1460கள்
Appearance
1460கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1460ஆம் ஆண்டு துவங்கி 1469-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
1460
- சூன் 26 – ரோசாப்பூப் போர்கள்: வாரிக் ஆட்சியாளர் ரிச்சார்ட் நெவில், நான்காம் எட்வர்ட் தமது படையினருடன் இங்கிலாந்து வந்து, இலண்டனை சென்றடைந்தனர்.
- சூலை 19 – ரோசாப்பூப் போர்கள்: இலண்டன் கோபுரம் யோர்க்கினரிடம் சரணடைந்தது.[1]
- சூலை 10 – ரோசாப்பூப் போர்கள்: நோர்தாம்ப்டன் சண்டையில் ரிச்சார்ட் நெவில், நான்காம் எட்வர்டு இலங்காஸ்டர் இராணுவத்தைத் தோற்கடித்து, இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரை சிறைப்பிடித்தனர்.[2]
- ஆகத்து 3 – இசுக்கொட்லாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் அவரது சொந்த பீரங்கி ஒன்று வெடித்ததில் கொல்லப்பட்டார்.
- தக்காணப் பீடபூமியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.
1461
- மார்ச் 4 – யோர்க் இளவரசர் எட்வர்டு இலண்டனைக் கைப்பற்றி இங்கிலாந்தின் அரசராகத் தன்னை அறிவித்தார்.
- மார்ச் 5 – ரோசாப்பூப் போர்கள்: யோர்க் இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் நான்காம் ஹென்றியை அரசுப் பதவியில் இருந்து அகற்றினார்.
- சூலை 10 – இசுட்டீவன் தொமசேவிச் பொசுனியாவின் கடைசி அரசராகப் பதவியேற்றார்.
- சூன் 28 – யோர்க் இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் அரசராக நான்காம் எடவர்டு என்ற பெயரில் முடி சூடினார்.
- சூலை 22 – பிரான்சின் அரசனாக பதினோராம் லூயி பதவியேற்றார்.
- ஆகஸ்டு 7 – மிங் வம்ச சீனத் தளபதி காவோ சின் செங்டொங் பேரரசருக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
- ஆகஸ்டு 15 – 21-நாள் முற்றுகையின் பின்னர் திரெபிசோந்து பேரரசு இரண்டாம் முகமதுவின் உதுமானியப் பேரரசிடம் வீழ்ந்தது.
- நவம்பர் 26 – மத்திய இத்தாலியின் லா'க்கீலா நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- பொசுனியா எர்செகோவினாவின் தலைநகரம் சாரயேவோ அமைக்கப்பட்டது.
1462
- மார்ச் 27 – உருசியப் பேரரசர் இரண்டாம் வசீலி இறந்தார். அவரது மகன் மூன்றாம் இவான் புதிய பேரரசராக முடிசூடினார்.
- சூன் 17 – மூன்றாம் விலாத் இரண்டாம் முகமதைக் கொலை செய்ய முயன்றான். முகமது வலாச்சியாவில் இருந்து வெளியேறினார்.
- செப்டம்பர் – இரண்டாம் முகமது மைத்திலீன் நகரைக் கைப்பற்றினார்.
- யூதர்கள் செருமனியின் மைன்சு நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
- போர்த்துகல் கேப் வர்டி தீவுகளில் கினியில் இருந்து அடிமைகளைக் குடியேற்ற ஆரம்பித்தது.
- ரோசாப்பூப் போர்கள்: அயர்லாந்தில் பில்ட்டவுன் சமர் இடம்பெற்றது.
- தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
1463
- மே – பொசுனியா இராச்சியம் உதுமானியரிடம் வீழ்ந்தது.
- மே 28 – இரண்டாம் முகம்மதுவின் மதச் சுதந்திரம் குறித்த உறுதிமொழி உதுமானியப் பேரரசு முழுவதும் செயல்படுத்தப்பட்டது.
- அக்டோபர் 8 – இங்கிலாந்தில் லான்காஸ்டர் மாளிகை மீதான ஆதரவை பிரான்சு விலக்கிக் கொண்டது.[3]
- முகம்மது ரும்ஃபா கனோவில் தனது ஆட்சியை ஆரம்பித்தார்.
- கஜபதி பேரரசு சந்திரகிரியைக் கைப்பற்றியது.
