வெளியீடு மின்மறுப்பு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வெளியீடு மின்மறுப்பு (output impedance), மூல மின்மறுப்பு (source impedance) அல்லது உள்ளார்ந்த மின்மறுப்பு (internal impedance) என்பது மின்னெதிர்ப்பு (மின்தடை), மின்தூண்டம் மற்றும் மின்தேக்கம் ஆகியவற்றினால் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் வெளியீடு முனையத்தில் செல்லும் மாறுதிசை மின்னோட்டத்தை மறுத்தளிப்பதாகும். மறுபடியும் வெளியீடு முனையங்களைப் பார்த்தால், இது தெவினின் நிகர் மின்மறுப்பாக இருக்கிறது.
திரிதடையம் போன்ற நேரியலற்ற கருவிகளில், வெளியீடு மின்மறுப்பு என்னும் சொல் பெரும்பாலும் சிறு அலைவீச்சு குறிகையினால் ஏற்படும் விளைவுகளைக் குறிக்கிறது. மேலும் அது திரிதடையத்தின் சார்வுப் புள்ளியுடன் மாறுகின்றது.