உள்ளடக்கத்துக்குச் செல்

வடமுனை ஆலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடமுனை ஆலா
Two Arctic Terns
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
குடும்பம்:
Sternidae
பேரினம்:
Sterna
இனம்:
S. paradisaea
இருசொற் பெயரீடு
Sterna paradisaea
Pontoppidan, 1763[2]
Breeding grounds (red), wintering grounds (blue) and migration routes (green)
வேறு பெயர்கள்

Sterna portlandica, Sterna pikei

வடமுனை ஆலா (Arctic Tern) என்பது நீள் சிறகு கடற்பறவை குடும்பத்தைச் சேர்ந்த ஆலா ஆகும். உலகிலேயே அதிக தூரம் வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் வடமுனை ஆலா சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. இது கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும்.

சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது.[3] இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. [[பன்னாட்டு பறவை வாழ்க்கை]] (2010). "Sterna paradisaea". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 28 July 2011. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. பன்னாட்டு பறவை வாழ்க்கை. "Arctic Tern — BirdLife Species Factsheet". Archived from the original on 23 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 17 August 2006.
  3. name="Arctic terns' flying feat">"Arctic terns' flying feat". Reuters. 11 January 2010. http://www.reuters.com/article/idUSTRE60A4NV20100111. பார்த்த நாள்: 20 January 2010. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sterna paradisaea
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடமுனை_ஆலா&oldid=3773942" இலிருந்து மீள்விக்கப்பட்டது