லெட்டிடியா ரைட்
லெட்டிடியா ரைட் | |
---|---|
பிறப்பு | லெடிடியா மைக்கேல் ரைட் 31 அக்டோபர் 1993 ஜோர்ஜ்டவுண், கயானா |
தேசியம் |
|
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2011–இன்று வரை |
லெட்டிடியா ரைட் (Letitia Wright, பிறப்பு: 31 அக்டோபர் 1993) என்பவர் கயானா-பிரித்தானியா நாட்டு நடிகை ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு முதல் பிளாக் பான்தர் (2018),[1] அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) போன்ற திரைப்படங்களிலும், டாப் பாய், கம்மிங் ஆப் போன்ற பிரித்தானியா தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான பிளாக் பான்தர் (2018),[2] அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018),[3]அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் சூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகை ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டில் 'பிரித்தானிய ரைசிங் ஸ்டார்' என்ற விருதைப் பெற்றுள்ளார்.[4]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]லெடிடியா மைக்கேல் ரைட் 31 அக்டோபர் 1993 அன்று கயானாவின் ஜார்ஜ்டவுனில் பிறந்தார். அவருக்கு ஏழு வயதாக இருந்தபோது அவரது குடும்பம் லண்டனுக்கு குடிபெயர்ந்தது, அவர் அங்கு பள்ளியில் படித்தார்.[5] டோட்டன்ஹாம் நகரில் வளர்ந்த இவர் நார்தம்பர்லேண்ட் பார்க் சமூகப் பள்ளியில் பயின்றார். அப்போது அவர் "நான் எப்போதும் வடக்கு லண்டன் பெண்ணாக இருப்பேன்" என்று கூறியுள்ளார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Black Panther' star Letitia Wright: 'I’ll always be a North London girl’
- ↑ Kroll, Justin (20 October 2016). "'Black Panther' Adds 'Ready Player One' Actress Letitia Wright (EXCLUSIVE)". Variety. Archived from the original on 21 October 2016. பார்க்கப்பட்ட நாள் 20 October 2016.
- ↑ Childs, Joi (16 February 2018). "'Black Panther': How Letitia Wright Became a Marvel Breakout" (in en). The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/heat-vision/black-panther-shuri-actress-letitia-wright-is-a-marvel-breakout-1083958.
- ↑ Childish Gambino visitó la Fábrica de Arte Cubano (+ Foto)
- ↑ Alberge, Dalya (4 April 2015). "Letitia Wright, Britain's newest rising screen star, says black actors need more positive roles". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 16 February 2017.
Wright, 21....
- ↑ "Black Panther' star Letitia Wright: 'I’ll always be a North London girl’