வாருங்கள்!

வாருங்கள், Thiyagu Ganesh, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மணியன் (பேச்சு) 09:00, 17 நவம்பர் 2015 (UTC)Reply

வணக்கம் தியாகு கணேஷ். கட்டுரைகள் எழுதத் தொடங்கியுள்ளமைக்கு நன்றி. திருவரங்குளம் கட்டுரையை இன்னும் விரிவு படுத்துங்கள். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:06, 21 நவம்பர் 2015 (UTC)Reply

ஆசிய மாதம்

வணக்கம், ஆசிய மாதம் திட்டத்தில் பங்கேற்க விரும்பினால், தனிக் கட்டுரையாகத் தொடங்குங்கள். கட்டுரையை எழுதி முடித்து விட்டு அக்கட்டுரைக்கான தொடுப்பை மட்டும் விக்கிப்பீடியா:ஆசிய மாதம்/பங்கேற்பாளர்கள் பக்கத்தில் தாருங்கள். இப்பக்கம் பட்டியல் பக்கம் மட்டுமே. கட்டுரையை முழுவதுமாக அங்கு தராதீர்கள். மேலும், மேகாங் ஆறு பற்றிய கட்டுரை ஏற்கனவே தமிழ் விக்கியில் மேக்கொங் ஆறு என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் எழுதியவறை அக்கட்டுரையில் சேர்த்து விடுங்கள். உங்கள் உழைப்பு வீணாகப் போகக் கூடாது. ஆனால் அக்கட்டுரை போட்டிக்கு சேர்க்கப்பட மாட்டாது.--Kanags \உரையாடுக 00:26, 22 நவம்பர் 2015 (UTC)Reply

நீங்கள் மணல்தொட்டியில் எழுதிய மேகாங் ஆறு பற்றிய முழுமையான கட்டுரையை மேகாங் என்ற தலைப்பில் எழுதுங்கள். இரண்டு கட்டுரைகளையும் பின்னர் இணைத்து விடலாம்.--Kanags \உரையாடுக 00:33, 22 நவம்பர் 2015 (UTC)Reply

தகவலுக்கு மிக்க நன்றி மீண்டும் உதவி தேவை

நான் தமிழ் விக்கிக்கு புதியவன். நான் முதன்முதலாக மணல் தொட்டியில் எழுதிய [மேகாங் ஆறு] என்ற கட்டுரை ஆசிய மாதம் போட்டியில் பங்குபெற இணைத்திருந்தேன். ஆனால் [மெகோங்] என்ற தலைப்பில் ஏற்கனவே வெளிவந்திருக்கும் செய்தியை தங்கள் மூலமாக அறிந்தேன். நான் [மெகோங் ஆற்றின் பல்லுயிர் பன்மயம்] என்ற தலைப்பில் கட்டுரை எழுதலாமா? அது ஆசிய மாதம் போட்டிக்கு தகுதியான தலைப்பாக இருக்குமா என்பதை தெரிவித்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன் ---Thiyagu Ganesh (பேச்சு) 04:21, 22 நவம்பர் 2015 (UTC)Reply

எழுதுங்கள். ஆனால் கட்டுரையில் மேற்கோள்கள் சேர்க்க வேண்டும். நீங்கள் மணல்தொட்டியில் எழுதிய மேகாங் கட்டுரையில் மேற்கோள்கள் எதுவும் இல்லை. ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்க்கும் போது, அங்குள்ள மேற்கோள்களையும் தவறாமல் இணையுங்கள். மணல்தொட்டியில் உள்ள கட்டுரையை மேகாங் என்ற தலைப்பில் cut&paste செய்யுங்கள்.--Kanags \உரையாடுக 05:19, 22 நவம்பர் 2015 (UTC)Reply

உங்கள் பார்வைக்கு

வணக்கம், தியாகு கணேஷ். திருவரங்குளம் கட்டுரையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களைப் பார்க்கவும். திருவரங்குளம் என்பது ஒரு சிற்றூர், ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் என்ற மூன்றையும் குறிக்கிறது. எனவே உங்கள் கட்டுரையை சிற்றூருக்கு உரியதாக மாற்றியிருக்கிறேன். திருவரங்குளம் ஊராட்சி கட்டுரை ஏற்கனவே உள்ளது.

கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள அரங்குளநாதர் திருக்கோவிலின் போட்டோ நீங்களே படம்பிடித்ததா? மாறாக ஏதாவது இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ததாக இருந்தால் அது பதிப்புரிமை மீறலாகும். கோயில் படிமங்களை நீங்களே கேமரா அல்லது கைபேசியில் எடுத்து பொதுவகத்தில் பதிவேற்றலாம்.

உங்களைப் பற்றிய பொதுத் தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் (உங்கள் பேச்சுப்பக்கத்தின் மேற்புற இடது மூலையில் சிவப்பிணைப்பாக பயனர் பக்கம் என்றுள்ளது. அதனைச் சொடுக்கி விவரங்களை இட்டு சேமிக்கவும்) தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 06:07, 22 நவம்பர் 2015 (UTC)Reply

அரங்குளநாதர் கோயில் படிமம் நீங்கள் எடுத்தது என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி. படிமம் மிகவும் நேர்த்தியாக உள்ளது. உங்கள் பயனர் பக்கத்தை உருவாக்கியதற்கு நன்றி. கீழுள்ள பேச்சுப் பக்கங்களில் கையெழுத்திடும் விவரத்தையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 12:52, 22 நவம்பர் 2015 (UTC)Reply

கையொப்பம் இடுதல்

  வணக்கம்! விக்கிப்பீடியாவிற்கு உங்கள் வரவு நல்வரவாகுக!. பேச்சுப் பக்கங்களிலும் உரையாடல் நடைபெறும் பிற விக்கிப்பீடியா பக்கங்களிலும் நீங்கள் உள்ளிடும்போது , தயவுசெய்து நிச்சயமாக கையெழுத்திடுங்கள். இதனை இரு விதங்களில் செய்யலாம்.

  1. உங்கள் கருத்துக்கு முடிவில் நான்கு அலைக்குறிகளை இடவும். ( ~~~~ ); அல்லது
  2. உங்கள் கருத்துரையின் இறுதியில் திரைக்குறியை வைத்துக்கொண்டு, தொகுப்புப் பெட்டியின் மேலுள்ள கையெழுத்துப் பொத்தானை அழுத்தவும் (  அல்லது  ).

இது தானியக்கமாக உங்கள் பயனர் பெயர் அல்லது இணைய நெறிமுறை முகவரி மற்றும் நேரக்குறிப்புடன் கையெழுத்தை உள்ளிடும். இதனால் மற்ற பயனர்கள் குறிப்பிட்டக் கருத்தை இட்டவரையும் இடப்பட்ட நேரத்தையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

கட்டுரைகளைத் தொகுக்கும்போது கண்டிப்பாகக் கையொப்பம் இடக்கூடாது.

மிக்க நன்றி.

நன்றி

நன்றி நண்பரே! தங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து மகிழ்ந்தோம். தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி. --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 13:15, 22 நவம்பர் 2015 (UTC)Reply

சிறந்த கட்டுரைகளைத் தருவதற்கு நன்றிகள்

சிறந்த கட்டுரைகளைத் தருவதற்கு நன்றிகள், :) நீளமான கட்டுரைகளை ஆசிய மாதத்தின் பொருட்டு எழுதி வருவதற்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். சில உதவிக் குறிப்புக்கள்

