உள்ளடக்கத்துக்குச் செல்

நிலா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நிலா:
நிலா
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) பூமியின் துணைக் கோள்; திங்கள்; மதி, நிலவு, சந்திரன், அம்புலி

  1. நிலா (பிங்கல நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

==

பயன்பாடு

==

(இலக்கியப் பயன்பாடு)

  • அம்புலி காட்டி அமுதுஊட்டினாள் அன்னை
  • அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
    எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
    இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
    வென்றெறி முரசின் வேந்தர்எம்
    குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.(புறநானூறு, 112 - பாரிமகளிர் பாட்டு)
  • மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின்
    பலர்காணத் தோன்றல் மதி (குறள் 1119)திருக்குறள்
  • மாடமிசை யோங்கு நிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்(அருட்பா, vi, தலைவி வருந்தல்,10).



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

நிலா - நிலவு
நிலாச்சோறு, நிலாமுற்றம், நிலாக்கல், நிலாநாள்
வெண்ணிலா, முழுநிலா, பிறைநிலா, நிறைநிலா
கதிரவன், வானம், கோள்
  1. நிலாவில் ஆக்ஸிசன் கிடையாது
  2. சந்திரன் அம்மாவாசை அன்று தெரியாது
  3. நிலா நான்கு நிலைகளில் தோன்றும்
  4. முழு நிலா
  5. வளர் பிறை
  6. தேய் பிறை
  7. அம்மாவாசை
  8. நிலாவில் தண்ணீர் கிடையாது
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலா&oldid=1909476" இலிருந்து மீள்விக்கப்பட்டது