மெசஞ்சர் (விண்கலம்)
புதனின் சுற்றுப்பாதையில் மெசெஞ்சர் (ஓவியரின் பார்வையில்) | |
இயக்குபவர் | நாசா / ஏபிஎல் |
---|---|
முதன்மை ஒப்பந்தக்காரர் | ஏபிஎல் |
திட்ட வகை | அணுக்கம் / விண்சுற்றுக்கலன் |
அணுகிய விண்பொருள் | பூமி, வெள்ளி, புதன் |
செயற்கைக்கோள் | புதன் |
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள் | 2011, மார்ச் 18, 01:00 ஒசநே[1] |
ஏவப்பட்ட நாள் | 2004, ஆகத்து 3, 06:15:56 ஒசநே (20 ஆண்டுகள், 2 மாதங்கள், 28 நாட்கள் இற்கு முன்னர்) |
ஏவுகலம் | டெல்ட்டா II 7925H-9.5 |
ஏவு தளம் | கேப் கேனவரல் |
திட்டக் காலம் | பூமியை அணுக்கம் (2005-08-02 இல் நிறைவு) வெள்ளியை அணுக்கம் 1 (2006-10-24 இல் நிறைவு) வெள்ளியை அணுக்கம் 2 (2007-06-05 இல் நிறைவு) புதனை அணுக்கம் 1 (2008-01-14 இல் நிறைவு) புதனை அணுக்கம் 2 (2008-10-06 இல் நிறைவு) புதனை அணுக்கம் 3 (2009-09-29 இல் நிறைவு) புதனின் சுற்றுப்பாதைக்குள் சென்றமை (2011-03-18 இல் நிறைவு) புதனில் மோதுகை (2015-04-30 இல் நிறைவு) |
தே.வி.அ.த.மை எண் | 2004-030A |
இணைய தளம் | JHU/APL இணையத்தளம் |
நிறை | 485 கிகி (1,069 இறா) |
திறன் | 450 W (சூரியமின்கல அணி) / 11 NiH2 மின்கலங்கள் |
மெசஞ்சர் (MErcury Surface, Space ENvironment, GEochemistry and Ranging, MESSENGER) என்பது புதன் கோளின் வேதியியல் கட்டமைப்பு, நிலவியல் அமைப்பு, மற்றும் காந்தப்புலம் போன்றவற்றை அறிவதற்காக ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனத்தினால் 2004 ஆகத்து மாதத்தில் ஏவப்பட்ட ஒரு அமெரிக்கத் தானியங்கி விண்கலம் ஆகும்.[2] இது 485-கிகி (1067 இறாத்தல்) எடை கொண்டது. 1975 ஆண்டில் புதனை நோக்கி அனுப்பப்பட்ட மரைனர் 10 விண்கலத்துக்கு அடுத்தபடியாக அனுப்பப்பட்ட இரண்டாவது விண்கலம் ஆகும்.[3] இதுவே புதனின் சுற்றுப்பாதைக்குச் சென்ற முதலாவது விண்கலமும் ஆகும்.[2]
மெசஞ்சர் விண்கலம் பூமியை ஒரு தடவையும், வெள்ளியை இரு தடவைகளும், புதனை மூன்று தடவைகளும் வெற்றிகரமாக அணுகியுள்ளது. இதன்போது இதில் பொருத்தப்பட்ட உபகரணங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டன. 2011, மார்ச் 18 ஆம் நாள் மெசெஞ்சர் வெற்றிகரமாக புதனின் சுற்றுப்பாதைக்குள் சென்றது. 2011 மார்ச் 24 இல் இதன் ஆய்வு உபகரணங்கள் மீள இயக்க வைக்கப்பட்டு, புதனின் சுற்றுப்பாதியில் இருந்தான தனது முதலாவது படத்தை 2011 மார்ச் 29 இல் அனுப்பி வைத்தது. மெசஞ்சர் தனது முதன்மையான திட்டப்பணியை 2012 இல் முடித்தது.[4]
இரண்டு மேலதிக திட்டங்களுடன், மெசஞ்சரின் திட்டம் 2015 ஏப்ரல் 30 இல் நிறைவடைந்தது.[5][6][7] மெசஞ்சர் தனது கடைசி சார்பியக்க உந்துபொருளைப் பயன்படுத்தியதை அடுத்து, அது சுற்றுப்பாதைச் சிதைவை அடைந்து, இறுதியில் புதனில் மோதிக் கொண்டது.[8][9]
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ http://www.nasa.gov/connect/chat/messenger_chat.html
- ↑ 2.0 2.1 "NASA Spacecraft Circling Mercury". நியூயோர்க் டைம்சு. மார்ச் 17, 2011. http://www.nytimes.com/aponline/2011/03/17/science/AP-US-SCI-Mercury.html?ref=science. பார்த்த நாள்: சூலை 9, 2013.
- ↑ "Countdown to MESSENGER's Closest Approach with Mercury". Johns Hopkins University. சனவரி 14, 2008 இம் மூலத்தில் இருந்து 2013-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130513080731/http://messenger.jhuapl.edu/gallery/sciencePhotos/image.php?gallery_id=2&image_id=115. பார்த்த நாள்: மே 1, 2009.
- ↑ "MESSENGER Completes Its First Extended Mission at Mercury". JHU – APL. மார்ச் 18, 2013. Archived from the original on 2013-07-29. பார்க்கப்பட்ட நாள் சூலை 8, 2013.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Wall, Mike (மார்ச் 29, 2015). "NASA Mercury Probe Trying to Survive for Another Month". Space.com. http://www.space.com/28948-messenger-mercury-probe-final-days.html. பார்த்த நாள்: ஏப்ரல் 4, 2015.
- ↑ Chang, Kenneth (ஏப்ரல் 27, 2015). "NASA’s Messenger Mission Is Set to Crash Into Mercury". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2015/04/28/science/nasas-messenger-mission-is-set-to-crash-into-mercury.html. பார்த்த நாள்: ஏப்ரல் 27, 2015.
- ↑ Corum, Jonathan (ஏப்ரல் 30, 2015). "Messenger’s Collision Course With Mercury". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/interactive/2015/04/30/science/space/messenger-collides-with-mercury.html. பார்த்த நாள்: ஏப்ரல் 30, 2015.
- ↑ "From Mercury orbit, MESSENGER watches a lunar eclipse". Planetary Society. அக். 10, 2014. பார்க்கப்பட்ட நாள் சனவரி 23, 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Innovative use of pressurant extends MESSENGER's Mercury mission". Astronomy.com. டிசம்பர் 29, 2014. பார்க்கப்பட்ட நாள் சனவரி 22, 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)