ஆர். எல். இசுட்டீவன்சன்

ஆர். எல். இசுட்டீவன்சன் (ஆர். எல். ஸ்டீவன்சன்) என்றழைக்கப்படும் இராபர்ட் லூயிசு இசுட்டீவன்சன் (Robert Louis Stevenson, நவம்பர் 13, 1850டிசம்பர் 3, 1894) இசுக்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு ஆங்கில எழுத்தாளர். சாகசப்புனைவு, பயண இலக்கியம், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல்வேறு பாணிகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது டிரசர் ஐலண்டு (புதையல் தீவு), கிட்நாப்புட் (ஆட்கடத்தற்பாடு), டாக்டர் சியெக்கில் மற்றும் மிசிட்டர் ஃகைடு ஆகிய புதினங்கள் இலக்கிய உலகில் அழியாப்புகழைப் பெற்றுத் தந்துள்ளன. இசுட்டீவன்சன் மறைந்து நூறாண்டுகளுக்கு மேலாகியும், இப்புத்தகங்கள் உலகெங்கும் படிக்கப்படுகின்றன. தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களாகவும் பல முறை வெளியாகி உள்ளன.

இராபர்ட் லூயிசு இசுட்டீவன்சன்
பிறப்புஇராபர்ட் லூயிசு பால்ஃபோர் இசுட்டீவன்சன்
(1850-11-13)13 நவம்பர் 1850
எடின்பர்க், ஸ்காட்லாந்து
இறப்பு3 திசம்பர் 1894(1894-12-03) (அகவை 44)
வைலிமா, சமோவா
தொழில்எழுத்தாளர்
தேசியம்இசுக்காட்லாந்தியர்
காலம்விக்டோரியன் காலம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்டிரசர் ஐலண்டு, எ சைல்ட்ஃசு கார்டன் ஆஃப் வெர்சசு, கிட்நாப்புட், இசுட்டிரேஞ்ச் கேசு ஆஃப் டாக்டர் சியெக்கில் அண்டு மிசிட்டர் ஃகைடு
துணைவர்ஃபேன்னி வாண்டெகிரிஃப்ட் ஆஸ்பார்ன்
பிள்ளைகள்மாற்றாள் மகன்: லாயிட் ஆசுபர்ன்
குடும்பத்தினர்தந்தை: தாமஸ் இசுட்டீவன்சன்
தாய்: மார்கெரட் இசபெல்லா பால்ஃபோர்

தாக்கங்கள்

தொகு

எட்கர் ஆலன் போ

பின்பற்றுவோர்

தொகு

எச். ரைடர் அக்கார்டு, ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ், ஹாவியேர் மாரியாஸ், ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, ரட்யார்ட் கிப்ளிங், விளாடிமிர் நபோக்கோவ், ஜே. எம். பார்ரி, மைக்கேல் டி லார்ரபெய்ட்டி, ஆர்தர் கோனன் டாயில்

வெளி இணைப்புகள்

தொகு