உள்ளடக்கத்துக்குச் செல்

1-ஆம் நூற்றாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(1ம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆயிரமாண்டுகள்: 1-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்: 1-ஆம் நூற்றாண்டு கிமு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 0கள் 10கள் 20கள் 30கள் 40கள்
50கள் 60கள் 70கள் 80கள் 90கள்

கிபி 1ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிரிகோரியன் நாட்காட்டியின் படி கிபி 1 தொடக்கம் கிபி 100 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.

இக்காலத்தில் ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மற்றும் அண்மித்த கிழக்கு நாடுகள் ரோமப் பேரரசின் அதிகரித்த கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. ரோமப் பேரரசின் எல்லைகள் விரிய ஆரம்பித்தன. இதில் முக்கியமாக 43ம் ஆண்டில் குளோடியஸ் மன்னனின் கீழ் பிரித்தானியா கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆகுஸ்டஸ் அவனது நீண்ட கால அரசாட்சியில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினான். இந்நூற்றாண்டின் கடைசியில் 68 இல் நீரோ மன்னனின் இறப்பிற்குப் பின்னர் "ஜூலியோ-குளோடிய வம்சம்" முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் சிறிது கால உள்நாட்டுப் போரின் பின்னர் வெஸ்பாசியான் மன்னன் மீண்டும் நாட்டில் திர்ரத் தன்மையை ஏற்படுத்தினான்.

சீனா ஹான் வம்சத்தினால் தொடர்ந்து ஆளப்பட்டு வந்தது. இடையில் 14 ஆண்டுகள் (8-23) சின் வம்சம் நாட்டை ஆண்டது. 23 இல் மீண்டும் ஹான் அரசாள ஆரம்பித்தனர்.

கிறிஸ்தவம்

[தொகு]

புதிய ஏற்பாட்டின் படி, டிபேரியசின் ஆட்சியில் இயேசு கிறிஸ்து புதிய கிறிஸ்தவ மதத்தை ஆரம்பித்தார்.[1][2][3][4][5][6][7] அடுத்த சில பத்தாண்டுகளுக்கு இவரின் சீடர்கள் நாட்டின் பல இடங்களுக்கும் இயேசுவின் செய்திகளை எடுத்துச் சென்று ரோம் நகரிலும் அறிமுகப்படுத்தினர். இவர்கள் ரோம மன்னரால் பலவிதமாகத் துன்புறுத்தப்பட்டனர் (64). இது பல நூற்றண்டுகளுக்கு இறுதியில் முதலாம் கொன்ஸ்டண்டீன் மன்னனால் அதிகாரபூர்வ சமயமாக ஏற்றுக் கொள்ளப்படும் வரையில் தொடர்ந்தது.

நிகழ்வுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. J. Dwight Pentecost, The Words and Works of Jesus Christ: A Study of the Life of Christ (Zondervan, 1981) pages 577–578.
  2. Andreas J. Köstenberger, John (Baker Academic, 2004), page 110.
  3. Eerdmans Dictionary of the Bible 2000 Amsterdam University Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-5356-503-5 page 249
  4. Paul L. Maier "The Date of the Nativity and Chronology of Jesus" in Jerry Vardaman and Edwin M. Yamauchi, Chronos, kairos, Christos: nativity and chronological studies (1989) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-931464-50-1, pp. 113–129
  5. The Riddles of the Fourth Gospel: An Introduction to John by Paul N. Anderson 2011 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8006-0427-X pages 200
  6. Herod the Great by Jerry Knoblet 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7618-3087-1 page 183-184
  7. Jesus in Johannine tradition by Robert Tomson Fortna, Tom Thatcher 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-664-22219-2 page 77
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-ஆம்_நூற்றாண்டு&oldid=3382263" இலிருந்து மீள்விக்கப்பட்டது