உள்ளடக்கத்துக்குச் செல்

ரேஞ்சர் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேஞ்சர் 2
ரேஞ்சர் 2
திட்ட வகைதொழில்நுட்பம்
இயக்குபவர்ஐக்கிய அமெரிக்கா
விண்கலத்தின் பண்புகள்
ஏவல் திணிவு304 கிலோகிராம்கள் (670 lb)
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்18 November 1961, 08:09:00 (1961-11-18UTC08:09Z) UTC
ஏவுகலன்அட்லஸ் எல்வி- 3
திட்ட முடிவு
தேய்வு நாள்20 November 1961 (1961-11-21)
சுற்றுப்பாதை அளபுருக்கள்
சுற்றுவெளிபூமியின் தாழ் வட்டப்பாதை
அரைப்பேரச்சு6,574.2 கிலோமீட்டர்கள் (4,085.0 mi)
அண்மைgee150 கிலோமீட்டர்கள் (93 mi)
கவர்ச்சிgee242 கிலோமீட்டர்கள் (150 mi)
சாய்வு33.3 பாகைகள்
சுற்றுக்காலம்~89 நிமிடங்கள்

ரேஞ்சர் 2 (Ranger 2) என்பது அமெரிக்காவின் நாசாவால் ரேஞ்சர் திட்டத்தில் ஏவப்பட்ட விண்கலன்களில் ஒன்றாகும். இவ்விண்கலம் 1961ஆம் ஆண்டின் நவம்பர் பதினெட்டாம் நாளில் செலுத்தப்பட்டது. இவ்விண்கலம் எதிர்கால நிலவுப் பயணத்திற்குத் தேவையான தரவுகளைச் சேகரிக்க அனுப்பப்பட்டது. காஸ்மிக் கதிர்கள், காந்தப் புலம், கதிர்வீச்சு, தூசிப் பொருட்கள், ஹைட்ரஜன் வாயு, பூமியின் ஈர்ப்பின் தாக்கம் ஆகியவற்றை பற்றிய சோதனைக்காகச் செலுத்தப்பட்டது.[1]

வடிவம்

[தொகு]

இது ரேஞ்சர் 1 விண்கலத்தின் வடிவத்தை ஒத்தது. அறுங்கோண வடிவமுடையது. இதன் அடிப்பாகம் 1.5 மீட்டர் அளவுடையது. இதன் சூரிய மின்தகடுகள் 5.2 மீட்டர் அளவுடையன. இதன் அடிப்புறத்தில் அதிதிறன் அலை வாங்கி/செலுத்தி இணைக்கப்பட்டிருந்தது. இதன் 4 மீட்டர் உயரமுடைய கோபுரத்திலும் அடிப்புறத்திலும் சோதனைக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

ஏவுதல்

[தொகு]

இவ்விண்கலம் பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, பின்னர் பாதை மாறுமாறு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பூமியின் தாழ் வட்டப்பாதைக்குப் பின்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாய் திட்டமிட்டபடி செலுத்த இயலவில்லை. விண்கலம் நவம்பர் 20, 1961 அன்று பூமிக்குத் திரும்பியது.[1]

இதையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேஞ்சர்_2&oldid=2919084" இலிருந்து மீள்விக்கப்பட்டது