  • கட்டுரைகளின் ஆரம்பத்தில் தலைப்பிடத்தேவையில்லை. அதாவது கூடாது :). அனைத்து விடயங்களையும் தமிழில் எழுதுங்கள். தமிழுக்கு மாற்றிவிடுங்கள் :) (national institute இல் இருக்கிறது என்று எழுதாமல் தேசிய நிறுவகத்தில் இருக்கிறது என்று எழுதலாம்)
  • வெளி இணைப்புக்களை கட்டுரைகளில் இணைக்கவேண்டாம். முக்கியமான கட்டுரையுடன் சம்பந்தப்பட்ட இணைப்புக்களை மட்டும் கீழே வெளி இணைப்புக்கள் எனும் பகுதியை இட்டுத்தரலாம்.
  • [http://%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D வங்காளதேசத்தின்] இப்படியோ அல்லது [https://ta.wikipedia.org/s/b4 வங்காளதேசத்தின்] இப்படியோ தருவதில்லை. இலகுவாக + (| என்பதற்கு முன்னிற்பது- இணைப்புத்தரவேண்டிய கட்டுரை, பின்னிற்பது திரையில் தெரியவேண்டிய உரைச்சொல்) எனும் வகையில் தந்தீர்களானால் இணைப்பு வங்காளதேசத்தின் எனும் வகையில் கட்டுரையில் இடப்படும்.
இந்தக் குறிப்புக்கள் தங்களுக்கு உதவும் என நம்புகிறேன். ஏதும் சந்தேகம் எனில் எங்கும் கேக்கலாம். :) உதவக் காத்திருக்கிறோம். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:26, 24 நவம்பர் 2015 (UTC)Reply

உதவிக்கும் ஆலோசனகளுக்கும் நன்றி

திரு. ஆதவன் அவர்களுக்கு என் நன்றிகளை உரிதாக்தாகுகிறேன்.உதவிக்கும் ஆலோசனகளுக்கும் இதயம் நிறைந்த நன்றி தங்களின் நான் தமிழ் விக்கியில் இணைந்து 7 நாட்களே ஆகிறது. உங்களைப் போன்றோரின் ஆதரவையும் ஊறுதுணையையும் என்றும் ஏதிர்நோக்குகிறேன். நன்றி --Thiyagu Ganesh (பேச்சு) 16:48, 24 நவம்பர் 2015 (UTC)Reply

ஆசிய மாதம் - இறுதி வாரம்

 

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)Reply

பதக்கம்

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
பூங்கோதை (பேச்சு) 12:03, 29 ஆகத்து 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:22, 1 திசம்பர் 2015 (UTC)Reply

இந்தப் பதக்கம் யாருக்கானது என்பதை அறிய விரும்புகிறேன் 😊--ThIyAGU 16:20, 1 திசம்பர் 2015 (UTC)

சந்தேகத்துக்கிடமின்றி உங்களுக்குத்தான் தியாகு கணேஷ். தமிழ் விக்கியின் புதுப்பயனரான உங்களது ஆர்வத்துக்கும் ஆக்கத்துக்கும் பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக விக்கியன்புடன் அளிக்கப்பட்ட பதக்கம் இது. உங்களது விக்கிப் பங்களிப்புகள் மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்--Booradleyp1 (பேச்சு) 16:59, 1 திசம்பர் 2015 (UTC)Reply
  விருப்பம் வணக்கம் தியாகு கணேஷ்.. அசத்தி பதக்கம் வாங்கிவிட்டீர்கள்... தொடர்ந்து பங்களிப்பதற்கும் சிறப்பான கட்டுரைகளை ஆக்குவதற்கும் பாராட்டுகள். ஆசிய மாதம் கட்டுரைப் போட்டியில் பங்குபெற்றதற்கும் வாழ்த்துகள். தொடர்ந்து பங்களியுங்கள். தங்கள் ஐசிடி குழுவிலும் இதனைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இன்னும் புதுக்கோட்டையிலிருந்து சிறப்பாகப் பங்களித்துவரும் நமது ஆசிரியர்கள் யார் என்பதனை எனது பேச்சுப் பக்கத்தில் தெரிவித்தீர்களெனில் அவர்களுக்கு மற்ற விக்கிப்பீடியர்களும் இனைந்து வழிகாட்ட ஏதுவாக இருக்கும். மிக்க நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:06, 3 திசம்பர் 2015 (UTC)Reply

