உள்ளடக்கத்துக்குச் செல்

மௌலவி (இசுலாமியப் பட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மௌலவி (மவ்லவி, மவுலவி; அரபி: مولوی ), சுன்னி இஸ்லாமிய சமய அறிஞர்களுக்கு அல்லது உலமா எனப்படும் ஷரீஅத் சட்ட அறிஞர்களுக்கு வழங்கப்படும் கௌரவப் பட்டமாகும். இது மௌலானா, முல்லா மற்றும் ஷெய்க் என்பது போன்றதொரு பட்டமாகும். பொதுவாக இது இசுலாமியக் கல்வியில் தேர்ந்த அறிஞரைக் குறிக்கும். வழமையாக இவர்கள் ஓர் மதரசா (இசுலாமியக் கல்விக்கூடம்) அல்லது தாருல் உலூம் (இசுலாமிய மடாலயம்) கல்வியகங்களில் படித்து முழுமையான இசுலாமியச் சமய அறிவு பெற்றிருப்பார்கள். இது பாரசீக மக்கள் வாழும் ஈரான், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர்ச்சொல் ஆசிரியர் அல்லது பிரபு எனப்பொருள்படும் அரபி மொழியின் "மௌலானா" என்பதாகும்.[1]

மேற்சான்றுகள்

[தொகு]