உள்ளடக்கத்துக்குச் செல்

விண்ணோடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்ணோடம்
Space Shuttle
விண்ணோடம் டிஸ்கவரி விண்ணுக்கு ஏவப்படுகிறது.
விண்ணோடம் டிஸ்கவரி விண்ணுக்கு ஏவப்படுகிறது.
தரவுகள்
இயக்கம் பகுதியாக மீளப் பாவிக்கவல்ல ஏந்து விண்கலம்
அமைப்பு {{{manufacturer}}}
நாடு ஐக்கிய அமெரிக்கா
அளவு
உயரம் 56.1 மீ (184 அடி (56 m))
விட்டம் 8.7 மீ (28.5 அடி (8.7 m))
நிறை 2,029,203 கிகி (4,474,574 இறா)
படிகள் 2
கொள்திறன்
Payload to LEO 24,400 கிகி (53,700 இறா)
Payload to
GTO
3,810 கிகி (8,390 இறா)
ஏவு வரலாறு
நிலை பயன்பாட்டில் உள்ளது
ஏவல் பகுதி கென்னடி விண்வெளி மையம்
வாண்டன்பேர்க் வான்படைத் தளம் (பாவிப்பில் இல்லை)
மொத்த ஏவல்கள் 121
வெற்றிகள் 119
தோல்விகள் 2
முதல் பயணம் ஏப்ரல் 12 1981
Notable payloads பன்னாட்டு விண்வெளி நிலையக் கூறுகள்
ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி
கலிலியோ
மகெலன்
சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம்
கொம்ப்டன் காம்மா கதிர் அவதான நிலையம்
Boosters (Stage 0) - Solid Rocket Boosters
No boosters 2
Engines 1 solid
Thrust ஒவ்வொன்றும் 2,800,000 இறாf, கடல் மட்டத்தில் இருந்து மேலெழுகையில் (12.5 MN)
குறித்த உந்தம் 269 செ
எரிநேரம் 124 செ
எரிபொருள் திண்மம்
First Stage - External Tank
Engines (எதுவுமில்லை)
(3 SSMEs located on Orbiter)
Thrust 1,225,704 lbf மொத்தம், கடல் மட்டத்தில் இருந்து மேலெழுகையில் (5.25 MN)
குறித்த உந்தம் 455 செ
எரிநேரம் 480 செ
எரிபொருள் திரவ ஒக்சிசன்/திரவ ஐதரசன்
Second Stage - சுற்றுப்பாதை
Engines 2 OME
Thrust 12,000 இறாf combined total vacuum thrust (53 கிநி)
குறித்த உந்தம் 316 செ
எரிநேரம் 1250 செ
எரிபொருள் MMH/N2O4
நாசாவின் விண்ணோடத் திட்டச் சின்னம்

நாசாவின் விண்ணோடம் (Space Shuttle) என்பது ஐக்கிய அமெரிக்க அரசினால் மனிதர்களையும் செயற்கைக்கோள்களையும் விண்வெளிக்கு அனுப்பப் பயன்படுத்தப்பட்ட விண்கலம் (spacecraft) ஆகும். இது அதிகாரபூர்வமாக விண்வெளி போக்குவரத்து ஏற்பாடு (Space Transportation System - STS) என அழைக்கப்படுகிறது. செயற்கைக்கோள்கள் மற்றும் மற்ற கோள்களுக்கு கலன்களை அனுப்புதல், விண்வெளி அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளுதல், அனைத்துலக விண்வெளி நிலையம் கட்டுவதற்கும் பழுதுபார்ப்பதற்கும் மேற்கொண்ட 37 விண்பயணங்கள் இதன் முக்கிய பணித்திட்டங்களாகும். ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கட்டமைத்த "விண்-ஆய்வகம்" (Spacelab) இவ்விண்ணோடம் மூலமாக ஏவப்பட்டது.

விண்ணோடத்தின் முக்கியமான பகுதிகள் 'விண் சுற்றுக்கலன், திரும்பப்பெறும் உந்துகலன்கள், வெளிப்புற எரிபொருட்கலன், சுமைகள் மற்றும் துணை உட்கட்டமைப்புப் பகுதிகள்' ஆகியவை ஆகும்.

