உள்ளடக்கத்துக்குச் செல்

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி)
  நிறுவனர் நாடுகள் (1961)
  பிற உறுப்பினர் நாடுகள்
தலைமையகம்பாரிசு, பிரான்சு
அங்கத்துவம்34 நாடுகள்,
20 நிறுவனர் நாடுகள் (1961)
தலைவர்கள்
• செயலாளர் நாயகம்
யோசு ஆங்கெல் குரியா
நிறுவுதல்
• ஓஇஇசி ஆக 1
ஏப்ரல் 16, 1948
• ஓஇசிடி என திருத்தப்பட்டது
செப்டம்பர் 30, 1961
  1. ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பு (OEEC).

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development, அல்லது ஓஇசிடி, பிரெஞ்சு மொழி: Organisation de coopération et de développement économiques, OCDE) 1961ஆம் ஆண்டில் உலக வணிகத்தையும் பொருளியல் வளர்ச்சியையும் தூண்டிட 34 நாடுகளால் நிறுவப்பட்ட ஓர் பன்னாட்டு பொருளியல் அமைப்பாகும். மக்களாட்சி மற்றும் சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கை உடைய நாடுகளின் அரங்கமாக தங்கள் நிதிக்கொள்கைகளை பகிர்ந்து கொள்ளுதல், பொதுவான சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், நல்ல நடைமுறைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றை உரையாடவும் உறுப்பினர்களின் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் இது உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மீள்கட்டமைப்பிற்கான மார்ஷல் திட்டத்தை செயல்படுத்த 1948ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பிலிருந்து (OEEC) ஐரோப்பாவில் இல்லாத நாடுகளையும் சேர்த்துக்கொண்டு இந்த அமைப்பு உருவானது. இதன் உறுப்பினர் நாடுகளில் பெரும்பான்மையானவை உயர்வருமானம் உடைய பொருளாதாரங்கள் ஆகும். மனித வளர்ச்சிச் சுட்டெண் மிக உயரிய நிலையில் உள்ள இந்த நாடுகள் வளர்ந்த நாடுகளாகும்.

ஓஇசிடியின் தலைமையகம் பிரான்சுத் தலைநகர் பாரிசில் உள்ளது.

உறுப்பினர் நாடுகள்

ஓஇசிடியில் 32 உறுப்பினர் நாடுகள் உள்ளன; இரு நாடுகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

நிறுவனர் நாடுகள் (1948):

ஐரோப்பிய அமைப்பாக இருந்தபோது உறுப்பினரான நாடுகள்:

உலக அமைப்பாக (ஓஇசிடியாக) மாற்றப்படும்போது உறுப்பினரான நாடுகள் (1961)

ஓஇசிடியாக மாற்றப்பட்டபின் உறுப்பினரானவை:

அழைக்கப்பட்டுள்ள நாடுகள்:

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

ஒளிதங்கள்