பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. நூறு கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றின. சிந்து சமவெளி நாகரிகம், அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்றவை இவற்றுள் அடங்கும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகத்து 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.
சென்னை முற்றுகை என்பது பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை தங்கள் கட்டுபாட்டுக்கு கொண்டுவர பிரெஞ்சு படைகள் டிசம்பர் 1758 முதல் பெப்ரவரி 1759 வரை, லல்லி தலைமையில் நடத்திய முற்றுகைப் போராகும். இது ஏழு ஆண்டுப் போரின் போது நடந்த போராகும். பிரித்தானியப் படைகள் வெற்றிகரமாக இந்த முற்றுகையை எதிர்கொண்டனர். இந்தப் போரில் சென்னை நகரைப் பாதுகாக்க பிரித்தானியப் படையினர் 26,554 பீரங்கிக் குண்டுகளையும் 200,000 தோட்டாக்களையும் பயன்படுத்தினர். சென்னைப் பட்டினத்தைக் கைப்பற்றத் தவறியமை பிரெஞ்சுப் படையின் இந்திய நுழைவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்ததுடன் பின்னாளில் நடைபெற்ற வந்தவாசிப் போருக்கும் பின்னடைவை ஏற்படுத்தியது.
மேலும்...
தமிழ்நாட்டில்நரிக்குறவர் சமூகத்தினர் பல ஊர்களில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக நாடோடிகளைப் போல் அவ்வப்போது இடம் பெயர்ந்து கொண்டிருப்பர். இவர்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில் ஊசி, பாசி, போன்ற சிறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர். குறவர்கள் சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம் அறிந்தவர்கள். நாடி பார்த்து நோய்க்குறி சொல்லுவார்கள். இன்றைய நவீன மருத்துவம் வந்ததும் இவர்களை ஏமாற்றுக்காரர்களாக சமூகம் சொல்லுகின்றது. குறத்தி குறி சோசியம் இலக்கிய காலத்திலிருந்து பெருமை வாய்ந்தது.
விக்கித் திட்டம் இந்தியாவில் பங்களிப்பாளர்களுக்கு வழிகாட்டுதலையும், சிறப்பான செயல்பாடுகளுக்காக பயனர்களுக்கு பதக்கங்கள் கொடுத்து ஊக்கத்தினையும் செய்யலாம்.