Booradleyp1 பார்வதிஸ்ரீ இருவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.மிக்க மகிழ்ச்சி. உங்களின் நம்பிக்கையை நிச்சயமாக காப்பாற்றுவேன் என உறுதியளிக்கிறேன் --தியாகு கணேஷ் (பேச்சு) 14:34, 10 திசம்பர் 2015 (UTC)Reply

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

  விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:05, 25 திசம்பர் 2015 (UTC)Reply

ஆசிய மாதம் - நிறைவு

 

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.

குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:26, 13 சனவரி 2016 (UTC)Reply

கிங் எட்வர்டு பாயின்ட்

இக்கட்டுரையைத் துவக்கியதற்கு நன்றிகள் ! கட்டுரையாக்கம் சரியாக உள்ளது. விக்கி உள்ளிணைப்புகளைத் தருவதில் உங்களுக்குச் சிரமம் இருப்பதாக உணர்கிறேன். திறந்தநிலை உரல் (URL) முகவரிகளும் தவிர்க்கப்பட வேண்டும். இதில் நான் செய்துள்ள திருத்தங்களை உள்வாங்கிக்கொண்டால் விக்கியாக்கம் மேன்படும்.--மணியன் (பேச்சு) 04:29, 19 சனவரி 2016 (UTC)Reply

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், Thiyagu Ganesh!

 
தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

  • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.
தங்களது கீரமங்கலம் சிவன் சிலை கட்டுரையைக் கண்டேன். அக்கட்டுரையை கீரமங்கள் கோயிலின் கட்டுரையாக மாற்றி அதில் சிவன் சிலையின் சிறப்பினை தர வேண்டும். சிலைக்கென தனிக்கட்டுரை என்றால் இன்னும் அதிகமாக சிவன் சிலைப்பற்றிய செய்திகளையும் இணைக்க வேண்டியிருக்கும். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். உடனே சக விக்கிப்பீடியர்கள் பதிலளிப்பார்கள்.நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:07, 4 பெப்ரவரி 2016 (UTC)

விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 07:34, 3 ஏப்ரல் 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

 
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக   எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை   கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற   மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற   பாலாஜீ,   மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்

 
விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016

MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2016

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

 
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக   எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை   கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற   மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற   மாதவன்,   உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2017

 
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:48, 9 திசம்பர் 2016 (UTC)Reply

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:12, 30 ஏப்ரல் 2017 (UTC)

May 2017

  Hello, Thiyagu Ganesh, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO 12:57, 3 மே 2017 (UTC)Reply

அன்புள்ள AntanO அவர்களுக்கு வணக்கம். தங்களின் தகவலுக்கு நன்றி. சென்னையில் நடைபெறும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான தமிழ் விக்கி பயிற்சிக்காக இன்று ஒரு புதிய பயனர் கணக்கினை துவக்கினேன். அன்பு கூர்ந்து TNSE Thiyagu Ganesh PDK என்ற பயனர் கணக்கை நீக்கி விடவும்.எனது பழைய பயனர் கணக்கான Thiyagu Ganesh ல் தொடர விரும்புகிேறன் நன்றி - ThIyAGU

 Y ஆயிற்று--AntanO 13:20, 3 மே 2017 (UTC)Reply

தொடர் பங்களிப்பாளர் போட்டி: வழிகாட்டல்

தாவரவியல் கட்டுரையைச் சிறப்பாக விரிவாக்கி வருகின்றீர்கள், இன்னும் ஒரு சில நாட்களில் போட்டி விதிகளில் மாற்றங்கள் இடம்பெறலாம், அம்மாற்றத்தை இங்கு உங்கள்ளுக்கு கூறுகின்றேன். அதாவது, 26,000 பைட்டுக்கள் எனும் எல்லை 29,000 அல்லது அதற்கு அதிகமாக உயர்த்தப்படலாம். உங்கள் நலன் கருதி அக்கட்டுரையை முற்கூட்டியே 29,000 பைட்டு வரை அருள்கூர்ந்து விரிவாக்குங்கள்! போட்டியில் வெற்றிபெறவாழ்த்துகள்! உதவிகள் தேவைப்படின் தயங்காது கேளுங்கள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:00, 4 மே 2017 (UTC)Reply