மேற்பார்வை

[தொகு]

விண்ணோடமானது பகுதியாக மறுபயன்பாடு செய்யப்படக்கூடிய ஏவுவாகனம் மற்றும் தாழ்நிலை சுற்றுப்பாதை வானூர்தியாகும். இது 1981-லிருந்து 2011-வரை அமெரிக்காவின் நாசாவினால் மனித விண்பயணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. இத்தொகுதியானது எறிசு ஏவல், சுற்றுப்பாதை வானூர்தி, மீள்-வரவு விண்ணூர்தி மற்றும் ஒவ்வொரு பயண தேவைகளுக்கேற்ற நீட்சிகள் ஆகியனவற்றை உள்ளடக்கியது. 1981-ல் முதல் நான்கு சோதனைமுறை விண்பயணங்கள் செய்யப்பட்டன. இதன் பின்னர் 1982-ல் பயன்பாட்டுமுறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து ஏவல்களும் ஃபுளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து செய்யப்பட்டன. 135 விண்பயணங்களுக்குப் பின்னர் 2011-ல் விண்ணோடங்கள் பயன்பாடு நிறுத்தப்பட்டது. முப்பதாண்டுகால விண்ணோட வரலாற்றில் கடைசிப் பயணமாக சூலை-8, 2011-ல் அட்லாண்டிசு விண்ணோடம் ஏவப்பட்டது. சூலை 21, 2011-ல் அட்லாண்டிசு விண்ணோடம் கென்னடி விண்வெளி மையத்தில் தரையிறங்கியதோடு விண்ணோட பயணத்திட்டம் முடிவுக்கு வந்தது. 1970-களில் சோதனைமுறை பயன்பாட்டுக்காக மூலப்பொறி (என்ஜின்) மற்றும் வெப்பக்கவசமற்ற எண்டர்பிரைசு விண்சுற்றுக்கலன் பயன்படுத்தப்பட்டது. விண்பயன்பாட்டுக்கேற்ற ஐந்து விண்சுற்றுக்கலன்கள் தயாரிக்கப்பட்டன - இரண்டு கலன்கள் விபத்துக்களில் அழிந்தன, மற்ற மூன்றும் பயன்பாடு நிறைவுபெற்றதும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

இது நாசா, அமெரிக்க பாதுகாப்புத் துறை, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், சப்பான் மற்றும் யெர்மனியால் விண்-சுற்றுப்பாதை செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. விண்வெளி போக்குவரத்து அமைப்பு வடிவமைப்பு & மேம்பாடு, மற்றும் விண்ணோட செயல்பாடுகளுக்கு யெர்மனி, அமெரிக்கா மற்றும் சப்பான் ஆகிய நாடுகள் நிதியளித்தன. விண் ஆய்வகம் டி-1, டி-2 ஆகியவற்றிற்கு முறையே மேற்கு யெர்மனியும் ஒன்றுபட்ட யெர்மனியும் நிதியளித்தது. மற்ற செயல்பாடுகளுக்கு அமெரிக்கா நிதியளித்தது மேலும் 'எஸ்.எல்.-ஜெ'க்கு சப்பான் பகுதியாக நிதியளித்தது.

விண்ணோடம் ஏவப்படும்போது ஆழ்ந்த ஆரஞ்சு வண்ணமுடைய விண்ணோட புறக்கலன் (external tank), இரண்டு ஒல்லியான விண்ணோட திட ஏவூர்தி உந்துகலன்கள், விண் சுற்றுக்கலன் (இதில் தான் பயண பணிக்குழுவும் பயணசுமையும் இருக்கும்) ஆகியவை சேர்ந்த அமைப்பாகவிருக்கும்.

