2009
2009 (MMIX) கிரெகோரியன் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2009 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2009 MMIX |
திருவள்ளுவர் ஆண்டு | 2040 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2762 |
அர்மீனிய நாட்காட்டி | 1458 ԹՎ ՌՆԾԸ |
சீன நாட்காட்டி | 4705-4706 |
எபிரேய நாட்காட்டி | 5768-5769 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2064-2065 1931-1932 5110-5111 |
இரானிய நாட்காட்டி | 1387-1388 |
இசுலாமிய நாட்காட்டி | 1430 – 1431 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 21 (平成21年) |
வட கொரிய நாட்காட்டி | 98 |
ரூனிக் நாட்காட்டி | 2259 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4342 |
பன்னாட்டு வானியல் ஆண்டு என்று 2009 குறிப்பிட்டுள்ளது[1].
நிகழ்வுகள்
தொகுஜனவரி 2009
தொகு- ஜனவரி 1 - சிலோவாக்கியா யூரோ நாணயத்தை ஏற்றுக்கொண்ட 16வது ஐரோப்பிய நாடானது.
- ஜனவரி 2 - கிளிநொச்சி நகரை இலங்கை இராணுவம் கைப்பற்றியிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
- ஜனவரி 7 - இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக்க அறிவிக்கப்பட்டது.
- ஜனவரி 8 - சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொழும்பில் இனந்தெரியாதோரால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
- ஜனவரி 8 - இங்கிலாந்து வங்கி வட்டி வீதத்தை 1.5 விழுக்காடாகக் குறைத்தது. இது 315 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவானதாகும்.
- ஜனவரி 11 - தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2009க்கான கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
- ஜனவரி 12 - இந்தோனீசியாவில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 230 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 15 - அமெரிக்க பயணிகள் விமானம் ஒன்று 155 பேருடன் நியூயோர்க் நகரில் அட்சன் ஆற்றில் வீழ்ந்தது. அனைவரும் உயிர் தப்பினர்.
- ஜனவரி 20 - பராக் ஒபாமா ஐக்கிய அமெரிக்காவின் 44வது அதிபராகப் பதவியேற்றார்.
- ஜனவரி 25 - முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.
- ஜனவரி 29 - இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி கு. முத்துக்குமார் என்பவர் சென்னையில் தீக்குளித்து இறந்தார்.
மேலும் ஜனவரி 2009 நிகழ்வுகளுக்கு..
பெப்ரவரி 2009
தொகு- பெப்ரவரி 1 - 1744 இல் மூழ்கிய விக்டரி என்ற பிரித்தானியப் போர்க்கப்பலின் பகுதிகள் ஆங்கிலக் கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டன.
- பெப்ரவரி 2 - புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது இராணுவ ஏவுகணைகள் வீழ்ந்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 5 - ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்டத்தில் 503வது விக்கெட்டை வீழ்த்தி முத்தையா முரளிதரன் உலக சாதனையை முறியடித்தார்.
- பெப்ரவரி 7 -நாகப்பட்டினம், சீர்காழியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவிச்சந்திரன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார்.
- பெப்ரவரி 8 - முல்லைத்தீவு, சுதந்திபுரம் பகுதியில் படையினர் நடத்திய தாக்குதலில், 80 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 பேர் காயமடைந்தனர்.
- பெப்ரவரி 8 - இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி மலேசியாவில் ராஜா (27 வயது) என்ற இலங்கைத் தமிழர் தீக்குளித்து இறந்தார்.
- பெப்ரவரி 9 - எகிப்தில் சக்காரா என்ற இடத்தில் 2,600 ஆண்டுகள் பழமையான பண்டைய எகிப்தின் 30 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- பெப்ரவரி 10 - வன்னியில் தேவிபுரம், சுதந்திரபுரம் ஆகிய இடங்களில் படையினர் நடத்திய தாக்குதலில் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 87 பேர் காயமடைந்தனர்.
- பெப்ரவரி 10 - தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.
- பெப்ரவரி 12 - நியூயோர்க்கில் விமானம் ஒன்று குடிமனை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 13 - ஒரிசாவில் புவனேஸ்வர் நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.
- பெப்ரவரி 14 - பாகிஸ்தானில் தெற்கு வாசிரிஸ்தானில் அமெரிக்க வானூர்திகள் வீசிய ஏவுகணை வீச்சில் 25 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 19 - வன்னிப் பகுதியில் படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 126 பேர் காயமடைந்தனர்.
- பெப்ரவரி 20 - வான்புலிகளின் 2 கரும்புலிகள் கொழும்பில் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 47 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகத்து 29 - நிலவை ஆராய அணுப்பப்பட்ட சந்திரயான்-1 தன் பணியை முடித்துக்கொண்டது.
மேலும் பெப்ரவரி 2009 நிகழ்வுகளுக்கு..
மார்ச் 2009
தொகுமேலும் மார்ச் 2009 நிகழ்வுகளுக்கு..