கவனத்திற்கு

நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் மேம்பாடு கருதி இணைக்கப்பட்டிருக்கும் வார்ப்புக்களைக் கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடுங்கள். blogspot, facebook, wordpress போன்றவை ஒருசில இடங்கள் தவிர்த்து நம்பகமான சான்றாகக் கொள்ளப்படுவதில்லை. எனவே அவற்றை இணைப்பதைத் தவிருங்கள். நன்றி. --AntanO 02:55, 9 மே 2017 (UTC)Reply

இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். --AntanO 05:49, 9 மே 2017 (UTC)Reply

கண்டிப்பாக --AntanO இக்கட்டுரையை தொகுப்பதில் சில சிரமங்களை உணருகிறேன். தங்களின் உதவி தேவை. படக்கோப்பு வார்ப்புருவை பயன்படுத்தும் போது படிமம் பெரிய அளவில் தெரிய வாய்ப்பில்லையா.... ஒரே சீரான வரிசையில் அதே சமயம் பெரிய அளவில் (300px) தெரிய எவ்வாறு உள்ளீடுகளை இட வேண்டும்.--Thiyagu Ganesh (பேச்சு) 06:16, 9 மே 2017 (UTC)Reply

மாற்றியுள்ளேன் கவனியுங்கள். ஆனால் இவ்வடிவமைப்பு சிறப்பானதல்ல. காண்க: Image galleries --AntanO 06:26, 9 மே 2017 (UTC)Reply

படிமம் பெரிய அளவில்

-இவ்வாறு வரவேண்டுமா?--சி.செந்தி (உரையாடுக) 06:24, 9 மே 2017 (UTC)Reply

படக்கோப்பை மாற்றியமைத்தல் பற்றி உதவியதற்கு சி.செந்தி அவர்களுக்கு மிக்க நன்றி - ThIyAGU 11:08, 13 மே 2017 (UTC)Reply

தொடர்பங்களிப்பாளர் போட்டி:பாராட்டு

தாவரவியல் கட்டுரையை விரிவாக்கியமைக்கு வாழ்த்துகள்! தொடர்ந்து இது போல பல கட்டுரைகளையும் விரிவாக்கி போட்டியில் வெல்லுங்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:31, 13 மே 2017 (UTC)Reply

நன்றி ஸ்ரீஹீரன்.... நிச்சயமாக ! பணிகளை தொடர்கிறேன்.....ThIyAGU 11:04, 13 மே 2017 (UTC)Reply

மகிழ்ச்சி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:07, 13 மே 2017 (UTC)Reply

பரிந்துரை

வணக்கம். இந்த மாற்றத்தைக் கவனியுங்கள்: மேற்கோள் சுட்டுதல். இவ்விதம் சுட்டினால், மேலும் சிறப்பு! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:01, 16 மே 2017 (UTC)Reply

தொடர்பங்களிப்பாளர் போட்டி : பதில்

காற்று கட்டுரையை விரிவாக்கியிருப்பதையிட்டு மகிழ்ச்சி, ஆயினும் அதை இன்னொருவர் சமர்ப்பித்ததால் நீங்கள் அதனை அங்கு சமர்ப்பிக்க முடியாது. காற்று கட்டுரையினையும் சேர்த்து தற்போது 4 கட்டுரைகள விரிவாக்கியுள்ளீர்கள். இங்கு உங்கள் பிரச்சினை தொடர்பில் கூறியுள்ளேன். அது விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கின்றேன். இதுபோல தேவைப்படும் உதவிகளைத் தயங்காமல் கேளுங்கள். தொடர்ந்து போட்டியில் பங்குபற்றி சிறப்பாகக் கட்டுரைகளை விரிவாக்கி வெற்றிபெற வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:32, 17 மே 2017 (UTC)Reply