தொழில்நுட்ப தரவுகள்

[தொகு]
விண்ணோட சுற்றுக்கலன் விளக்கப்படம்
விண்ணோட வரைபடம்
விண்ணோட இறக்கை உள்ளகங்காட்டல் படம்
விண்ணோட சுற்றுக்கலன் மற்றும் சோயுஸ் (ஒப்பளவில் வரையப்பட்டது).
இரண்டு விண்ணோடங்கள் ஏவு தளங்களில். ஹப்பிள் தொலைநோக்கியின் கடைசி சீராக்கப் பயணத்தின்போது உலகளாவிய விண்வெளி மையம் அருகாமையில் இல்லாததால் மற்றுமொரு விண்ணோடம் விபத்தேதேனும் ஏற்பட்டால் பணிக்குழுவை பாதுகாப்பாக மீட்க தேவைப்படும் என்பதால் இரண்டு விண்ணோடங்கள் ஏவப்பட்டன.

சுற்றுக்கலன் விவரங்கள்[1] (for Endeavour, OV-105)

  • நீளம்: 122.17 அடி (37.237 m)
  • இறக்கைநீட்டம்: 78.06 அடி (23.79 m)
  • உயரம்: 56.58 அடி (17.25 m)
  • வெற்று எடை: 172,000 lb (78,000 kg)[2]
  • மொத்த புறப்பாட்டு எடை (சுற்றுக்கலன் மட்டும்): 240,000 lb (110,000 kg)
  • அதிகபட்ச தரையிறக்க எடை: 230,000 lb (100,000 kg)
  • தரையிறக்க பயணச்சுமை (Return Payload): 14,400 kg (32,000 lb)[3]
  • அதிகபட்ச பயணச்சுமை: 55,250 lb (25,060 kg)
  • தாழ்நிலை புவி சுற்றுப்பாதைக்கான(LEO) பயணச்சுமை: 53,600 lb (24,310 kg)
  • தாழ்நிலை புவி சுற்றுப்பாதைக்கான(LEO) பயணச்சுமை @ 51.6° inclination (ISS):
  • Payload to GTO: 8,390 lb (3,806 kg)
  • துருவ சுற்றுப்பாதைக்கான பயணச்சுமை: 28,000 lb (12,700 kg)
  • (Note launch payloads modified by External Tank (ET) choice (ET, LWT, or SLWT)
  • பயணச்சுமைக் கள பரிமாணங்கள்: 15 கீழ் 59 அடி (4.6 கீழ் 18 m)
  • செயல்படு குத்துயரம்: 100 முதல் 520 nmi (190 முதல் 960 km; 120 முதல் 600 mi)
  • வேகம்: 7,743 m/s (27,870 km/h; 17,320 mph)
  • காப்புநுழைவு நெடுக்கம் (அ) குறுக்கு வீச்சு: 1,085 nmi (2,009 km; 1,249 mi)
  • முதல் நிலை (SSME with external tank)
    • முதன்மை பொறிகள்(எஞ்சின்கள்): Three Rocketdyne Block II SSMEs, each with a sea level thrust of 393,800 lbf (1.752 MN) at 104% power
    • உந்துவிசை (புறப்பாட்டின்போது, கடல்மட்டத்தில், 104% திறன், அனைத்து 3 பொறிகளும்): 1,181,400 lbf (5.255 MN)
    • கணத்தாக்கு எண்: 455 s
    • எரிதல் நேரம்: 480 s
    • எரிபொருள்: Liquid Oxygen/Liquid Hydrogen
  • இரண்டாம் நிலை
    • பொறிகள்(எஞ்சின்கள்): 2 Orbital Maneuvering Engines
    • உந்துவிசை: 53.4 kN (12,000 lbf) combined total vacuum thrust
    • கணத்தாக்கு எண்: 316 s
    • எரிதல் நேரம்: 1250 s
    • எரிபொருள்: MMH/N2O4
  • பணிக்குழு: மாறுபடும்.
ஆரம்ப பறப்புக்களின்போது குறைந்தது இருவர்; பின்னைய திட்டங்களில் ஐவர்; திட்ட முடிவின் போது பெரும்பாலும் எழுவர் பயணிப்பர்: ( ஆணையிடு அதிகாரி, விமானி, சில திட்ட நிபுணர்கள், மேலுல் சிலவேளைகளில் பறப்பு இயந்திரவியலாளர்). STS-61-A, STS-71 ஆகிய இரு சந்தர்ப்பங்களில், எட்டு விண்வெளி வீரர்கள் சென்றனர். அவசர நிலையின்போது பதினொரு பேர் செல்லலாம் (பார்க்க STS-3xx).

