உள்ளடக்கத்துக்குச் செல்

மான்டோரின் ஜோதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மான்டோரின் இராவ் ஜோதா
மாண்டோரின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்அண். 1438 – அண். 1489
முன்னையவர்இரன்மால்
பின்னையவர்ராவ் சதல்
பிறப்பு28 மார்ச்சு 1416
இறப்பு6 ஏப்ரல் 1489(1489-04-06) (அகவை 73)
துணைவர்ஹாதி ராணி ஜஸ்மேட்
மேலும் பலர்
குழந்தைகளின்
#Issue
சதல்
சுஜா
பிகா
பெயர்கள்
இரத்தோர் வம்சம்
தந்தைஇரன்மால்
தாய்இராணி பதியானி கோரம் தே [1]

இராவ் ஜோதா ரத்தோர் ( Rao Jodha Rathore ; 28 மார்ச் 1416 - 6 ஏப்ரல் 1489) இன்றைய இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மாண்டோரின் ஆட்சியாளராக இருந்தார். இவர் இரத்தோர் குலத்தைச் சேர்ந்த இராவ் இரன்மாலின் (ராவ் ரித்மல்) மகனாவார். இவர் தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கைக்காகவும், 1459 இல் சோத்பூர் நகரத்தை நிறுவியதற்காகவும் அறியப்படுகிறார்.

பரம்பரை

[தொகு]

இரன்மால் 1427 இல் மண்டோரின் அரியணையைப் பெற்றார். மாண்டோரை ஆட்சி செய்ததோடு, மகாராணா மோகலுக்கு ( ராணா கும்பாவின் தந்தை) உதவ மேவார் நிர்வாகியாகவும் ஆனார். 1433-இல் இரண்டு சகோதரர்களால் (சாச்சா மற்றும் மேரா) மகாராணா மோகால் படுகொலை செய்யப்பட்ட பிறகு, ராணா கும்பாவின் பக்கத்தில் மேவாரின் நிர்வாகியாக இரன்மல் தொடர்ந்தார்.

ஆரம்ப ஆண்டுகளில்

[தொகு]

ராணா கும்பா ராவ் ஜோதாவின் தந்தை ராவ் ரன்மாலை படுகொலை செய்த பிறகு, ராவ் ஜோதா தனது ஆட்களுடன் மேவாரிலிருந்து தப்பினார். சித்தோர்காரில் இருந்து ராவ் ஜோதாவுடன் சுமார் 700 குதிரை வீரர்கள் சென்றனர். சித்தூர் அருகே நடந்த சண்டையாலும், சோமேசுவர் கணவாயில் பின்தொடர்பவர்களைத் தடுக்கும் துணிச்சலான முயற்சியாலும் ஜோதாவின் வீரர்களிடையே பெரும் இழப்பை ஏற்படுத்தியது. ஜோதா மாண்டோரை அடைந்தபோது அவருடன் ஏழு பேர் மட்டுமே இருந்தனர். ஜோதா தன்னால் இயன்ற படைகளைச் சேகரித்து, மாண்டோரைக் கைவிட்டு, ஜங்கலுவை நோக்கிச் சென்றார். அனாலும் கஹுனியில் (இன்றைய பிகானேருக்கு அருகிலுள்ள ஒரு கிராமம்) பாதுகாப்பை அடைய முடியவில்லை.

மார்வார் - மேவார் போர்

[தொகு]

15 ஆண்டுகளாக ஜோதா மாண்டோரை மீண்டும் கைப்பற்ற முயன்றது வீணாகிப் போனது. 1453 இல் தாக்குதலுக்கான வாய்ப்பு கிடைத்தது. மால்வா மற்றும் குசராத்தின் சுல்தான்களின் ஒரே நேரத் தாக்குதல்களை ராணா கும்பா எதிர்கொண்டார். 'செட்ராவா'வின்' தாக்கூர்கள் மற்றும் பிற சாகிர்தார்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட குதிரைகளைப் பயன்படுத்தி ஜோதா மாண்டோர் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். ஜோதாவின் படைகள் பாதுகாவலர்களை முறியடித்து, மாண்டோரை எளிதாகக் கைப்பற்றின. ஜோதா பின்னர் சௌகடே, சோஜாத், மெர்டா, பஹிருண்டா மற்றும் கோசானா ஆகியவற்றை அடுத்தடுத்து கைப்பற்றினார். ராணா கும்பா இந்த பிரதேசங்களை மீண்டும் கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் தோல்வியுற்றார். ஜோதாவும் கும்பாவும் இறுதியில் தங்கள் பொதுவான எதிரிகளான மால்வா மற்றும் குசராத்தின் ஆட்சியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொண்டனர்.