இக்கட்டுரை உங்கள் கணக்கிலேயே சேர்க்கப்படும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:34, 17 மே 2017 (UTC)Reply

வாழ்த்துக்கும், விளக்கத்திற்கும், உதவிக்கும் ஸ்ரீஹீரன் அவர்களுக்கு மிக்க நன்றி .-- ThIyAGU 10:39, 17 மே 2017 (UTC)Reply

இப்போது உங்கள் கணக்கில் கார்று கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் நீங்கள் முற்பதிவு செய்த கங்கை ஆறு கட்டுரையை ஏற்கனவே அஞ்சனன் முற்பதிவு செய்திருந்தார். ஆகையால், அருள்கூர்ந்து அக்கட்டுரையை விரிவாக்காதீர்கள். தொடர்ந்து சிறப்பாகக் கட்டுரைகளை விரிவாக்கி வெற்றிபெற வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:45, 18 மே 2017 (UTC)Reply

விக்கி பொதுவக படிமங்கள் குறித்து விளக்கம் தேவை

விக்கி பொதுவகத்தில் உள்ள ஒரு படிமத்தை நாம் பதிவிறக்கம் செய்து சிறிது மாற்றங்கள் செய்து (தமிழ் விளக்கங்கள் கொடுத்து) புதிதாக பொதுவகத்தில் பதிவேற்றம் செய்ய இயலுமா? அப்படிமத்தை நம்முடைய கட்டுரைகளில் பயன்படுத்த முடியுமா என்பது குறித்தும் பதிப்புரிமைச் சிக்கல்கள் ஏதேனும் இதில் இருக்கிறதா என்பது குறித்தும் விளக்கம் தேவை-- ThIyAGU 17:53, 18 மே 2017 (UTC)

இயலும். மீண்டும் பதிவேற்றும் போது மூலப் படிமத்தின் இணைப்பை விவரிப்பில் குறிப்பிட Template:Derived from வார்ப்புருவைப் பயன்படுத்துங்கள். மூலப் படிமத்தின் அதே உரிமத்தில் பதிவேற்ற வேண்டும். மேலும் விளக்கங்களுக்கு ஒத்தாசைப் பக்கத்தில் உதவி கேளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 08:31, 19 மே 2017 (UTC)Reply

விளக்கம் மற்றும் மேலதிக ஆலோசனைகள் வழங்கிய இரவி அவர்களுக்கு நன்றி -- ThIyAGU 09:26, 19 மே 2017 (UTC)Reply

பதக்கம்

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
ஒவ்வொரு நாளும் சளைக்காமல் பல கட்டுரைகளை விரிவாக்கி வருகிறீர்கள். அண்மைய மாற்றங்களில் உங்களைப் போன்றோரின் செயற்பாடுகளைக் காண்பதே எனக்கு உற்சாகமாக உள்ளது. கட்டுரைகளை விரிவாக்குவதுடன் விக்கி வழமைகளையும் பண்புகளையும் உள்வாங்கி மிளிர்கிறீர்கள். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 08:33, 19 மே 2017 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

சிறந்த உழைப்பாளர் பதக்கம் வழங்கிப் பாராட்டியமைக்கு --இரவி அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள். இது போன்ற பதக்கங்களும்,நம் விக்கிப்பீடிய நண்பர்களின் ஆலோசனை வழிகாட்டல்களும் என்னை மேன்மேலும் உற்சாகத்துடன் உழைத்திட தூண்டுகின்றன. தங்களைப் போன்றோரின் நம்பிக்கையைப் பாதுகாத்து இன்னும் சிறப்பாக செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன். அன்புடன் -- ThIyAGU 09:24, 19 மே 2017 (UTC)

