லியூசின்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
லியூசின்
| |||
வேறு பெயர்கள்
2-அமினோ-4- மீதைல் பென்டநோயிக் அமிலம்
| |||
இனங்காட்டிகள் | |||
61-90-5 | |||
ChEMBL | ChEMBL291962 | ||
ChemSpider | 5880 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | D00030 | ||
பப்கெம் | 6106 | ||
| |||
UNII | GMW67QNF9C | ||
பண்புகள் | |||
C6H13NO2 | |||
வாய்ப்பாட்டு எடை | 131.18 g·mol−1 | ||
காடித்தன்மை எண் (pKa) | 2.36 (கார்பாக்சில்), 9.60 (அமினோ)[1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
லியூசின் (Leucine) [குறுக்கம்: Leu (அ) L][2] என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH2CH(CH3)2. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: UUA, UUG, CUU, CUC, CUA மற்றும் CUG. ஹைட்ரோகார்பனை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், லியூசின் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது.
உயிரியல் பண்புகள்
[தொகு]லியூசின் கல்லீரல், கொழுப்புத் திசு மற்றும் தசைநார்த் திசுக்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. கொழுப்பு மற்றும் தசைநார்த் திசுக்களில் லியூசின் ஸ்ட்டீரால்களை உருவாக்கப் பயன்படுகிறது. மேலும், இவ்விரண்டு திசுக்களிலும் கல்லீரலைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமாக லியூசின் உபயோகப்படுத்தப்படுகின்றது.[3]
தசைத்திசுக்களில் புரத உற்பத்தியைத் தூண்டும் ஒரே ஒரு அமினோ அமிலம் லியூசின் மட்டுமே.[4] உப உணவுப் பொருளாக லியூசின் தசைப் புரத உற்பத்தியைத் தூண்டி முதுமையடைந்த எலிகளில் தசைநார்த் திசு சிதைவினைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[5]
L-லியூசின் (E641) உணவுச் சேர்ப்பில் மணங்கூட்டியாக வகைப்படுத்தப்படுகிறது.
உணவு | கி/100கி |
---|---|
சோயா அடர்புரதம் | 4.917 |
வேர்க்கடலை | 1.672 |
முளைவிட்ட கோதுமை | 1.571 |
பாதாம் பருப்பு | 1.488 |
புல்லரிசி (காடைக்கண்ணி) | 1.284 |
சமைத்த அவரை | 0.765 |
சமைத்த பருப்பு வகைகள் | 0.654 |
சமைத்த கொண்டைக் கடலை | 0.631 |
மக்காச்சோளம் | 0.348 |
சாதம் | 0.191 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்க்கப்பட்ட நாள் 2007-05-17.
- ↑ J. Rosenthal, et al. Department of Medicine, University of Toronto, Toronto, Canada. "Metabolic fate of leucine: A significant sterol precursor in adipose tissue and muscle". American Journal of Physiology Vol. 226, No. 2, p. 411-418. பார்க்கப்பட்ட நாள் 2008-03-25.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Etzel MR (2004). "Manufacture and use of dairy protein fractions". The Journal of Nutrition 134 (4): 996S–1002S. பப்மெட்:15051860. http://jn.nutrition.org/content/134/4/996S.long.
- ↑ L. Combaret, et al. Human Nutrition Research Centre of Clermont-Ferrand. "A leucine-supplemented diet restores the defective postprandial inhibition of proteasome-dependent proteolysis in aged rat skeletal muscle". Journal of Physiology Volume 569, issue 2, p. 489-499. பார்க்கப்பட்ட நாள் 2008-03-25.
- ↑ National Nutrient Database for Standard Reference. U.S. Department of Agriculture. Archived from the original on 2015-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-09-16.