உள்ளடக்கத்துக்குச் செல்

மாயன் கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திக்கல் என்னுமிடத்தில் காணப்படும் மாயன் பிரமிட்டு

மாயன் கட்டிடக்கலை பல ஆயிரம் ஆண்டுகள் நிலவிய ஒரு கட்டிடக்கலை ஆகும். இருந்தாலும், இப்பாணியைச் சேர்ந்ததாக இலகுவில் எல்லோராலும் அடையாளம் காணக்கூடியவை, படியமைப்புப் பிரமிட்டுகள் ஆகும். பொதுவான நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை மரபைச் சார்ந்த இப்பிரமிட்டுகள், மிகவும் நுணுக்கமான செதுக்கு வேலைப்பாடுகளோடு கூடிய கற்களால் ஆனவை. ஒவ்வொரு பிரமிட்டும் குறிப்பிட்ட ஒரு கடவுளுக்கு உரியது. இக் கடவுளுக்கான கோயில் இப் பிரமிட்டுகளின் உச்சியில் அமைந்திருக்கும். மாயன் பண்பாட்டின் உச்ச நிலையில், அவர்களின் சமய, வணிக மற்றும் அதிகாரம் சார்ந்த வல்லமை சிச்சென் இட்சா (Chichen Itza), திக்கல் (Tikal), உக்ஸ்மால் (Uxmal) போன்ற பெரிய நகரங்களை உருவாக்கியது.

நகர அமைப்பு

[தொகு]

மாயன் நகரங்கள் மெசோ அமெரிக்காவின் பல்வேறுபட்ட புவியியல் தன்மை கொண்ட பகுதிகளில் பரந்து இருக்கின்றன. இவற்றில் திட்டமிடல் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. ஒவ்வொரு அமைவிடத்துக்கும் ஏற்றபடி நகரங்கள் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நகரங்களின் கட்டிடக்கலையில் இயற்கை அம்சங்கள் பெருமளவில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, வட யுக்தான் பகுதியில் சுண்ணாம்புக்கற் சமவெளிகளில் உள்ள நகரங்கள் பரந்து விரிந்த பெருநகரங்களாக வளர்ந்தன. அதே சமயம், உசுமகிந்தா மலைப் பகுதியில் காணும் நகரங்கள் இயற்கையான சமதளங்களைப் பயன்படுத்திக் கோயில்களையும், கோபுரங்களையும் உயரமாக அமைத்துள்ளனர். எனினும் பெரிய நகரங்களுக்குரிய சில ஒழுங்கு முறைகள் மாயன் நகரங்களிலும் காணப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

[தொகு]