உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெப்தலைட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெப்தலைட்டு பேரரசு
408–670
கி பி 500-இல் ஹெப்தலைட்டுகள் பேரரசு (பச்சை நிறம்)
கி பி 500-இல் ஹெப்தலைட்டுகள் பேரரசு (பச்சை நிறம்)
தலைநகரம்கண்டசு
(பாக்திரியா
சியால்கோட்
பேசப்படும் மொழிகள்பாக்திரிய மொழி
காந்தாரி மொழி
சோக்டியன் மொழி
கொராஸ்மியன் மொழி
துருக்கிய மொழி
சகர் மொழி
சமஸ்கிருதம்
சமயம்
பௌத்தம்[1]
மாணி சமயம்
நெஸ்டோரியம்
சரத்துஸ்திர சமயம்[2]
இந்து சமயம்
தெக்ஜின் 
• 430/440 – ≈490
கிங்கிலா
• 490/500 – 515
தோரமனா
• 515–528
மிகிராகுலன்
வரலாற்று சகாப்தம்பிந்தைய தொன்மைக் காலம்
• தொடக்கம்
408
• முடிவு
670
முந்தையது
பின்னையது
[[குசான் பேரரசு]]
[[சாசானியப் பேரரசு]]
[[குப்தப் பேரரசு]]
கிடாரைட்டுகள்
[[காபூல் சாகி]]
கோக்துருக்கியர்கள்
ஜின்பில்கள்
சகானியர்கள்
தற்போதைய பகுதிகள் ஆப்கானித்தான்
 சீனா
 இந்தியா
 கசக்கஸ்தான்
 கிர்கிசுத்தான்
 பாக்கித்தான்
 தஜிகிஸ்தான்
 துருக்மெனிஸ்தான்
 உஸ்பெகிஸ்தான்[3]

ஹெப்தலைட்டுகள் (Hephthalites or Ephthalites or Ye-tai) என்பவர்கள் நடு ஆசியாவின் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி மற்றும் வேளாண் இன மக்களின் கூட்டுக் குழுவினர் ஆவர்.[4] கி பி ஐந்தாம் நூற்றாண்டில் புதிய புல்வெளிகளைத் தேடி நடு ஆசியாவின் மேற்கில் கிழக்கு ஐரோப்பாவிலும், கிழக்கு ஆசியாவிலும் தங்கள் நிலப்பரப்பை விரிவு படுத்தினார்கள்.[5] ஹெப்தலைட்டு மக்கள் வெள்ளை ஹூணர்களுடன் தொடர்புடையவர்களாக கருதப்படுகிறது.

ஹெப்தலைட்டு பேரரசின் பகுதிகள்

[தொகு]

ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உச்ச கட்டத்தில் இருந்த ஹெப்தலைட்டுகளின் பேரரசு தற்கால ஆப்கானித்தான், துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், கசக்ஸ்தான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனாவின் சிங்ஜியாங் பகுதிகளை கொண்டிருந்தது.[6][7]

பெயர் இலக்கணம்

[தொகு]

ஹெப்தலைட்டு என்பது பண்டைய கிரேக்கச் சொல்லாகும்.

பண்டைய இந்தியாவில் ஹெப்தலைட்டுகளைப் பற்றிய குறிப்புகள் இல்லை எனினும் ஹெப்தலைட்டுக்கள் ஹூணர்கள் அல்லது துருக்கர்களைக் குறிப்பதாகும்.[8] ஹெப்தலைட்டுகளை ஆர்மீனியர்கள் ஹைதல் என்றும், பாரசீகர்கள் மற்றும் அரபியர்கள் ஹைதாலியர்கள் என்றும் குறிப்பிப்பிட்டனர். ஹெப்தலைட்டுகளின் பேச்சு மொழி பாக்திரியா மொழியாகும்

தோற்றம்

[தொகு]
ஹெப்தலைட்டு மன்னர் கிங்கிலனின் ஐந்தாம் நூற்றாண்டு நாணயம்

ஹெப்தலைட்டு மக்கள் கிழக்கு பாரசீகத்தின் வெள்ளை ஹூணர்கள் என்றும்[9][10][11] துருக்கியர்கள் என்றும் கருதப்படுகிறார்கள்.[12][13]

கி பி 500-இல் ஹெப்தலைட்டு பேரரசு மேலோங்கி இருந்த காலத்தில் ஆசியாவின் வரைபடம்
இந்தோ-ஹெப்தலைட்டு மன்னர் நாப்கி மல்காவின் நாணயம், ஆப்கானித்தான்/கந்தகார், ஆண்டு 475 - 576
வெள்ளை ஹூண ஹெப்தலைட்டு ஆட்சியாளர்

சமயம்

[தொகு]

ஹெப்தலைட்டு மக்கள் பௌத்தம், மாணி சமயம், நெஸ்டோரியம் மற்றும் சரத்துஸ்திர சமயம் மற்றும் இந்து சமயங்களைப் பின்பற்றினர்.[2] ஹெப்தலைட்டுகளின் பகுதியான பால்க் பகுதியில் நூறு பௌத்த விகாரைகளுடன் 30,000 பௌத்த பிக்குகள் இருந்ததாக யுனேஸ்கோ நிறுவனம் கூறியுள்ளது.[6]

படையெடுப்புகள்

[தொகு]

வடகிழக்கு இந்து குஷ் மலைத் தொடர்களில் அமைந்த பாக்திரியாப் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்ட ஹெப்தலைட்டுகள், கி பி 479-இல் சோக்தியானாப் பகுதியைக் கைப்பற்றி, அங்கு வாழ்ந்த கிடாரைட்டுகளை மேற்கு நோக்கித் துரத்தி அடித்தனர். கி பி 493-இல் வடமேற்கு சீனாவின் பகுதிகளைக் கைப்பற்றினர்.

