உள்ளடக்கத்துக்குச் செல்

மகெர்சலா அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகெர்சலா அலி
Mahershala Ali
2019 சான் டியேகோ காமிக்-கான் இல் மகெர்சலா அலி
பிறப்புமகெர்சலால்யசுபசு கில்மோர்
பெப்ரவரி 16, 1974 (1974-02-16) (அகவை 50)
ஓக்லண்ட், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா[1]
மற்ற பெயர்கள்மகெர்சலா கரிம்-அலி,
கெர்சல் கில்மோர்
கல்விதூய மேரி கல்லூரி, கலிபோர்னியா (இளங்கலை)
நியூ யார்க் பல்கலைக்கழகம் (முதுகலை)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
அமாடசு சமி-கரிம் (தி. 2013)
பிள்ளைகள்1

மகெர்சலா அலி (ஆங்கிலம்:Mahershala Ali; /məˈhɜːrʃələ/; பிறப்பு மகெர்சலால்யசுபசு கில்மோர், பிப்ரவரி 16, 1974) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் ஆவார். தனது நடிப்பிற்காக பல விருதுக்ளை வென்றுள்ளார்- அதில் இரண்டு அகாதமி விருதுகள், ஒரு கோல்டன் குளோப் விருது மற்றும் ஒரு பிரதானநேர எம்மி விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை. டைம் இதழ் இவரை உலகின் 100 செல்வாக்கு மிகுந்தவர்களில் ஒருவராக 2019 இல் அறிவித்தது.[2] மேலும் 2020 இல் த நியூயார்க் டைம்ஸ் இவரை 21-ஆம் நூற்றாண்டின் 25 மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக அறிவித்தது.[3]

தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (2008), மூன்லைட்டு (2016), கிறீன் புக் (2018) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதினை வென்றுள்ளார். அகாதமி விருதினை வென்ற முதல் இசுலாமியர் இவரே.[4][5] மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் (MCU) நடித்துள்ளார் - நெற்ஃபிளிக்சு தொலைக்காட்சி தொடர் லூக் கேஜ் (2016).

மேற்கோள்கள்

[தொகு]
  1. Viera, Bene (ஆகத்து 15, 2016). "Mahershala Ali Quit House of Cards and Became Marvel's New Villain". GQ. பார்க்கப்பட்ட நாள் சூலை 12, 2020.
  2. Spencer, Octavia (ஏப்ரல் 17, 2019). "Mahershala Ali". Time. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 17, 2019. {{cite magazine}}: Check date values in: |access-date= and |date= (help)
  3. Dargis, Manohla; Scott, A.O. (நவம்பர் 25, 2020). "The 25 greatest actors of the 21st century (so far)". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/interactive/2020/movies/greatest-actors-actresses.html. 
  4. Mark Olsen (மார்ச்சு 15, 2021). "Riz Ahmed is the first Muslim nominated for lead actor Oscar". Los Angeles Times. https://www.latimes.com/entertainment-arts/movies/story/2021-03-15/oscars-2021-riz-ahmed-first-muslim-best-actor-nominee. "Actor Mahershala Ali became the first Muslim actor to win an Oscar when he took home the statuette for supporting actor for 'Moonlight' in 2017 and won the same prize in 2019 for 'Green Book.'" 
  5. Yglesias, Matthew (பிப்ரவரி 24, 2019). "Oscars 2019 milestones: Black Panther and Roma broke boundaries". Vox. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 25, 2019. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகெர்சலா_அலி&oldid=3604654" இலிருந்து மீள்விக்கப்பட்டது