1464
- மே 1 – இங்கிலாந்து மன்னர் நான்காம் எட்வர்டு, எலிசபெத் வுட்வில் என்பவரை இரகசியமாகத் திருமனம் புரிந்து கொண்டார். அடுத்த ஐந்து மாதங்களுக்கு அதனை வெளிப்படுத்தவில்லை.[3]
- சூன் 11 – இங்கிலாந்து, இசுக்காட்லாந்து இராச்சியங்களுக்கிடையே 15-ஆண்டு கால அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.[3]
- சூன் 18 – திருத்தந்தை இரன்டாம் பயசு சிலுவைப் போரில் பங்குபற்றுவதற்காக அன்கோனாவிற்குப் புறப்பட்டார்.
- சூன் 23 – டென்மார்க், நோர்வே மன்னர் முதலாம் கிறித்தியான் சுவீடன் ஆட்சியாளர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- ஆகத்து 9 – சுவீடன் மன்னராக எட்டாம் சார்லசு மீண்டும் முடிசூடினார்.
- ஆகத்து 30 – இரண்டாம் பவுல் 211-ஆவது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- செகான் லகாடெயூச் பிரெட்டன்-பிரெஞ்சு-இலத்தீன் அகரமுதலியை எழுதினார். இதுவே உலகின் முதலாவது பிரெஞ்சு, பிரெட்டன் அகரமுதலியாகும். இது 1499 இல் வெளியிடப்பட்டது.
1465
- சனவரி 24 – கிலியா நகரம் மல்தோவியாவின் இசுடீவன் பேரரசரால் கைப்பற்றப்பட்டது.
- சனவரி 30 – சுவீடனின் எட்டாம் சார்லசு மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். ஆயர் கெடில் வாசா என்பவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
- சூலை 24 – யோர்க் படைகளால் இங்கிலாந்தின் முன்னாள் மன்னர் ஆறாம் என்றி கைது செய்யப்பட்டு, இலண்டன் கோபுரத்தில் சிறை வைக்கப்பட்டார். அரசி மார்கரெட், இளவரசர் எட்வர்ட் பிரான்சுக்குத் தப்பி ஓடினர்.
- மொரோக்கோ கிளர்ச்சியை அடுத்து, மரானிது ஆட்சியாளர்கள் வெளியேறினர். பெருந்தொகையான யூதர்கள் கொல்லப்பட்டனர்.
- மத்திய, தெற்கு மிங் சீனாவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, அங்கு நூற்றுக்கணக்கான புதிய பாலங்கள் கட்டப்பட்டன.
- விஜயநகரப் பேரரசர் மல்லிகார்ஜுன ராயன் பதவியில் இருந்து அகற்ரப்பட்டான். இரண்டாம் விருபக்ஷ ராயன் ஆட்சியைக் கைப்பற்றினான்.
1466
- சார்சியா இராச்சியம் கலைந்து கார்ட்லி, காக்கெத்தி, இமெரெத்தி, சாம்சுத்கி-சாத்தபாகோ எனப் பல நாடுகளாகத் துண்டாடப்பட்டது.
- இடாய்ச்சு மொழியில் அச்சிடப்பட்ட முதலாவது விவிலிய நூல் 'மெண்டெலின் விவிலியம்' வெளிவந்தது.
- பிரான்சின் பதினோராம் லூயி மன்னர் பட்டு நெசவுத் தொழிநுட்பத்தை லியோனில் அறிமுகப்படுத்தினார்.[4]
- தண்ணாடிகளை விற்பனை செய்யும் முதலாவது வணிக நிறுவனம் ஸ்திராஸ்பூர்க்கில் திறக்கப்பட்டது.
1467
- சூலை 25 – மொலினெல்லா என்ற இடத்தில் நடந்த சமரில் முதல் தடவையாக சுடுகலன்கள் இத்தாலியில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.
- கனகசூரிய சிங்கையாரியனின் யாழ்ப்பாண மீட்புப் போர்: யாழ்ப்பாண அரசு கோட்டை இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்றது.
- இரண்டாம் மெகமுது தலைமையிலான உதுமானியப் படைகள் அல்பேனியா மீது நடத்திய தாக்குதல் மூன்றாவது தடவையாகவும் தோல்வியில் முடிந்தது.
