உள்ளடக்கத்துக்குச் செல்

வெண் புள்ளிச் சருகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண் புள்ளிச் சருகுமான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. meminna
இருசொற் பெயரீடு
Moschiola meminna
(எர்குசுலெபென், 1777)
வேறு பெயர்கள்

Moschus meminna Erxleben, 1777
Tragulus meminna Hodgson, 1843[1]

இலங்கை புள்ளிச் சருகுமான் அல்லது வெண் புள்ளிச் சருகுமான் (Moschiola meminna) என்பது சருகுமான் குடும்பத்தில் உள்ள இரட்டைப்படைக் குளம்பி விலங்கினமொன்றாகும். இவை இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. இவை இரு வேறு இனங்களெனவும் இலங்கையில் காணப்படும் விலங்கு இலங்கைச் சருகுமான் (Moschiola meminna) என்றும் இந்தியாவில் காணப்படும் விலங்கு இந்தியச் சருகுமான் (Moschiola indica) என்றும் அழைக்கப்பட வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது.[2] எனினும், இவ்விரு நாடுகளிலும் வாழும் இவை பொதுவாக வெண் புள்ளிச் சருகுமான் (Moschiola meminna) என்றே ஒன்றிணைந்த பெயரீட்டுத் தகவல் முறை[3] மற்றும் உயிர்நூல்[4] என்பன குறிப்பிடுகின்றன.

இலங்கையில் வெண் புள்ளிச் சருகுமான்கள் பொதுவாக உலர்வலயத்திலேயே காணப்படுகின்றன. இதற்குப் பதிலாக இலங்கையின் ஈரவலயத்தில் காணப்படும் விலங்கு மஞ்சட் கோட்டுச் சருகுமான் (Moschiola kathygre) ஆகும்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Moschiola meminna". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes a brief justification of why this species is of least concern.
  2. பஇபாஒ செம்பட்டியல்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. ஒபெதமு தொடுப்பு
  4. உயிர்நூல், 2010 சரிபார்ப்பு
  5. Groves, C. & Meijaard, E. (2005) Intraspecific variation in Moschiola, the Indian Chevrotain. The Raffles Bulletin of Zoology. Supplement 12:413-421 PDF பரணிடப்பட்டது 2008-07-27 at the வந்தவழி இயந்திரம்

வெளித் தொடுப்புகள்

[தொகு]