உள்ளடக்கத்துக்குச் செல்

ரத்லம் இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரத்லம் இராச்சியம்
रतलाम रियासत
சுதேச சமஸ்தானம், பிரித்தானிய இந்தியா
1652–1948
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of ரத்லம்
Location of ரத்லம்
ரத்லம் கோட்டம் மற்றும் சைலானா கோட்டத்தின் வரைபடம்
தலைநகரம் ரத்லம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1652
 •  இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
பரப்பு
 •  1901 2,336 km2 (902 sq mi)
Population
 •  1901 83,773 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் ரத்லாம் மாவட்டம்,மத்தியப் பிரதேசம், இந்தியா
இரத்லம் இராஜா பதாம் சிங்கின் சித்திரம் (1773–1800)
இரத்லாம் இராஜா சஜன் சிங், ஜெனரல் மைக்கேல் ரெமிங்டன், சர் பிரதாப் சிங் மற்றும் பிரான்சு நாட்டின் லிங்ஹம் குதிரை சவாரி செய்தல், நாள் 28 சூலை 1915
இரத்லம் இராஜா பைரோன் சிங் (பிறப்பு:.1839–இறப்பு:1864)

இரத்லம் இராச்சியம் (Ratlam State)[1] இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மத்தியப் பிர்தேச மாநிலத்தின் ரத்லம் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இரத்லாம் இராச்சியம் 2336 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 83,773 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப் படி 15 சூன் 1948 அன்று இரத்லம் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. தற்போது இந்த இராச்சியத்தின் பகுதிகள் மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதியில் உள்ள ரத்லம் மாவட்டத்தில் உள்ளது.

வரலாறு

[தொகு]

மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த இரத்லம் இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற இரத்லம் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் மால்வா முகமையின் கீழ் செயல்பட்டது. இரத்லம் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர்.

இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் சூரத் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, 15 சூன் 1948 அன்று இரத்லம் இராச்சியத்தின் பகுதிகள் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மால்வா பகுதியில் உள்ள ரத்லம் மாவட்டத்தில் உள்ளது.

ஆட்சியாளர்கள்

[தொகு]

இரத்லம் இராச்சியத்தின் ஆட்சியாளர்கள் இராஜபுத்திர குலத்தின் ரத்தோர் வம்சத்தினர் ஆவார்.[1][2]

ஆட்சிக் காலம் பெயர் குறிப்பு
1648–1658 இரத்தன் சிங் ரத்தோர்
1658–1682 இராம் சிங்

இவர் 24 ஆண்டுகள் ஆட்சி செய்து போரில் மடிந்தார்

1682–1701 கேசவதாஸ்

இவரது படைவீரர் அவுரங்கசீப்பின் வரி வசூலிப்பாளரை கொன்றதால், இவர் மன்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் சீதாமௌ இராச்சியம் இவருக்கு வழக்கப்பட்டது.

1705–1709 சத்திரசால் (இறப்பு. 1712)

இவர் முகலாயப் பேரரசில் தக்கானப் படைத்தலைவராக இருந்தார். இவர் பிஜப்பூர், கோல்கொண்டா சுல்தான்களுக்கு எதிராக போரிட்டார்.

1709 – பிப்ரவரி 1716 கேசரி சிங்
பிப்ரவரி 1716–1716 பிரதாப் சிங்
1716–1743 மான் சிங்
1743–1773 பிரிதிவி சிங்
1773–1800 பதாம் சிங்
1800–1825 பர்வத் சிங்
1825–29 ஆகஸ்டு 1857 பல்வந்த் சிங்
1825–c.1832 போர்த்விக் பிரித்தானிய அரசப் பிரதிநிதி
29 ஆகஸ்டு 1857 – 27 சனவரி 1864 பைரோன் சிங்
27 சனவரி 1864 – 20 சனவ்ரி 1893 ரஞ்சித் சிங்
27 சனவரி 1893 – 15 டிசம்பர் 1898 சஜ்ஜன் சிங் வயது வரும் அரசப்பிரதிநிதியின் ஆட்சி
20 சனவரி 1893 – 1 சனவரி 1921 சஜ்ஜன் சிங்
3 பிப்ரவரி 1947 – 15 ஆகஸ்டு 1947 லோகேந்திர சிங்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]