ஹேவ்லாக் தீவு
உள்ளூர் பெயர்: Havelock Island | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 11°58′20″N 92°59′20″E / 11.97222°N 92.98889°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
பரப்பளவு | 113.93 km2 (43.99 sq mi) |
நிர்வாகம் | |
இந்தியா | |
ஒன்றிய பகுதி | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
மக்கள் | |
மக்கள்தொகை | 5354 (2011) |
இனக்குழுக்கள் | வங்காளி |
ஹேவ்லாக் தீவு (அரசு ஏற்புப் பெற்ற பெயர்: சுயராச்சியத் தீவு) (Havelock Island, இந்தி: हैवलॉक द्वीप,பஞ்சாப்பி: ਹੈਵਾਲੌਕ ਦੀਪ, மலையாளம்: ഹെയ്വ്ലോക് ദ്വീപുകള്, வங்காளி: হেৱলাক দ্ৱীপ), என்பது அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த 113.93 கி.மீ2, பரப்புடைய ஒரு பெரிய தீவு ஆகும். இது பெரிய அந்தமான் தீவுச்சங்கிலியைச் சேர்ந்த ஒரு தீவு ஆகும். இத்தீவு போர்ட்பிளேரில் இருந்து 57 கி.மீ வடகிழக்கில் உள்ளது. இத்தீவின் மக்கள் தொகை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,354 ஆகும்.[1]
விளக்கம்
[தொகு]இந்தியாவில் பணிபுரிந்த பிரித்தானிய ஜெனரலான ஹேவ்லாக் என்பவரின் நினைவாக ஹேவ்லாக் தீவு என இத்தீவுக்குப் பெயரிடப்பட்டது. இத்தீவின் தற்போதைய மக்களில் பெரும்பாலானவர்கள் இங்கு குடியேற்றப்பட்ட வங்கதேச அகதிகளாவர். இம்மக்கள் 1971 இந்திய பாக்கித்தான் போர்க்காலத்தில் அகதிகளாக வந்தவர்களாவர். இத்தீவில் ஐந்து கிராமங்கள் உள்ளன. அவை கோவிந்தா நகர். விஜய் நகர். ஷியாம் நகர், கிரிஷ்ணா நகர், இராதா நகர் ஆகும். இந்த பகுதி அந்தமான் நிக்கோபார் தீவு ஒன்றிய பகுதியின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். இத்தீவில் சுற்றுலாதுறையை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேற்கு கடற்கரையில் கடற்கரை எண். 7 ஐ கொண்டுள்ள இந்த இராதா நகர் கடற்கரை ஹேவ்லாக் தீவின் புகழ்வாய்ந்த கடற்கரைகளில் ஒன்றாகும். இது ஆசியாவின் சிறந்த கடற்கரை என்று டைம் இதழ் 2004 ஆண்டு குறிப்பிட்டது.[2] இத்தீவின் பிற குறிப்பிடத்தக்க கடற்கரைகள் வடகிழக்கில் உள்ள யானை கடற்கரை, மற்றும் விஜயநகரக் கடற்கரை, காலாபத்தர் கடற்கரை போன்றவை ஆகும்.
நீலக்கொடி கடற்கரை
[தொகு]நெதர்லாந்து நாட்டின் பன்னாட்டு சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளையானது இக்கடற்கரைக்கு நீலக்கொடி கடற்கரை என்ற அங்கீகாரம் வழங்கியுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-04-24.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ India’s 12 Blue Flag beaches