வெடிமருந்துப் பேரரசுகள்
வெடிமருந்துப் பேரரசுகள் | |
---|---|
நிலை | பேரரசுகள் |
மொழிகள் | பாரசீகம், உதுமானியத் துருக்கியம், அரபு, அல்பானியம், அசேரி துருக்கியம், சிலாவியம், இந்தி, உருது, பஞ்சாபி, குஜராத்தி, வங்காளம், பஷ்தூ |
சமயம் | சன்னி இசுலாம், சியா இசுலாம் |
அரசாங்கம் | முழுமையான முடியாட்சி, கூட்டாட்சி அமைப்புடைய ஒருமுக அரசு, மையப்படுத்தப்பட்ட எதேச்சதிகாரம், இசுலாமிய ஷரியா[1] |
• பதவிகள் | சுல்தான், பேரரசர், சாம்ராட், மகாராஜா, படிஷா, ஷா |
நிறுவுதல் | |
வரலாற்று சகாப்தம் | ஆரம்ப நவீனகாலம் |
• தொடக்கம் | 1453 |
• முடிவு | 1736 |
வெடிமருந்துப் பேரரசுகள் அல்லது இசுலாமிய வெடிமருந்துப் பேரரசுகள் என்பது உதுமானிய, சபாவித்து மற்றும் முகலாயப் பேரரசுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். இப்பேரரசுகள் 16ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை தழைத்தோங்கின. ஆரம்ப நவீன காலத்தின் வலிமையுடைய மற்றும் மிக நிலைத் தன்மையுடைய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்த மூன்று பேரரசுகளும் இருந்தன. இதன்காரணமாக வணிக விரிவாக்கம் மற்றும் கலாச்சாரத்திற்கு ஆதரவு ஆகியவை கிடைத்தது. இந்தப் பேரரசுகளின் அரசியல் மற்றும் நீதி அமைப்புகள் அதிகப்படியாக மையப்படுத்தப்பட்டு நிலை நிறுத்தப்பட்டன. இப்பேரரசுகளில் தனிநபர் வருமானம் மற்றும் மக்கள்தொகை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒரு நிலையான வேகத்தைக் கொண்டிருந்தது. இப்பேரரசுகள் மேற்கில் நடு ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்கா முதல் கிழக்கில் தற்போதைய நவீன வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தன.
புதிதாக உருவாக்கப்பட்ட பீரங்கி மற்றும் துப்பாக்கிகள் போன்ற சுடுகலன்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி காரணமாகப் பெருமளவிலான நிலப்பரப்புகள் இசுலாமிய வெடிமருந்துப் பேரரசுகளால் அவற்றின் ஏகாதிபத்திய விரிவாக்கத்தின் போது வெல்லப்பட்டன. ஐரோப்பாவிலும் வெடிமருந்து ஆயுதங்களின் அறிமுகமானது மையப்படுத்தப்பட்ட முடியாட்சி நாடுகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. காட்க்சன் என்ற அமெரிக்க வரலாற்றாளரின் கூற்றுப்படி வெடிமருந்துப் பேரரசுகளில் இந்த மாற்றங்களானது இராணுவ அமைப்பையும் தாண்டி மற்ற பகுதிகளிலும் ஏற்பட்டது.[2] இந்தியத் துணைக் கண்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த முகலாயர்கள் தைமூரிய மறுமலர்ச்சியை பெற்றிருந்தனர்.[3] பகட்டான கட்டடக்கலைக்காக அடையாளப்படுத்தப்படுகின்றனர். மேலும் தொழிற்புரட்சிக்கு முந்தைய காலம் என சிலரால் விளக்கப்படும் சகாப்தத்தை வங்காளத்தில் தொடங்கி வைத்தனர்.[4] ஈரானுக்குத் திறமையான மற்றும் நவீன அரசு நிர்வாகத்தை சபாவித்துக்கள் உருவாக்கினர். சிறந்த கலைகளில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படுவதற்கும் ஆதரவளித்தனர். கெய்சரி ரும் என்றும் அழைக்கப்பட்டகான்சுடான்டினோப்பிளை அடிப்படையாகக் கொண்ட உதுமானிய கலீபகத்தின் சுல்தான்கள் இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர்களாக இருந்தனர். இவ்வாறாக இசுலாமிய உலகத்தின் தலைவர்களாயினர். அவர்களது சக்தி, செல்வம், கட்டடக்கலை மற்றும் பல்வேறு பங்களிப்புகள் ஆகியவை ஆசிய மற்றும் ஐரோப்பிய வரலாற்றின் போக்கில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
உசாத்துணை
[தொகு]- ↑ Pagaza & Argyriades 2009, ப. 129.
- ↑ Khan 2005, ப. 54.
- ↑ "The Art of the Timurid Period (ca. 1370–1507)". www.metmuseum.org. பார்க்கப்பட்ட நாள் 2021-03-11.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Singh, Abhay Kumar (2006). Modern world system and Indian proto-industrialization: Bengal 1650-1800. New Delhi: Northern Book Centre. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7211-203-3. இணையக் கணினி நூலக மைய எண் 70168169.