உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் ஆல்பிரெட் பவுலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் ஆல்பிரெட் பவுலர்
பிறப்பு(1911-08-09)ஆகத்து 9, 1911
பிட்சுபர்கு, பென்சில்வேனியா
இறப்புமார்ச்சு 14, 1995(1995-03-14) (அகவை 83)
பசதேனா, கலிபோர்னியா
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்(கால்டெக்) (முனைவர்)
ஆய்வு நெறியாளர்சார்லசு கிறித்தியன் இலவுரித்சன்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஜே. இரிச்சர்டு பாண்டு, டொனால்டு கிளேட்டன், ஜார்ஜ் எம். பூல்லர், எஃப். கர்டிசு மைக்கேல்
தாக்கம் 
செலுத்தியோர்
பிரெட் ஆயில்
விருதுகள்அறிவியலில் பெருந்தொண்டு புரிந்ததற்கான பர்னார்டு பதக்கம் (1965)
டாம் டபுல்யூ. பானர் பரிசு, அணுக்கரு இயற்பியல் (1970)
வெத்லெசன் பரிசு (1973)
தேசிய அறிவியல் பதக்கம் (1974)
எடிங்டன் பதக்கம் (1978)
இயற்பியலில் நோபல் பரிசு (1983)

வில்லியம் ஆல்பிரெட் பவுலர் (William Alfred Fowler) (/ˈflər/; ஆகத்து 9, 1911- மார்ச்சு 14, 1995) ஓர் அமெரிக்க அணுக்கரு இயற்பியலாலரும் வானியற்பியலாளரும் ஆவார். இவரும் சுப்பிரமணியன் சந்திரசேகரும் 1983 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றனர்.

வாழ்க்கை

[தொகு]

பவுலர் பென்சில்வேனியாவில் உள்ள பிட்சுபர்கில் பிறந்தார். இவரது இரண்டாம் அகவையில் குடும்பத்தோடு ஓகியாவில் உள்ள இலிமாவுக்குச் சென்றார். இது ஒரு நீராவித் தொடர்வண்டி நகரம் ஆகும்.இவர் ஓகியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அப்போது இவர் டௌ கப்பா எப்சிலான் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் அணுக்கரு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

இவர் நீராவிப் பொறி இயங்கிகளில் தொடர்ந்து ஆர்வம் கொண்டிருந்தார். பல நீராவிப் பொறி இயங்கிகளை பல அளவுகளில் தன்னிடம் வைத்திருந்தார். அவற்றில் ஒன்று இங்கே காட்டப்பட்டுள்ளது.[1] இவர் கலிபோர்னியாவில் உள்ள பசதேனாவில் இறந்தார்.இந்த ஆய்வு விண்மீன்களில் உருவாகும், மிகக் குறைந்த எடை வேதித் தனிமங்களைத் தவிர்த்த பிற தனிமங்களின் அணுக்கரு நிகழ்வுகளை வகைப்படுத்தியது. இது பரவலாக B2FH ஆய்வு]] என அறியப்படுகிறது.

இவர் வாழ்க்கையில் முதலில் பெயர்பெற்ற அணுக்கரு இயற்பியலாளரானார் இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் கெலோகு கதிர்வீச்சு ஆய்வகத்தில் சார்லசு இலவுரிட்செனுக்குப் பிறகு இயக்குநராக ஆனார். இவருக்குப் பிறகு இயக்குநராக சுட்டீவன் ஈ. கூனின் தொடர்ந்தார். இவருக்கு அரச தலைவர் ஜெரால்டு போர்டு தேசிய அறிவியல் பதக்கத்தை வழங்கினார். [2] இதுவே ஓர் அமெரிக்கர் அறிவியலில் பெறமுடிந்த தகுதியாகும்.

இவர் 1963 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமையையும் 1973 இல் வெத்லெசென் பரிசையும் 1978 இல் எடிங்டன் பதக்கத்தையும் 1979 இல் பசிபிக் வானியல் கழகத்தின் புரூசு பதக்கத்தையும் 1983 இல் இயற்பியலுக்கான நோபெல் பரிசைச் சுப்பிரமணியன் சந்திரசேகருடன் இணைந்தும் வென்றார். இவருக்கு நோபெல் பரிசு அணுக்கரு வினைகளுக்கான கோட்பாட்டு, செய்முறை ஆய்வுகளுக்காக வழங்கப்பட்டது. இந்த ஆய்வுகள் புடவியின் வேதித் தனிமங்களின் உருவாக்கத்தைப் புரிந்துகொள்ள முதன்மையானவை ஆகும்.

இவர் நீராவிப் பொறி இயங்கிகளில் தொடர்ந்து ஆர்வம் கொண்டிருந்தார். பல நீராவிப் பொறி இயங்கிகளை பல அளவுகளில் தன்னிடம் வைத்திருந்தார். அவற்றில் ஒன்று இங்கே காட்டப்பட்டுள்ளது.[3] இவர் கலிபோர்னியாவில் உள்ள பசதேனாவில் இறந்தார்.

வெளியீடுகள்

[தொகு]

நினைவேந்தல்கள்

[தொகு]
  • Stanford E. Woosley (1995). "Obituary: William A. Fowler, 1911-1995". Bulletin of the American Astronomical Society 27: 1475. Bibcode: 1995BAAS...27.1475W. 
  • Dicke, W. (16 March 1995). "William A. Fowler, 83, Astrophysicist, Dies". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.
  • Donald D. Clayton (1996). "William Alfred Fowler (1911-1995)". Publications of the Astronomical Society of the Pacific 108: 1. doi:10.1086/133686. Bibcode: 1996PASP..108....1C. http://www.jstor.org/stable/40680678. 
  • Burbidge, G. (1996). "William Alfred Fowler, 1911 - 14 March 1995". Quarterly Journal of the Royal Astronomical Society 37: 89. Bibcode: 1996QJRAS..37...89B. 

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]