கி பி ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவின் வடமேற்கு பகுதிகளைக் கைப்பற்ற வந்த ஹெப்தலைட்டுகளின் கூட்டாளிகளான ஹூணர்களைக் குப்தப் பேரரசர் ஸ்கந்தகுப்தர் விரட்டியடித்தான்.[14] பின்னர் ஐந்தாம் நூற்றாண்டின் முடிவில் ஹூணர்கள் குப்தப் பேரரசை வென்று மத்திய மற்றும் வட இந்தியாவைக் கைப்பற்றினர்.[3] கி பி 510-இல் ஹெப்தலைட்டுகளின் பேரரசன் தோரமணன் கீழ் ஒருங்கிணைந்த ஹூணர்களை குப்தப் பேரரசன் பானுகுப்தன் தோற்கடித்தார்.[15][16] கி பி ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஹெப்தலைட்டுகளின் கூட்டாளிகளான ஹூணர்களை, சந்தேல அரசரான யசோதர்மன் மற்றும் குப்தப்பேரரசர் நரசிம்மகுப்தர் இந்தியாவை விட்டு விரட்டியடித்தனர்.[17][18]

வழித்தோன்றல்கள்

[தொகு]

இந்து சமய காபூல் சாகி மன்னர் கி பி 670-இல் ஹெப்தலைட்டுகளின் இறுதி மன்னரான யுதிஷ்டிரனை வென்று, ஹெப்தலைட்டுகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்.[19]

நடு ஆசியாவின் தற்கால பஷ்தூன் மக்கள், துருக்மேனிய மக்கள் மற்றும் கஜகஸ்தானியர்களின் முன்னோர்கள் என ஹெப்தலைட்டுகள் கருதப்படுகிறார்கள்.[3] ஹெப்தலைட்டுகள் - குஜ்ஜர் இன கலப்பால் பிறந்தவர்களே இராஜபுத்திரர்கள் என சர்ச்சைக்குரிய கருத்து நிலவுகிறது.[20]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chinese Travelers in Afghanistan". Abdul Hai Habibi. alamahabibi.com. 1969. பார்க்கப்பட்ட நாள் August 9, 2012.
  2. 2.0 2.1 Al-Hind, the Making of the Indo-Islamic World: Early medieval India. André Wink, p. 110. E. J. Brill.
  3. 3.0 3.1 3.2 Kurbanov, Aydogdy (2010). "The Hephthalites: Archaeological and historican analysis" (PDF). பார்க்கப்பட்ட நாள் 5 September 2012.
  4. Prokopios, Historien I 3,2-7.
  5. Grousset, Rene (1970). The Empire of the Steppes. Rutgers University Press. pp. 67–72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8135-1304-9.
  6. 6.0 6.1 Unesco Staff 1996, ப. 135–163
  7. West 2009, ப. 274–277
  8. Historical Sketch of Buddhism and Islam in Afghanistan, Alexander Berzin, Berzin Archives
  9. M. A. Shaban, "Khurasan at the Time of the Arab Conquest", in Iran and Islam, in memory of Vlademir Minorsky, Edinburgh University Press, (1971), p481; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85224-200-X.
  10. "The White Huns – The Hephthalites", Silk Road
  11. Enoki Kazuo, "On the nationality of White Huns", 1955
  12. David Christian A History of Russia, Inner Asia and Mongolia (Oxford: Basil Blackwell) 1998 p248
  13. "White Huns", Columbia Electronic Encyclopedia
  14. Ancient India: History and Culture by Balkrishna Govind Gokhale, p.69
  15. Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen, p.220
  16. Encyclopaedia of Indian Events and Dates by S. B. Bhattacherje, p.A15
  17. India: A History by John Keay, p.158
  18. History of India, in Nine Volumes: Vol. II by Vincent A. Smith, p.290
  19. Encyclopedia of ancient Asian civilizations, by Charles Higham, p. 141
  20. Kurbanov, Aydogdy (2010). "The Hephthalites: Archaeological and Historical Analysis" (PDF). p. 243. பார்க்கப்பட்ட நாள் 11 January 2013. As a result of the merging of the Hephthalites and the Gujars with population from northwestern India, some Rajputs (from Sanskrit "rajputra" – "son of the rajah") clans may have been formed.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hephthalites
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஊசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெப்தலைட்டுகள்&oldid=4058697" இலிருந்து மீள்விக்கப்பட்டது