papillon
Appearance
papillon - ஒலிப்பு: பாப்பியோன் , /pa.pi.jɔ̃/
பொருள்
papillon (ஆண்பால்) (பெயர்ச்சொல்)
- பட்டாம்பூச்சி
- மிகு திறமையாளர், பல திறம் கொண்டவர், அடிக்கடி புதிய கோணங்களில் (திறமை நோக்கில்) வளர்ந்துகொண்டிருப்பவர்.
- பட்டாம்பூச்சி போன்ற வடிவுடையதாகக் கருதப்படுவது, முடிச்சு, மரை
- இறக்கை இருப்பது போல உள்ள மரை (கையில் பிடித்து முறுக்கித் திருகுவதற்கு ஏற்றதாய் இருப்பது)
- நீச்சலில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளையும் தூக்கி நீரைத் தள்ளி உந்தும் நீச்சல் வகை.
- மடித்து வைத்து இருக்கும் துண்டறிக்கை (இறக்கை போல பிரித்துப் படிப்பது)
விளக்கம்
- -
பயன்பாடு
- Gracieux entre tous, le papillon a toujours su émerveiller les hommes[1]. (ஒயிலழகு மிக்கவை யாவற்றினும் சிறந்ததான பட்டாம்பூச்சி (papillon) மாந்தர்களை எப்பொழுதும் வியப்பில் ஆழ்த்துகின்றது.)
தொடர்பான சொற்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2010-04-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-09-08.
papillon
[தொகு]
papillon - ஒலிப்பு: பாப்பியோன் )
பொருள்
papillon (பெயர்ச்சொல்)
- பப்பியோன் நாய், ஒரு வகை நாய்
விளக்கம்
- இலத்தீன் சொல்லாகிய papilio ("பட்டாம்பூச்சி, அல்லது அந்துப்பூச்சி") என்பதில் இருந்து பிரான்சிய மொழிச் சொல்லாகிய papillon (“பட்டாம்பூச்சி”) என்பது உருவாகி, அதிலிருந்து இந்த ஆங்கிலச்சொல் பிறந்தது.
- இத்தாலிய ஓவியர் திசியானோ விச்செல்லி (Tiziano Vicelli) முதலானோர் படங்களில் இருந்து பப்பியோன் நாய் போன்ற சிறு நாய்கள் 1500களில் இருந்தே இருந்து வந்துள்ளது தெரிகின்றது
பயன்பாடு
- -
- -