முல்லைத்தீவு

இலங்கையின் வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரம்

முல்லைத்தீவு (Mullaittīvu) இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கரையோர நகரமாகும். இந் நகரமே மாவட்ட தலைநகராகவும் உள்ளது.[1]

முல்லைத்தீவு
அடைபெயர்(கள்): வனங்களின் அரசி
முல்லைத்தீவு is located in Northern Province
முல்லைத்தீவு
முல்லைத்தீவு
Location in Northern Province
ஆள்கூறுகள்: 9°17′N 80°48′E / 9.283°N 80.800°E / 9.283; 80.800
நாடுஇலங்கை
ProvinceNorthern
DistrictMullaitivu
DS DivisionMaritimepattu
மக்கள்தொகை
 (2009)
 • மொத்தம்37,339 (est.)
நேர வலயம்ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone)

காலநிலை மற்றும் பௌதீகத் தன்மைகளும்

தொகு

காலநிலை

தொகு

உலர்வலயம் - பருவகால மழைவீழ்ச்சி முறைமை வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 1300–2416 வெப்பநிலை 23.00oC – 39.30oC ஆகும்.

பௌதீகத் தன்மை

தொகு

முல்லைத்தீவு மாவட்டம் பொதுவாக தட்டையான நிலப்பரப்பினைக் கொண்டதாகும். நிலமானது பொதுவாக கிழக்கு வடக்காக சீராக சரிந்து செல்வதோடு மேற்குப்பகுதி மேற்கு மற்றும் தெற்காக நாய்ந்தும் செல்கின்றது. இந்த மாவட்டமானது 70கிலோமீற்றர் நீளமான கடற்கரையினை கொண்டுள்ளதோடு இறால் உற்பத்தியாகும் கொக்கிளாய், நாயாறு, ந்ந்திக்கடல் மற்றும் மாத்தளன் ஆகிய நான்கு கடல்நீரேரிகளையும் தன்னகத்தே கொண்டதாகும். இதன் நில உயரமானது கடல்மட்டத்திலிருந்து 36.5 மீற்றர் வரை வேறுபட்டுக்காணப்படுகின்றது. மண்ணின் தன்மையானது விவசாயத்திற்கு உகந்த செங்கபில மற்றும் செம்மஞ்சளாக இருபெரும் இருவாட்டி மணற்பிரிவுகாளாக அமைந்துள்ளது.

காணிப்பயன்பாடு

தொகு

எமது மாவட்டத்தில் காட்டுநிலம், பற்றைக்காணிகள், தெங்குப்பயிர்நிலங்கள், விவசாயநிலங்கள், நீர்நிலைகள் போன்றவாறு மாவட்டத்தின் காணிப்பயன்பாடு 251,690 கெக்டேயர் பரப்பைக் கொண்ட பகுதி வித்தியாசமான பொருளாதார வளங்களை கொண்டுள்ளது. இவற்றில் காட்டுப்பகுதி 167,850 கெக்டேயரும் மாவட்டத்தில் 64.1 வீதம் கொண்டது. நீர்நிலைகளும் தரவைக்காணியும் 21,390 கெக்டேயரும் மாவட்டத்தில் 5.2 வீதம் கொண்டதும், விவசாய நிலமாக 44,040 கெக்டேயரும் மாவட்டத்தில் 5.1 வீதமும் ஆகும். மற்றும் மக்கள் வசிப்பிடங்களாக கொண்டுள்ளது.

போக்குவரத்து

தொகு
  • A 34 - முல்லைத்தீவு மாங்குளம் வீதி
  • A 35 - முல்லைத்தீவு பரந்தன் வீதி
  • B 296 - முல்லைத்தீவு புளியங்குளம் வீதி
  • மாங்குளம் மற்றும் முறிகண்டி ரயில் தரிப்புகள்

மாவட்ட மக்களின் வாழ்க்கைமுறைகள்

தொகு

இம்மாவட்டத்தின் பொருளாதாரம் பிரதானமாக விவசாயம், மீன்பிடி என்பவற்றில் தங்கியுள்ளது. மேலும் கால்நடை வளர்ப்பு, காடுவளர்ப்பு என்பனவும் பங்குவகிக்கின்றன. ஏறக்குறைய 4850 குடும்பங்களை சேர்ந்த 22,963 அங்கத்தவர்கள் விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயம்

தொகு

இம் மாவட்டத்தில் விவசாயம் பிரதான வருமானத்தை ஈட்டித்தரும் வளமாக காணப்படுகின்றது. மொத்தமாக 80% விவசாயத்தில் தங்கியுள்ளனர். நெற்செய்கைக்கு சாதகமான 16,737 ஏக்கர் நிலத்தை இம் மாவட்டம் கொண்டுள்ளது. 3 பெரிய குளங்களும் 16 நடுத்தர அளவிலான குளங்களும் 7,109 ஏக்கர் பெரிய நெற்காணிகளிற்கு நீர்பாய்ச்சுவதுடன் 220 சிறிய குளங்கள் 11,749 பெரிய நெற்காணிகளிற்கு நீர்பாய்ச்சுகின்றன.

மீன்பிடி

தொகு

மாவட்டத்தின் 70 கி.மீ நீளமான வளமான கடற்கரை படுக்கையும் நான்கு ஏரிகளான மாத்தளன், ந்ந்திக்கடல், நாயாறு, கொக்கிளாய் ஆகியவை மீன்பிடி அபிவிருத்திக்கு மிகவும் உகந்த்தாகவுள்ளன. இந்த ஏரிகள் இறால், நண்டு உற்பத்திக்கு பிரசித்திபெற்றவையாகும். பெரிய குளங்களில் நன்னீர் மீன்பிடியினை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான குடும்பங்களின் ஜீவனோபாய முயற்சியாக மீன்பிடித்தல் உள்ளதோடு அவர்களின் வாழ்வாதார முயற்சியினையும் வருமான வழிகளையும் பெருக்க இது பெரிதும் உதவும்.

மாவட்ட நீர்ப்பாசனத் தொகுதி

தொகு

இம் மாவட்டம் விவசாய அபிவிருத்திக்கு பயன்படக்கூடிய நீர்வளங்களைக் கொண்டுள்ளது. நீர்ப்பாசன பயிர்ச்செய்கைக்கு கிளை பரப்பக்கூடிய நிலையாகப் பாய்கின்ற நதியெதுவும் காணப்படவில்லை. இம் மாவட்டத்தில் 03 பாரிய நீர்ப்பாசனக் குளங்களும் 16 நடுத்தர குளங்களும் 198 சிறிய நீர்ப்பாசனக் குளங்களும் காணப்படுகின்றன. மழைநீரே விவசாயத்திற்கான பிரதான நீர்வளமாகும்.

வழிபாடுகள்

தொகு

இந்து ஆலயங்கள்

தொகு

பாடசாலைகள்

தொகு

சுற்றுலா

தொகு
  • வாட்டுவாகல் நீர்ப்பலம்
  • தண்ணீருற்று சுனை
  • சின்னாறு (சின்னாத்தங்காடு)
  • தண்டுவான்- கோடாலிக்கல்லு வனப்பாதை

மேற்கோள்கள்

தொகு
  1. "Latest District, DS Division and GN Division Level Information". Department of Census and Statistics. Department of Census and Statistics, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 2024-02-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லைத்தீவு&oldid=4101978" இலிருந்து மீள்விக்கப்பட்டது