மண்டோரைக் கைப்பற்றுதல்

[தொகு]

ஜோதா மாண்டோரை நேரடியாகத் தாக்காமல் வெளியிலுள்ள கோட்டைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இதன் மூலம் எளிதாக வெற்றி பெற முடிந்தது. [2]

பிற்கால வெற்றிகள்

[தொகு]

ராணா கும்பாவுடனான ஜோதாவின் போரை தில்லி சுல்தான்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாகூர், ஜலோர் மற்றும் சிவனா உள்ளிட்ட பல ரத்தோர் கோட்டைகளைக் கைப்பற்றியது. ஜோதா தியோரா மற்றும் பாடி உட்பட பல இராஜபுத்திர குலங்களுடன் கூட்டணி அமைத்து தில்லி இராணுவத்தைத் தாக்கி, தில்லி சுல்தானகத்திலிருந்து மெர்டா, பலோடி, பொக்ரான், பத்ராஜுன், சோஜாத், ஜெய்தரன், சிவனா, நாகௌர் மற்றும் கோத்வார் ஆகிய இடங்களைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார். இந்த பகுதிகள் தில்லியில் இருந்து நிரந்தரமாக கைப்பற்றப்பட்டு மார்வாரின் ஒரு பகுதியாக மாறியது. மேலும், இராஜ்புதனத்தில் மிகவும் சக்திவாய்ந்த இராச்சியமாகவும் ஆனது. [3] [4] [5]

ஜோத்பூரின் அடித்தளம்

[தொகு]

சோத்பூர், தில்லி முதல் குசராத்து வரையிலான வர்த்தகப் பாதையில் இருந்ததால், பட்டு, அபினி, சந்தனம், தாமிரம் மற்றும் இதர பொருட்களின் வர்த்தகத்தால் பெரிதும் பயனடைந்தது. இதனால் தலைநகருக்கு பாதுகாப்பு வேண்டி மாண்டோருக்கு தெற்கே ஒன்பது கிமீ தொலைவில் 1459 இல் ஜோதாவால் ஒரு கோட்டையின் கட்டுமானம் தொடங்கப்பட்டு ஜஸ்வந்த் சிங்கால் (1637-1680) மேம்படுத்தப்பட்டது. 125 மீ உயரமுள்ள மலையில் அமைந்துள்ள மெஹ்ரன்கர் கோட்டை இராஜஸ்தானில் உள்ள மிகவும் ஈர்க்கக்கூடிய மற்றும் வலிமையான கோட்டைகளில் ஒன்றாகும்.

இறப்பு

[தொகு]

ராவ் ஜோதா, 6 ஏப்ரல் 1489 அன்று தனது 73வது வயதில் இறந்தார். ஜோதாவின் மரணத்தைத் தொடர்ந்து இவரது மகன்களிடையே வாரிசுரிமைக்கான போராட்டம் நடந்தது. இவருக்குப் பின் இவரது மகன் ராவ் சாடல் (1489–1491) ஆட்சிக்கு வந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது சகோதரர் ராவ் சுஜா (1491-1515) அரியணையை ஆக்கிரமித்தார். [6]

இதனையும் பார்க்கவும்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. Mertiyo Rathors of Merta, Rajasthan Volume II: p. 12
  2. Reu, Vishveshwarnath, Marwar Ka Itihas, Part 1, p88
  3. Kothiyal, Tanuja (2016). Nomadic Narratives: A History of Mobility and Identity in the Great Indian. Cambridgr University Press. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107080317.
  4. Jibraeil: "Position of Jats in Churu Region", The Jats - Vol. II, Ed Dr Vir Singh, Delhi, 2006, p. 223
  5. G.S.L. Devra, op. cit., 7-8, Cf. Dayaldas ri Khyat, part 2, p. 4-5
  6. Majumdar, Ramesh Chandra; Pusalker, A. D.; Majumdar, A. K., eds. (1960). The History and Culture of the Indian People. Vol. VI: The Delhi Sultanate. Bombay: Bharatiya Vidya Bhavan. pp. 355–357. The death of Jodha in 1488 was followed by a struggle among his sons for succession ... [the nobles] consecrated Satal ... Shortly afterwards, however, Satal died ... another brother, Suja, secured the throne ... History repeated itself when Suja died in 1515 ... [Satal] fell mortally wounded in the battlefield (1491).

குறிப்புகள்

[தொகு]
  • Sharma, Dasharatha (1970). Lectures on Rajput History and Culture, Delhi:Motilal Banarsidass.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்டோரின்_ஜோதா&oldid=3712672" இலிருந்து மீள்விக்கப்பட்டது