உள்ளடக்கத்துக்குச் செல்

மல்லாடி சுப்பம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லாடி சுப்பம்மா

மல்லாடி சுப்பம்மா (Malladi Subbamma) (2 ஆகஸ்ட் 1924 - 15 மே 2014) குண்டூர் மாவட்டத்தின் ரெபெல்லாவில் உள்ள போதார்த்தகத்தில் 1924 ஆம் ஆண்டு ஆகத்து 24 ஆம் நாள் பிறந்தார். அவர் ஒரு பெண்ணிய எழுத்தாளரும், பகுத்தறிவுவாதியும் மற்றும் ஸ்ட்ரீ ஸ்வெட்சாவின் ஆசிரியரும் ஆவார் ( transl. பெண்களின் விருப்பம் ). இவர் பெண்களின் கல்வியில் கவனம் செலுத்தி அவர்களின் மேம்பாட்டுக்காக உழைத்தார். மது ஒழிப்பு இயக்கத்தை முன்னெடுத்த பிறகு, இவர் ஐக்கிய ஆந்திராவில் ஒரு முக்கிய நபராக ஆனார். இந்த இயக்கம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் காரணமாக மாநிலத்தில் மது விற்பனைக்கு தடை 1994 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. [1] பெண்கள் முன்னேற்ற நிறுவனத்தின் தலைவராக, இவர் பெண்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக பல கல்வியறிவு முகாம்களை நடத்தினார். இவர் மனித நேயத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். மனித நேயத்தை வலியுறுத்தி, அதற்காக இவர் நாடு முழுவதும் பயணம் செய்தார். 2012 ஆம் ஆண்டில், இவர் தனது உடமைகளை விற்று, வருமானத்தை அனைத்துலக பெண்கள் தினத்தன்று ஐராபாத்து பல்கலைக்கழகத்தில் பெண்கள் ஆய்வு மையத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்டிடத்திற்கு நன்கொடையாக வழங்கினார். [2] இவர் முக்கியமாக பெண்கள் அதிகாரம் மற்ற பெண்கள் பிரச்சினைகள் குறித்து 110 புத்தகங்கள் மற்றும் 500 கட்டுரைகளை எழுதியுள்ளார். [3]

வாழ்க்கை

[தொகு]

பாப்பாட்லாவில் வசிக்கும் மல்லாடி வெங்கட ராமமூர்த்தியை மணந்தார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள். இங்கு படிப்பதற்கு மாமியார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இவர் தன் கணவரின் உதவியுடன், இவர் வீட்டிலேயே கல்வியைக் கற்று, பத்தாம் வகுப்பை முடித்தார். பல்கலை புகுநிலை வகுப்பு, இளங்கலைப் பட்டம் ஆகியவற்றை முடித்த இவர் குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரகராக சில ஆண்டுகள் வேலை செய்தார். ஸ்ட்ரீ ஹிதைஷினி மண்டலியின் செயலாளராகவும், பெண்கள் பள்ளியின் மேலாளராகவும், சாரதா மகிளா ஞான சமிதியின் தலைவராகவும் பணியாற்றினார். 1970 இல், அவர் விஜயவாடாவில் விகாசம் இதழை நிறுவி பத்து வருடங்கள் நடத்தினார். திரைப்பட சங்கத்தின் தலைவரானார். லண்டனில் 1978 உலக மனிதநேய மாநாட்டில் பங்கேற்றார். 1980 இல் மகிளா பியூதயம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. இந்த அமைப்பில் திருமணங்கள் மிகக்குறைந்த செலவில், இரண்டு மாலைகள் மற்றும் இரண்டு ஒளிப்படங்கள் என்ற அளவில் மிகச்சிக்கனமாக நடத்தப்பட்டது. இவர் பெண்கள் மேம்பாட்டு நூலகம், குடும்ப ஆலோசனை மையம், பெண்கள் விடுதலை பயிற்சி மையம், வரதட்சணை வன்முறை விசாரணை ஆணையம், பெண்கள் உரிமை பாதுகாப்பு மையம், வேலை செய்யும் பெண்கள் சேவை, சுப்பம்மா தங்குமிடம், மல்லாடி சுப்பம்மா அறக்கட்டளை ஆகியவற்றின் மூலம் பெண்களுக்கு சேவை செய்துள்ளார். இவர் 1979 முதல் ஆந்திர பகுத்தறிவாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், 1989 முதல் அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். அறுபதுக்கும் மேற்பட்ட பங்களிப்பை வழங்கியுள்ளார். பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்குப் பல்கலைக்கழகம் ஆந்திராவில் மகிளாத்யம் - மகிளா சங்கலு 1960-1993 புத்தகத்திற்காக சிறந்த புத்தக விருதை வென்றது. எம்.ஏ.தாஸ் சமூக சேவைக்காக தேசிய மனித உரிமைகள் விருது பெற்றார்.[4]

மறைவு

[தொகு]

மல்லாடி சுப்பம்மா 2014 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் மறைந்தார். சுப்பம்மாவின் மறைவுக்கு தெலுங்கு தேசத் தலைவர் என். சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்த செய்தியில், சமுதாயத்திற்காக, குறிப்பாக பெண்களுக்காக, அவரது எழுத்துக்கள் மூலம் அவர் செய்த சேவைகளை அவர் நினைவு கூர்ந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஒய். எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, சுப்பம்மா ஒரு முக்கிய செயல்பாட்டாளர் மற்றும் எழுத்தாளராக இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Malladi Subbamma dead - The Hindu". பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
  2. "Malladi Subbamma's deed builds women studies center". பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
  3. "The Art of Giving – A central Central University". பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
  4. "ప్రముఖ రచయిత్రి మల్లాది సుబ్బమ్మ కన్నుమూత". Sakshi (in தெலுங்கு). 2014-05-15. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.
  5. "Malladi Subbamma dead". The Hindu (in Indian English). 2014-05-15. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.