- சிலோவாக்கியாவில் முதலாவது பல்கலைக்கழகம் இசுத்துரோபொலித்தானா பல்கலைக்கழகம் பிராத்திஸ்லாவாவில் அமைக்கப்பட்டது.
1468
- சூன் 30 – கேத்தரின் கொர்னாரோ சைப்பிரசின் இரண்டாம் யேம்சு மன்னரைத் திருமணம் செய்தார். வெனிசு சைப்பிரசை ஆக்கிரமிக்கும் முயற்சி ஆரம்பமானது.
- ஆகத்து 26 – எத்தியோப்பியாவின் பேரரசராக பைடா மரியாம் முடிசூடினார்,
- ஏழு ஆன்டுகள் முற்றுகையின் பின்னர் கார்லெக் அரண்மனை இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டிடம் வீழ்ந்தது.
- சொங்காய் பேரரசர் சொன்னி அலி திம்பக்துவைக் கைப்பற்றினார்.
1469
- அக்டோபர் 19 - அரகோன் (Aragon) நாட்டு இளவரசன் பேர்டினண்ட் காஸ்டில் (Castille) நாட்டின் இளவரசி இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516இல் ஸ்பெயின் நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது.
- பேரிசியா மற்றும் ஆப்கானிஸ்தான் மன்னன் அபு சாயிட் என்பவனை உசுன் ஹசன் என்பவன் போரில் வென்றான்.
- ஸ்கொட்லாந்து மன்னன் மூன்றாம் ஜேம்ஸ் டென்மார்க்கிடம் இருந்து ஓர்க்னி மற்றும் ஷெட்லாந்து தீவுகளைக் கைப்பற்றினான்.
- "சேனா சம்மத விக்கிரமபாகு" என்பவன் கண்டி இராச்சியத்தின் அரசன் ஆனான்.
பிறப்புகள்
[தொகு]1463
- இரண்டாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1513)
1464
- பீபி நானகி, குரு நானக்கின் மூத்த சகோதரி (இ. 1518)
1465
- பெப்ரவரி 6 – சிப்பியோன் டெல் பெரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1526)
- லோபெஸ் டி செக்குயிரா, 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மாலுமி. போர்த்துகேய இந்தியாவின் கவர்னராகச் சேவை செய்தவர். (இ. 1530)
1466
- அக்டோபர் 28 – எராஸ்மஸ், இடச்சு மெய்யியலாளர் (இ. 1536)
- பாய் பாலா, குருநானக்கின் வாழ்நாள் தோழர் (இ. 1544)
1467
- பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால், போர்த்துகேய படைத்துறை ஆணைத்தலைவர், கடலோடி, தேடலாய்வாளர் (இ. 1520)
1468
1469
- ஏப்ரல் 15 - குரு நானக் தேவ், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1539)
- வாஸ்கோ ட காமா, (இ. 1524)
இறப்புகள்
[தொகு]1461
- ஏப்ரல் 17 - ஜியார்ஜ் வான் பியூயர்பக், ஆத்திரிய வானியலாளரும் கணிதவியலாளர் மற்றும் கருவி உருவாக்குநர் (பி. 1423)
1464
1466
- பெப்ரவரி 23 – கிரீசவர்த்தனன், 9-வது மயாபாகித்து பேரரசர்
1468
- பெப்ரவரி 3 – யோகான்னசு கூட்டன்பர்கு, மாற்றக்கூடிய எழுத்துக்களைக் கொண்ட அச்சகத்தை கண்டுபிடித்தவர் (பி. 1398)[6]
- ராணா கும்பா, முன்னாள் மேவார் இராச்சியத்தின் ஆட்சியாளர்
1469
- பெப்ரவரி 17 - அபு சயித் மிர்சா, தைமூரியப் பேரரசின் சுல்தான் (பி. 1424)
- நிக்கோலோ டா கொன்ட்டி, வெனிசிய வணிகர் (பி. 1395)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bennett, Vanora. "London and the Wars of the Roses". Archived from the original on 2013-09-14. பார்க்கப்பட்ட நாள் 2013-08-16.
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 183–185. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ 3.0 3.1 3.2 Palmer, Alan; Palmer, Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 128–131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Burke, James (1978). Connections. London: Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-24827-9.
- ↑ "Paul III | pope". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
- ↑ Philip B. Meggs (9 September 1998). A History of Graphic Design. Wiley. p. 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-29198-5.