மேற்கு நியூ கினி
மேற்கு நியூ கினி
பாப்புவா மேற்கு இரியன்/ இரியன் ஜெயா/ மேற்கு பாப்புவா டச்சு நியூ கினியா | |
---|---|
இந்தோனேசியாவின் பிரதேசங்கள் | |
நாடு | இந்தோனேசியா |
மாகாணங்கள் |
|
பெரிய நகரங்கள் |
|
பரப்பளவு | |
• மொத்தம் | 4,12,214.61 km2 (1,59,156.95 sq mi) |
மக்கள்தொகை (2022ம் ஆண்டின் மதிப்பீடு)[1] | |
• மொத்தம் | 56,01,888 |
• அடர்த்தி | 14/km2 (35/sq mi) |
நேர வலயம் | ஒசநே+09:00 (இந்தோனேசியாவின் கிழக்கு நேரம்) |
ISO 3166-2 | ID-PP[2] |
வாகனப் பதிவு |
|
மேற்கு நியூ கினி (Western New Guinea), அல்லது பப்புவா (Papua), இந்தோனேசிய நியூ கினி (Indonesian New Guinea), இந்தோனேசிய பப்புவா, (Indonesian Papua)[3] என்பது நியூ கினி தீவின் மேற்கு அரைப்பகுதி ஆகும். இது முன்னாள் இடச்சுப் பகுதியும், தற்போது இந்தோனேசியாவின் பகுதியாகவும் உள்ள தீவுப் பகுதி ஆகும். 1962 ஆம் ஆண்டில் இது இந்தோனேசியாவிற்குக் கொடுக்கப்பட்டது. தீவுக்கு மாற்றாக "பப்புவா" என்று பெயரிடப்பட்டதால், இப்பகுதி மேற்கு பப்புவா (இந்தோனேசிய மொழி: Papua Barat) என்றும் அழைக்கப்படுகிறது.[4]
பப்புவா நியூ கினியின் மேற்கே அமைந்துள்ள மேற்கு நியூ கினி, புவியியல் ரீதியாக ஆத்திரேலியக் கண்டத்தின் ஒரு பகுதியாகும், இந்த பிரதேசம் கிட்டத்தட்ட முழுவதுமாக தெற்கு அரைக்கோளத்தில் உள்ளது. பியாக், ராஜா ஆம்பாத் தீவுக்கூட்டங்களை இது உள்ளடக்கியுள்ளது. பாலியம் பள்ளத்தாக்கின் டானி உட்பட பாரம்பரிய மக்கள் வாழும் இப்பகுதி முக்கியமாக மழைக்காடுகளால் மூடப்பட்டுள்ளது. மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் கடலோரப் பகுதிகளில் அல்லது அருகில் வாழ்கின்றனர். இதன் மிகப்பெரிய நகரம் ஜெயப்புரா ஆகும்.
1940களின் பிற்பகுதியில், மேற்கு நியூ கினியைத் தவிர ஏனைய டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகள் இந்தோனேசியாவின் இறைமை மிக்க பகுதிகளாக மாறின. 1962 ஆகத்து 15 இல் நியூயார்க் ஒப்பந்தம் மூலம் இந்தோனேசியப் பிராந்தியம் உருவாகும் வரை, மேற்கு நியூ கினி (டச்சு நியூ கினி) மீது டச்சுக்காரர்கள் இறையாண்மையைத் தக்க வைத்துக் கொண்டனர். 1973 இல் இரியன் ஜெயா (அதாவது "புகழ்பெற்ற இரியன்"), அத்துடன் 2002 இல் பப்புவா என மறுபெயரிடப்படுவதற்கு முன்னர் இப்பகுதி இரியன் பராத் (மேற்கு இரியன்) மாகாணமாக இருந்தது.[5] 2003 இல், பப்புவா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் இருந்து இரண்டாவது மாகாணம் உருவாக்கப்பட்டது; இது மேற்கு பப்புவா என்று அழைக்கப்பட்டது, அதன் நிர்வாக தலைநகரம் மனோக்வாரி. இரண்டு மாகாணங்களும் இந்தோனேசிய சட்டத்தால் சிறப்புத் தன்னாட்சி அதிகாரத்தைப் பெற்றன. நவம்பர் 2022 இல் பப்புவா மாகாணத்தின் மேற்குப் பகுதிகளிலிருந்து - மத்திய பப்புவா, மேநிலப் பப்புவா, தெற்கு பப்புவா - ஆகிய மாகாணங்களும், தென்மேற்கு பப்புவா என்ற கூடுதல் மாகாணமும் உருவாக்கப்பட்டன. இவை (மீதமுள்ள) மேற்கு பப்புவா, பப்புவா மாகாணங்கள் போன்ற அதே சிறப்பு தன்னாட்சி அதிகாரத்தைப் பெற்றன, பிந்தையது இப்போது வடக்கு பப்புவா மற்றும் செண்டரவாசி விரிகுடாவில் உள்ள தீவுகளின் குழுக்களாக குறைக்கப்பட்டுள்ளது.
2020 இல், மேற்கு பப்புவா, பப்புவா மாகாணங்களின் மக்கள்தொகை 5,437,775 ஆகும், இவர்களில் பெரும்பான்மையானோர் பழங்குடிகள் ஆவர்;[6] 2022 நடுப்பகுதியினல் மக்கள் தொகை 5,601,888 ஆக மதிப்பிடப்பட்டது.[1]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 2023.
- ↑ "Indonesia Provinces". www.statoids.com.
- ↑ "Indonesian Papua: A Local Perspective on the Conflict". International Crisis Group. 2007. பார்க்கப்பட்ட நாள் 23 April 2021.
- ↑ Saltford, J. (2003). The United Nations and the Indonesian Takeover of West Papua, 1962–1969: the anatomy of betrayal (1st ed.). London: Routledge.
- ↑ "Papua". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்.
- ↑ "BPS Provinsi Papua Barat".