11-ஆம் நூற்றாண்டு
Appearance
ஆயிரமாண்டுகள்: | 2-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 10-ஆம் நூற்றாண்டு - 11-ஆம் நூற்றாண்டு - 12-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1000கள் 1010கள் 1020கள் 1030கள் 1040கள் 1050கள் 1060கள் 1070கள் 1080கள் 1090கள் |
11ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 1001 தொடக்கம் கி.பி. 1100 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இது ஐரோப்பாவில் உயர் மத்திய காலப்பகுதி என் அழைக்கப்படுகிறது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- 1001, கசுனியை சேர்ந்த மகமூத் என்ற இசுலாமியர் தலைவர் வட இந்தியா நோக்கி தொடர்படையெடுத்தார். இது 1027இல் சோமநாத்தின் அழிவோடு முற்றுப்பெற்றது.
- 1025: அரசர் இராசேந்திர சோழன் தனது தலைநகரத்தினை தஞ்சாவூரில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு நகர்த்தினார்.
- 1054, கிழக்கு-மேற்கு பெரும் முரண்பாடு தோன்றி கத்தோலிக்க திருச்சபையும் கிழக்கு மரபு வழாத்திருச்சபையும் பிரிந்தன. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல பத்தாண்டுகளாகக் காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும்.
- 1054: ஓர் பெரிய மீயொளிர் விண்மீன் வெடிப்பு காணப்படுகிறது. இதுவே தற்போதைய நண்டு வடிவ நெபுலா ஆக மாறியது.
- 1065: செல்யூக் பேரரசு சியார்சியா மீது தனது முதல் படையெடுப்பினை நடத்தியது.
- 1065: கலீசியா மற்றும் போர்த்துகல் நாடுகளிக்கு விடுதலைக் கிடைக்கின்றது.
- 1068: வீரராஜேந்திர சோழன் தனது படைகளை மலேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கு அனுப்புகிறார்.
- 1068: செல்யூக் பேரரசு சியார்சியாவினை இரண்டாம் முறையாக அழித்தது.
- 1091: நோர்மானியர் மால்ட்டா மற்றும் அதன் சுற்றுப்புறத் தீவுகளையும் கைப்பற்றினர்.
- 1096: ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் இங்கிலாந்தில் முதன் முதலாக சொற்பொழிவுகளை நடத்தியது.
- 1098: பிங்கெனின் ஹில்டெகார்ட், எழுத்தாளர், இறை இசையமைப்பாளர், மெய்யியலாளர், பிறந்தார்.
- 1099, முதல் சிலுவைப்போர் யெருசலேம் நகரை கைப்பற்றியது.
- மியன்மார் மன்னன் ஆனவர்தன் இலங்கைக்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை தேரவாத பௌத்ததுக்கு மாற்றினான்.
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- இப்னு சீனா பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார்
- அல் கசாலி, இசுலாமிய இறையியலாளர், நீதிச் சபையினர், மெய்யியலாளர், அண்டவியலாளர், மற்றும் உளவியலாளர்
- பில்ஹானா, a காஷ்மீரி மொழி கவிஞர்
- ஏழாம் கிரகோரி, திருத்தந்தை
- லீப் எரிக்சன், வட அமெரிக்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர்.
- மிலரேபர், திபெத் நாட்டு யோகி, கவிஞர்
- முரசாக்கி சிக்கிபு, சப்பானிய பெண் நாவலாசிரியர் புலவர்
- ஓமர் கய்யாம், பாரசீகக் கவிஞர், கணிதவியலாளர், மெய்யியலாளர், மற்றும் வானியலாளர்
- பீட்டர் தமியான், திருச்சபையின் மறைவல்லுநர்
- முதலாம் இராஜராஜ சோழன், தென்னிந்தியா மற்றும் இலங்கையினை ஆன்டவர்
- இராசேந்திர சோழன், தென்னிந்தியா, வட இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இலங்கையினை ஆன்டவர்
- இராஜாதிராஜ சோழன், சோழ அரசர்
- இரண்டாம் இராஜேந்திர சோழன், ச்
- இராமானுசர், இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கியவர்
- இரண்டாம் அர்பன், திருத்தந்தை
- வீரராஜேந்திர சோழன், திருத்தந்தை
- இங்கிலாந்தின் முதலாம் வில்லியம், இங்கிலாந்து அரசர்
கட்டப்பட்ட கட்டிடங்கள்
[தொகு]- தஞ்சைப் பெருவுடையார் பிரகதீசுவரர் கோயில் 1010 ஆம் ஆண்டில் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டது.
- கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
- வெஸ்ட்மின்ஸ்டர் மடம் இலண்டனில் 1065 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
- இலண்டன் கோபுரம் 1078 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது .
- புனித மாற்கு பசிலிக்கா வெனிசு, இத்தாலியில் 1063 ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டது.
- சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில் கட்டிடப்பணிகள் ஸ்பெயினில் 1075 ஆம் ஆண்டில் துவங்கியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Soekmono, R, Drs., Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed. Penerbit Kanisius, Yogyakarta, 1973, 5th reprint edition in 1988 p.52
- ↑ "index". www.muslimphilosophy.com.
- ↑ Soekmono, R, Drs., Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed. Penerbit Kanisius, Yogyakarta, 1973, 5th reprint edition in 1988 p.56