உள்ளடக்கத்துக்குச் செல்

கணைய அழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிஇணைப்பு category வயிற்றுவலி நோய்கள்
வரிசை 27: வரிசை 27:


{{அழற்சி}}
{{அழற்சி}}

[[பகுப்பு:அழற்சி]]
[[பகுப்பு:அழற்சி]]
[[பகுப்பு:வயிற்றுவலி நோய்கள்]]

13:17, 26 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

கணைய அழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇரையகக் குடலியவியல்
ஐ.சி.டி.-10K85., K86.0K86.1
ஐ.சி.டி.-9577.0-577.1
ம.இ.மெ.ம167800
நோய்களின் தரவுத்தளம்24092
மெரிசின்பிளசு001144
ஈமெடிசின்emerg/354
ம.பா.தD010195
கடுமையான கணைய அழற்சியில் கொழுப்புத் திசு நசிவின் இழையவியல் படிமம்
தீவிரமான கசியும் கணைய அழற்சியின் கணிப்பொறி அச்சு வெட்டுத்தளப்படம் (CT scan)

கணைய அழற்சி (Pancreatitis) என்பது கணையத்தில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது. பல காரணங்களால் உருவாகும் இந்நோய் பல அறிகுறிகளைக் கொண்டுள்ளது. இந்நோய்க்கு உடனடி மருத்துவச் சிகிச்சை அவசியமான ஒன்றாகும். சமிபாட்டிற்குத் தேவையான கணைய நொதிகள் (குறிப்பாக டிரிப்சின் நொதியம்) சிறுகுடலில் செயற்பாடடைவதற்குப் பதிலாகக் கணையத்திலேயே செயல்திறன்மிக்கதாக மாறிவிடுவதால் இந்நோய் உருவாகிறது. இது திடீரெனத் தோன்றிச் சில நாட்களே காணப்படும் தீவிரமான நோயாகவோ (acute pancreatitis) அல்லது பல வருடங்களாகக் காணப்படும் நாட்பட்ட நோயாகவோ (chronic pancreatitis) இருக்கும்.

அறிகுறிகளும் உணர்குறிகளும்

மேல்வயிறு (epigastrium) அல்லது வயிற்றின் இடது மேற்புறம் கடுமையான எரிச்சல் தரக்கூடிய வலி முதுகுபுறமாகப் பரவுதல், குமட்டல், உணவு உண்டபின் மோசமாகும் வாந்தி போன்றவை கணைய அழற்சியின் மிகவும் பொதுவான அறிகுறிகளாகும். உடலின் உட்புறத்தில் ஏற்படும் இரத்தக் கசிவு மற்றும் அதன் தீவிரத்தைப் பொருத்து உடல் சோதனைகள் மாறுபடுகின்றன. வலி, குறைந்த நீர்ப்போக்கு அல்லது இரத்தக்கசிவு ஆகியவற்றால் குருதி அழுத்தம் அதிகரிக்கலாம். இதயத் துடிப்பு, சுவாசவீதம் ஆகியவை அடிக்கடி அதிகரித்துக் காணப்படும். சாதாரணமாக, வலி ஏற்பட்டுள்ளதைப் போலல்லாமல் குறைந்த அளவில் வயிறு மிருதுவாகக் காணப்படும். காய்ச்சல் அல்லது மஞ்சள் காமாலை காணப்படலாம். நாட்பட்ட கணைய அழற்சி நீரிழிவு நோய் அல்லது கணையப் புற்றுநோய்க்கு வித்திடலாம். கணைய நொதிகள் போதிய அளவு இல்லாமையால் சமிபாடு பாதிக்கப்பட்டு விளக்க இயலாத உடல் எடை குறைவு ஏற்படலாம்.

காரணிகள்

பித்தக்கற்கள் அல்லது மது அருந்துவது எண்பது சதவிகித (80%) கணைய அழற்சிக்குக் காரணமாகிறது. பொதுவாக, கடுமையான கணைய அழற்சிக்குப் பித்தக்கற்களும்[1] நாட்பட்டக் கணைய அழற்சிக்கு மது அருந்துவதும் முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றன[2][3][4][5][6].

மேற்கோள்கள்

  1. NIDDK (July 2008). "Pancreatitis". National Digestive Diseases Information Clearinghouse. U.S. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases. 08–1596. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "Pancreatitis". A.D.A.M., Inc. பார்க்கப்பட்ட நாள் 2013-01-05.
  3. Apte MV, Pirola RC, Wilson JS (June 2009). "Pancreas: alcoholic pancreatitis—it's the alcohol, stupid". Nature Reviews Gastroenterology & Hepatology 6 (6): 321–2. doi:10.1038/nrgastro.2009.84. பப்மெட்:19494819. [at Medscape Today Lay summary]. 
  4. Yadav D, Hawes RH, Brand RE, Anderson MA, Money ME, Banks PA, Bishop MD, Baillie J, Sherman S, DiSario J, Burton FR, Gardner TB, Amann ST, Gelrud A, Lawrence C, Elinoff B, Greer JB, O'Connell M, Barmada MM, Slivka A, Whitcomb DC (June 2009). "Alcohol consumption, cigarette smoking, and the risk of recurrent acute and chronic pancreatitis". Arch. Intern. Med. 169 (11): 1035–45. doi:10.1001/archinternmed.2009.125. பப்மெட்:19506173. http://archinte.ama-assn.org/cgi/pmidlookup?view=long&pmid=19506173. [Study Redefines Roles Of Alcohol, Smoking In Risk For Pancreatitis Lay summary] – ScienceDaily (8 June 2009). 
  5. "Pancreatitis Explained". Better Health Channel. State Government of Victoria. 2011.
  6. Johnson CD, Hosking S (1991). "National statistics for diet, alcohol consumption, and chronic pancreatitis in England and Wales, 1960–88". Gut 32 (11): 1401–5. doi:10.1136/gut.32.11.1401. பப்மெட்:1752477. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணைய_அழற்சி&oldid=2213500" இலிருந்து மீள்விக்கப்பட்டது