  விருப்பம் வாழ்த்துகள்!--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:19, 19 மே 2017 (UTC)Reply

நன்றி ஸ்ரீகர்சன் --- ThIyAGU 09:45, 19 மே 2017 (UTC)Reply

பாராட்டுகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:08, 19 மே 2017 (UTC)Reply
வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:50, 20 மே 2017 (UTC)Reply

கட்டுரை முற்பதிவு

ஒரே நேரத்தில் போட்டிகாக 12 கட்டுரைகளை மட்டுமே முற்பதிவு செய்யலாம் என்பதால் நீங்கள் மேலதிகமாக முற்பதிவு செய்துள்ள கட்டுரைகளை நீக்கியுள்ளேன். முற்பதிவு செய்த கட்டுரைகளை விரிவாக்கினால், அவற்றை அங்கு நீக்கிவிட்டு வேறு ஒரு கட்டுரையை முற்பதிவு செய்யலாம்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:32, 20 மே 2017 (UTC) தகவலுக்கு நன்றி திரு.--ஸ்ரீஹீரன்--- ThIyAGU 09:04, 21 மே 2017 (UTC)Reply

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:12, 21 மே 2017 (UTC)Reply

மிகவும் உதவிகரமான குறிப்பு. நன்றி திரு.--ஸ்ரீஹீரன் --- ThIyAGU 09:05, 21 மே 2017 (UTC)Reply

ஐயகோ! யான் திரு. கிடையாது. 15 வயது தான் ஆகின்றது அண்ணா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:27, 21 மே 2017 (UTC)Reply
ஓ.... அப்படியா..எனக்கு வியப்பாக இருக்கிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்களே அது போல உங்களின் செயல்பாடுகள் உள்ளது! மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி --ஸ்ரீஹீரன் !! :-) அந்தத் திரு. உங்கள் வயதுக்கானது அல்ல.. அனுபவத்திற்கானது... வாழ்க வளமுடன்.. நலம் அன்புடன்--- ThIyAGU 11:00, 21 மே 2017 (UTC)

மரம் (மூலப்பொருள்) கட்டுரையிற்கு இப்பக்கத்தை சான்றாகக் கொடுத்துள்ளீர்கள். நன்று. ஆனால், அங்கிருந்து ஏதாவது உள்ளடக்கத்தை (வசனங்களை) அப்படியே Copy செய்தால் அவற்றை நீக்கிவிடுங்கள். பதிப்புரிமை மீறல் கூடாது. பதில் வேண்டும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:03, 21 மே 2017 (UTC)Reply

மரம் (மூலப்பொருள்) கட்டுரையில் தமிழ்நாடு அரசுப்பாடநூலில் இருந்து ஒரு சில வரிகளை சேர்த்திருந்தேன். தற்பொழுது அவற்றில் பலவற்றை நீக்கியும் சிலவற்றை விக்கிநடைக்கேற்ப மாற்றியும் அமைத்துள்ளேன். மாற்றத்தை சரிபார்த்து மேலும் மாற்றவேண்டுமெனில் ஆலோசனைகள் கூறவும். நன்றி--- ThIyAGU 11:51, 21 மே 2017 (UTC)

தியாகு கணேஷ்! நீங்கள் சமர்ப்பித்த பாலூட்டி கட்டுரை கட்டுரைப்போட்டிகள் பட்டியலில் இல்லையே.--கலை (பேச்சு) 19:28, 30 மே 2017 (UTC)Reply

அறிவியல் துணைப்பிரிவில் 79 ஆவது தலைப்பாக பாலூட்டி என்ற கட்டுரை இருக்கிறது சகோதரி கலை--- ThIyAGU 19:34, 30 மே 2017 (UTC)Reply

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:00, 31 மே 2017 (UTC)Reply