் இல்லாத நாடுகளையும் சேர்த்துக்கொண்டு இந்த அமைப்பு உருவானது. இதன் உறுப்பினர் நாடுகளில் பெரும்பான்மையானவை உயர்வருமானம் உடைய பொருளாதாரங்கள் ஆகும். மனித வளர்ச்சிச் சுட்டெண் மிக உயரிய நிலையில் உள்ள இந்த நாடுகள் வளர்ந்த நாடுகளாகும்.

ஓஇசிடியின் தலைமையகம் பிரான்சுத் தலைநகர் பாரிசில் உள்ளது.

உறுப்பினர் நாடுகள்

ஓஇசிடியில் 32 உறுப்பினர் நாடுகள் உள்ளன; இரு நாடுகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

நடப்பு உறுப்பினர்கள்

த்ற்போது பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் முப்பத்து நான்கு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

அங்கத்துவ நாடு விண்ணப்பம் பேச்சு வார்த்தைகள் அழைப்பு உறுப்பினர் நிலை Geographic location Notes
 ஆத்திரேலியா 7 சூன் 1971 ஓசானியா
 ஆஸ்திரியா 29 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 பெல்ஜியம் 13 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 கனடா 10 ஏப்ரல் 1961 வட அமெரிக்கா
 சிலி நவம்பர் 2003 16 மே 2007 15 திசம்பர் 2009 7 மே 2010 தென் அமெரிக்கா
 செக் குடியரசு சனவரி 1994 8 சூன் 1994 24 நவம்பர் 1995 21 திசம்பர் 1995 ஐரோப்பா
 டென்மார்க் 30 மே 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 எசுத்தோனியா 16 மே 2007 10 மே 2010 9 திசம்பர் 2010 ஐரோப்பா
 பின்லாந்து 28 சனவரி 1969 ஐரோப்பா
 பிரான்சு 7 ஆகஸ்டு 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 செருமனி 27 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினராக 19498 ஆம் ஆண்டு இணைந்து கொண்டது.
 கிரேக்க நாடு 27 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 அங்கேரி திசம்பர் 1993 8 சூன் 1994 7 மே 1996 ஐரோப்பா
 ஐசுலாந்து 5 சூன் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 அயர்லாந்து 17 ஆகஸ்டு 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 இசுரேல் 15 மார்ச் 2004 16 மே 2007 10 மே 2010 ஆசியா
 இத்தாலி 29 மார்ச் 1962 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 சப்பான் நவம்பர் 1962 சூலை 1963 28 ஏப்ரல் 1964 ஆசியா
 தென் கொரியா 29 மார்ச் 1995 12 திசம்பர் 1996 ஆசியா
 லக்சம்பர்க் 7 திசம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 மெக்சிக்கோ 14 ஏப்ரல் 1994 18 மே 1994 வட அமெரிக்கா
 நெதர்லாந்து 13 நவம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 நியூசிலாந்து 29 மே 1973 ஓசானியா
 நோர்வே 4 சூலை 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 போலந்து 1 பெப்ரவரி 1994 8 சூன் 1994 11 சூலை 1996 22 நவம்பர் 1996 ஐரோப்பா
 போர்த்துகல் 4 ஆகஸ்டு 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 சிலவாக்கியா பெப்ரவரி 1994 8 சூன் 1994 சூலை 2000 14 திசம்பர் 2000 ஐரோப்பா
 சுலோவீனியா 16 மே 2007 10 மே 2010 21 சூலை 2010 ஐரோப்பா
 எசுப்பானியா 3 ஆகஸ்டு 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினராக 1958 ஆம் ஆண்டில் இணைந்து கொண்டது.
 சுவீடன் 28 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 சுவிட்சர்லாந்து 28 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 துருக்கி 2 ஆகஸ்டு 1961 ஆசியா/ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 ஐக்கிய இராச்சியம் 2 மே 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
 ஐக்கிய அமெரிக்கா 12 ஏப்ரல் 1961 வட அமெரிக்கா

செயலாளர்கள்

  • 1948–1955  பிரான்சு ரொபேட் மார்ஜொலின்
  • 1955–1960  பிரான்சு ரெனே சேர்ஜென்ர்
  • 1960–1969  டென்மார்க் தோர்கில் கிரிஸ்டென்சன்
  • 1969–1984  நெதர்லாந்து எமிஎல் வான் லெனேப்
  • 1984–1994  பிரான்சு ஜீன்-க்ளயூட் பெயே
  • 1994  சுவீடன் ஸ்டாவன் சோல்மன் (இடைக்கால)
  • 1994–1996  பிரான்சு ஜீன்-க்ளயூட் பெயே
  • 1996–2006  கனடா டொன் ஜோன்ஸ்டன்
  • 2006–present  மெக்சிக்கோ ஜொஸ் ஏஞ்சல் குரியா


மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

ஒளிதங்கள்