போரஸ்
போரஸ் | |
---|---|
மன்னர் போரஸ் | |
அலெக்சாண்டரிடம் சரணடையும் போரஸ், ஓவியம் ஆண்டு, 1865 | |
பௌரவ மன்னர்கள் | |
ஆட்சி | கிமு 340–317 |
முன்னிருந்தவர் | பாமினி |
பின்வந்தவர் | மலயகேது |
மரபு | பௌரவ அரசமரபு |
தந்தை | பமினி |
தாய் | அனுசுயா |
பிறப்பு | பஞ்சாப் |
இறப்பு | கிமு அண். 321 – அண். 315 பஞ்சாப் |
சமயம் | பிற்கால வேதகால சமயம் |
போரஸ் அல்லது புருசோத்தமன் (Porus), பண்டைய இந்தியாவின் பஞ்சாப் பகுதிகளை ஆண்டவர் ஆவார். மாமன்னர் யயாதியின் மகன் புருவின் வழித்தோன்றலான பௌரவ ( பாண்டவ மற்றும் கௌரவர்கள்) அரச மரபினர் ஆவார்.[2]இவருக்கு பிறகு இவரது மகன் மலயகேது அரசரானார். [3]
ஜீலம் ஆற்றாங்கரையில் ஹைடஸ்பேஸ் என்ற இடத்தில், யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக போரஸின் யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். பின்னர் கிமு.326-ல் நடந்த போரசுக்கு எதிரான போர்களில் வெற்றி கொண்ட அலெக்சாண்டர், போரசின் வீரத்தை கண்டு வியந்து, போரசிடம் நட்பு பாராட்டி, தான் வென்ற பகுதிகளுக்கு போரஸ் மன்னரையே ஆளுநராக நியமித்து கௌரவித்தார்.
ஹைடஸ்பஸ் போர்
[தொகு]அலெக்சாண்டர் கி மு 326இல் படகுப்பாலம் அமைத்து சிந்து ஆற்றை கடந்தார். அங்கு தக்சசீலா மன்னரும், போரசின் எதிரியுமான அம்பியை எதிர்கொண்டார். அப்போது ஜீலம் ஆற்றை கடந்து பஞ்சாபின் ஹைடஸ்பேஸ் என்ற இடத்தை அடைந்தார். இந்திய மன்னர் போரசின் யானைப்படைகளை எதிர்த்து யாராலும் எதிர்த்து போரிட இயலாது என அலெக்சாண்டரிடம் தெரிவித்தனர். ஆனால் அலெக்சாண்டர் அத்தனை தடைகளையும் மீறி தந்திரமாக மன்னர் போரஸ்சின் யானைப் படைகளை வென்றார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ See Keyne Cheshire, Alexander the Great பரணிடப்பட்டது 17 ஆகத்து 2023 at the வந்தவழி இயந்திரம் (Cambridge University Press, 2009), p.139: "Alexander charges Porus, who hurls a javelin from atop his elephant"
- ↑ Porus, INDIAN PRINCE
- ↑ https://nationalviews.com/king-porus-history-family-background-death-facts
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Arrian, The Campaigns of Alexander, book 5.
- History of Porus, Patiala, Dr. Buddha Parkash.
- Lendring, Jona. Alexander de Grote - De ondergang van het Perzische rijk (Alexander the Great. The demise of the Persian empire), Amsterdam: Athenaeum - Polak & Van Gennep, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-253-3144-0
- Holt, Frank L. Alexander the Great and the Mystery of the Elephant Medallions, California: University of California Press, 2003, 217pgs. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-24483-4
- History of India: (from the earliest times to the fall of the Mughal Empire), Dr. Ishwari Prashad
- King Porus - A Legend of Old பரணிடப்பட்டது 2016-03-09 at the வந்தவழி இயந்திரம். Michael Madhusudan Dutt. Glorifying poem, describes a legendary victory of Porus over Alexander.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் போரஸ் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Porus at Livius, by Jona Lendering