ரிஷிகங்கா ஆறு
ரிஷிகங்கா ஆறு ரிசிகங்கை ஆறு | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்ட் |
வருவாய் கோட்டம் | கார்வால் கோட்டம் |
மாவட்டம் | சமோலி |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | நந்தா தேவி பனிக் கொடுமுடி, ரிஷிகங்கா கொடுமுடி, தட்சினி கங்கா கொடுமுடி, நந்தாதேவி கொடுமுடி |
முகத்துவாரம் | தௌலிகங்கா ஆறு |
நீளம் | 40 km (25 mi) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
நீர்தேக்கங்கள் | ரிஷிகங்கா அணை |
ரிஷிகங்கா ஆறு (Rishiganga or Rishi Ganga) இந்தியாவின் வடக்கில் அமைந்த உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் பாய்கிறது. இமயமலையின் சிவாலிக் மலைத் தொடர்களில் ஒன்றான நந்தா தேவி பனிக்கொடுமுடிகளில், முக்கியமாக ரிஷிகங்கா கொடுமுடி, தட்சினி கங்கா கொடுமுடிகளிலிருந்து ரிஷி கங்கா ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு நந்தா தேவி தேசியப் பூங்கா வழியாக பாய்ந்து இறுதியில் சமோலி மாவட்டத்தில் உள்ள ரெய்னி கிராமத்தில் பாயும் தௌலி கங்கா ஆற்றுடன் கலக்கிறது. இந்த ஆறு 40 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
2021 உத்தராகண்ட் பனிப்பாறை வெடிப்பு வெள்ளம்
[தொகு]7 பிப்ரவரி 2021 காலை 10.45 மணி அளவில் பனிப்பாறை வெடிப்பு வெள்ளத்தால், ரிஷிகங்கா ஆறு மற்றும் தௌலிகங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ரெய்னி கிராமத்தில் பாயும் ரிஷி கங்கா ஆற்றில் குறுக்கே கட்டப்பட்ட அணையும், தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலையமும் பலத்த சேதம் ஏற்பட்டதுடன், பல மனித உயிர்களும் பலிகளும் பலியானது.[1][2]
படக்காட்சிகள்
[தொகு]-
ரிஷிகங்கா ஆற்றின் வரைபடம்
-
ரிஷிகங்கா பள்ளத்தாக்கு, 1934
மேற்கோள்கள்
[தொகு]- ↑ உத்தராகண்ட் பனிச்சரிவு: 20 பேர் உடல்கள் மீட்பு - 171 பேரின் கதி என்ன?
- ↑ "Uttarakhand flood wreaks death, damage". The Indian Express (in ஆங்கிலம்). 2021-02-08. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.