புறக்கலன் விவரங்கள் (for SLWT)

  • நீளம்: 46.9 m (154 அடி)
  • விட்டம்: 8.4 m (28 அடி)
  • உந்துபொருள் கனஅளவு: 2,025 m3 (534,900 US gal)
  • வெற்று எடை: 26,535 kg (58,500 lb)
  • மொத்த புறப்பாட்டு எடை (கலன் மட்டும்): 756,000 kg (1,670,000 lb)

திட ஏவூர்தி உந்துகலன் விவரங்கள்

  • நீளம்: 45.46 m (149 அடி)[4]
  • விட்டம்: 3.71 m (12.2 அடி)[4]
  • வெற்று எடை (ஒவ்வொரு உந்துகலனும்): 68,000 kg (150,000 lb)[4]
  • மொத்த புறப்பாட்டு எடை (ஒவ்வொரு உந்துகலனும்): 571,000 kg (1,260,000 lb)[5]
  • உந்துவிசை (புறப்பாட்டின்போது, கடல்மட்டத்தில், ஒவ்வொரு உந்துகலனுக்கும்): 12.5 MN (2,800,000 lbf)
  • கணத்தாக்கு எண்: 269 s
  • எரிதல் நேரம்: 124 s

ஒருங்கிய அடுக்கு விவரங்கள்

  • உயரம்: 56 m (180 அடி)
  • மொத்த புறப்பாட்டு எடை: 2,000,000 kg (4,400,000 lb)
  • மொத்த புறப்பாட்டு உந்துவிசை: 30.16 MN (6,780,000 lbf)

விண்வெளி விமானம்

[தொகு]

விண்வெளி விமானம் என்பது மறுபாயன்பாடுடைய, சுற்றுப்பாதையில் இயங்கக்கூடிய விண்கலம் ஆகும். தாழ் புவி சுற்றுப்பாதைக்கு தாங்குபளு அல்லது தள்ளுசுமையை (payload) ஏற்றிச்செல்லவும் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு பணிக்குழு சுழற்சியைச் செய்யவும் செப்பனிடுதல் திட்டங்களுக்காகவும் இது பயன்படுத்தப்படுகின்றது.

விண்ணூர்திகள் பலவகை

[தொகு]

விண்ணூர்தி அல்லது விண்கலம் என்பது விண்வெளியில் பயணம் செய்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஊர்தி ஆகும். சோவியத் ஒன்றியத்தின் சுபுட்னிக் 1 முதலாவதாக விண்வெளிக்கு ஏவப்பட்ட விண்ணூர்தியாகும். தற்பொழுது பல விண்ணூர்திகளில் ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் ஏரைன், மனிதனை நிலவிற்கு கொண்டுசென்ற சேர்ட்டன், நாசாவின் விண்வெளியோடம் ஸ்பேஸ் ஷட்டில், இரசியாவின் சோயுஸ் என்பன முக்கியமானவையாகும்.

உசாத்துணைகள்

[தொகு]
  1. Jenkins, Dennis R. (2006). Space Shuttle: The History of the National Space Transportation System. Voyageur Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9633974-5-1.
  2. "John F. Kennedy Space Center – Space Shuttle Endeavour". Pao.ksc.nasa.gov. Archived from the original on மே 21, 2011. பார்க்கப்பட்ட நாள் June 17, 2009.
  3. Woodcock, Gordon R. (1986). Space stations and platforms. Orbit Book co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89464-001-8. பார்க்கப்பட்ட நாள் April 17, 2012. The present limit on Shuttle landing payload is 14,400 kg (31,700 lb). This value applies to payloads intended for landing.
  4. 4.0 4.1 4.2 Jenkins, Dennis R. (2002). Space Shuttle: The History of the National Space Transportation System (Third ed.). Voyageur Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9633974-5-1.
  5. Space Shuttle Propulsion Systems, p. 153. NASA, June 26, 1990.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்ணோடம்&oldid=3777911" இலிருந்து மீள்விக்கப்பட்டது