இறப்புகள்
தொகு- ஜனவரி 8 - லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர் (பி. 1958)
- ஜனவரி 12 - புலோலியூர் தம்பையா, ஈழத்து எழுத்தாளர்
- ஜனவரி 17 - கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (பி. 1927)
- ஜனவரி 29 - கு. முத்துக்குமார், ஈழத்தமிழருக்கு ஆதரவாகத் தீக்குளித்து இறந்த தமிழக இளைஞன்
- ஜனவரி 31 - நாகேஷ், நகைச்சுவை நடிகர் (பி. 1933)
- பெப்ரவரி 12 - சத்தியமூர்த்தி, தமிழீழ ஊடகவியலாளர்
- பெப்ரவரி 12 - முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன்(பி. 1982)
- பெப்ரவரி 13 - கிருத்திகா, தமிழக எழுத்தாளர்
- மார்ச் 11 - ஓமக்குச்சி நரசிம்மன், தமிழ்த் திரைப்பட நடிகர்
- ஏப்ரல் 23 - ரூபராணி ஜோசப், இலங்கை மலையகப் பெண் எழுத்தாளர்
- மே 2 - கே. பாலாஜி, தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்
- மே 31 - மில்வினா டீன், டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்களில் உயிருடன் இருந்த கடைசிப் பயணி (பி. 1912)
- மே 31 - கமலா தாஸ், மலையாள எழுத்தாளர் (பி. 1934)
- சூன் 3 - இரா. திருமுருகன், தமிழறிஞர் (பி. 1929)
- சூன் 6 - ராஜமார்த்தாண்டன், கவிஞர், எழுத்தாளர்
- சூன் 18 - அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (பி. 1922)
- சூன் 25 - மைக்கல் ஜாக்சன், பாப் இசைப் பாடகர் (பி. 1958)
- சூன் 27 - இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (பி. 1935)
- சூன் 29 - வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (பி. 1926)
- சூலை 9 - சி. ஆர். கண்ணன், தமிழக எழுத்தாளர்
- சூலை 16 - டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (பி. 1919)
- சூலை 21 - கங்குபாய், இந்துஸ்தானி இசைப் பாடகி (பி. 1913)
- சூலை 29 - காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (பி. 1920
- சூலை 29 - ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (பி. 1954)
- ஆகத்து 1 - கொரசோன் அக்கினோ, பிலிப்பைன்ஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் (பி. 1933)
- ஆகத்து 6 - முரளி, மலையாள நடிகர் (பி. 1954)
- ஆகத்து 18 - கிம் டாய் ஜுங், தென்கொரியக் குடியரசுத் தலைவர் (பி. 1924)
- ஆகத்து 25 - எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1932)
- ஆகத்து 29 - மாவை வரோதயன், ஈழத்து எழுத்தாளர்
- செப்டம்பர் 2 - ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் (பி. 1949)
- செப்டம்பர் 11 - யுவான் அல்மெய்டா, கியூப புரட்சியாளர் (பி. 1927)
- செப்டம்பர் 12 - நார்மன் போர்லாக், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1914)
- செப்டம்பர் 13 - அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1932)
- செப்டம்பர் 16 - தென்கச்சி கோ. சுவாமிநாதன், தமிழகப் பேச்சாளர், எழுத்தாளர்
- செப்டம்பர் 22 - எஸ். வரலட்சுமி, நடிகை, பாடகி (பி. 1927)
- செப்டம்பர் 22 - ஆர். பாலச்சந்திரன், பேராசிரியர், கவிஞர்
- செப்டம்பர் 24 - நாத்திகம் இராமசாமி, இதழாசிரியர், பகுத்தறிவாளர் (பி. 1932)
- அக்டோபர் 5 - இசுரேல் கெல்ஃபாண்ட், சோவியத் கணிதவியலர் (பி. 1913)
- அக்டோபர் 14 - சி. பி. முத்தம்மா, முதல் இந்தியப் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி (பி. 1924)
- அக்டோபர் 15 - தருமபுரம் ப. சுவாமிநாதன், திருமுறை ஓதுவார் (பி. 1923)
- அக்டோபர் 15 - தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து, ஆஸ்திரேலிய எழுத்தாளர் (பி. 1947)
- டிசம்பர் 5 - திலகநாயகம் போல், ஈழத்துக் கருநாடக இசைப் பாடகர்
- டிசம்பர் 29 - பழ. கோமதிநாயகம், பாசனப் பொறியாளர்
- டிசம்பர் 30 - விஷ்ணுவர்தன், கன்னட நடிகர் (பி. 1950)
விருதுகள்
தொகு- இயற்பியல் - சார்ல்ஸ் காவோ, விலார்ட் போயில், ஜார்ஜ் ஈ. சிமித்
- வேதியியல் - அறிவிக்கப்படவில்லை
- மருத்துவம் - எலிசபெத் பிளாக்பர்ன், கெரொல் கிரெய்டர், ஜாக் சோஸ்டாக்
- அமைதி - அறிவிக்கப்படவில்லை
- பொருளியல் - அறிவிக்கப்படவில்லை
- இலக்கியம் - அறிவிக்கப்படவில்லை