உள்ளடக்கத்துக்குச் செல்

மருத்துவ சொற்களஞ்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாம்புச் சுருளைக் கொண்ட தடியை ஏந்தியிருக்கும், கிரேக்கத் தொன்மவியலின்படி, கிரேக்கர்களின் மருத்துவத்தின் கடவுளான அசுக்லெப்பியுசுவின் சிலை

மருத்துவ சொற்களஞ்சியம் என்பது மருத்துவம், அதன் துணை பிரிவுகள் மற்றும் தொடர்புடைய துறைகள் பற்றிய வரையறைகளின் பட்டியலை உள்ளடக்கியதாக அமையும்.

சொற்களின் பட்டியல்

[தொகு]

(குறிப்பு: இந்தப் பட்டியல் முழுமையானதல்ல.)

| | | | | | | | | | |
| | | | | | | | | | | | | | | | |
| | | | க்ஷ | ஸ்ரீ | #

அடிவயிறு (abdomen) : நெஞ்சுக் கூட்டினை அடுத்துக் கீழே உள்ள மிகப்பெரிய உடல் பகுதி; மார்பு மற்றும் இடுப்புக்கு இடையில் உள்ள உடலின் ஒரு பகுதி. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து இதைப் பிரிக்கிறது. பெரும்பாலும் தசையினாலும், தசைநார் சூழ்ந்த தசைப்பட்டையாலும் சூழப்பட்டிருக்கும். வடிவ அளவை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது.
அடிவயிற்று வலி (abdominal pain) : குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் குடைவு வலியும் குமட்டலும் ஆகும். இது பெரும்பாலும் தலை வலியுடன் தொடர்புடையது
அசிட்டாசோலமைடு (acetazolamide) குறுகிய காலத்திற்கு சிறு நீர்க்கழிவினைத் துண்டுவதற்காக வாய்வழியே கொடுக்கப்படும் நீர்நீக்கி, கரிமம் சார்ந்த மருந்துப் பொருள். கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது
அசிட்டோ அசிட்டிக் அமிலம் (acetoacetic acid) : மனிதர் உடலில் கொழுப்புப் பொருள்கள் ஆக்சிகரமாகும் போது ஒர் இடைநிலையில் அசிட்டோ அசிட்டிக் அமிலம் உற்பத்தியாகிறது. இரத்தத்தில் அளவுக்கு மேல் அமிலம் இருத்தல் அல்லது நீரிழிவு போன்ற சில வளர்சிதை மாற்றக்கோளாறுகளால் இரத்தத்தில் அளவுக்கு மீறி அதிகரித்து சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.