அனைத்துலக மொழிகள்
அனைத்துலக மொழி என்று ஒரு மொழியைத் தீர்மானிப்பது அம்மொழியை பேசுபவர்களின் எண்ணிக்கை, துறைகளில் ஒரு மொழிக்கு இருக்கும் செல்வாக்கு, வரலாற்று, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் ஆகிய காரணிகள் ஆகும். இன்று ஆங்கிலமே அதி முக்கியத்துவம் கொண்ட அனைத்துலக மொழியாக இருக்கிறது. ஜோர்ஜ் வெபர் (George Weber) என்பவரின் ஆய்வுக் கட்டுரைக்கிணங்க[1] பின்வரும் மொழிகளின் அடுக்கமைவு அமைகின்றது.
- ஆங்கிலம்
- பிரெஞ்சு
- எசுபானியம்
- உருசிய மொழி
- அரபு
- சீனம்
- ஜேர்மன்
- யப்பானிய மொழி
- போர்த்துக்கீச மொழி/டச்சு
- இந்தி/உருது
எண்ணிக்கைக்கு கூடிய முக்கியத்துவம் தந்தால் வங்காள மொழியை முதல் பத்துக்குள்ளும், போர்த்துகீச மொழி பின்னும் தள்ளப்படலாம்.
தமிழின் நிலை
தொகுதமிழ் முதல் 20 மொழிகளுக்குள் வரலாம். எண்ணிக்கை அடிப்படையில் தாய்மொழியாக கொண்டவர்கள் அடிப்படையில் 15வது நிலையிலும், இரண்டாம் மொழியாக கொண்டவர்களையும் சேர்க்கையில் 18வது நிலையிலும் இருக்கின்றது. பிற இந்திய மொழிகளைக் காட்டிலும் நான்கு நாடுகளில் (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்) அரசு ஆதரவு இருக்கின்றது. மேலும், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும் குறிப்பிடத்தக்க தமிழ்ச் சமூகங்கள் இருக்கின்றன.
பொதுவான அடிப்படைகளில் தமிழை ஒரு அனைத்துலக மொழியாக கருத முடியாது. தமிழ் எந்த ஒரு அனைத்துலக அமைப்பிலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மொழி இல்லை. தமிழர்களை அல்லது தெற்கு ஆசியரைத் தவிர வேறு எந்த இனத்தவரும் தமிழை பேசுவது இல்லை. தமிழ் மொழி எந்த ஒரு துறையிலும் அனைத்துலக மட்டத்தில் பயன்படுத்தப்படுவது கிடையாது. எனவே தமிழை ஒரு அனைத்துலக மொழியாகக் கருத முடியாது. அதை ஒரு சமூகம் சார்ந்த மொழியாகவே கருத முடியும்.
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ "The World's Top 10 Most Influencial Languages by George Weber" (PDF). Archived from the original (PDF) on 2007-11-26. பார்க்கப்பட்ட நாள் 2007-03-18.