பேயர் வினைப்பொருள்
பேயர் வினைப்பொருள் (Baeyer's reagent) என்பது கரிம வேதியியலில் கரிம சேர்மங்களின் பண்பியலை ஆய்வு செய்ய உதவும் ஒரு வினைப்பொருளாகும். இவ்வினைப் பொருளைக் கண்டுபிடித்த செருமன் கரிம வேதியியலாளர் அடால்ப் வோன் பேயரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இவ்வினைப் பொருள் மூலமாக வேதிப்பொருளின் நிறைவுறாத் தன்மையை அதாவது கரிமச் சேர்மத்தில் இரட்டைப் பிணைப்பு உள்ளதாவென கண்டறிய உதவுகிறது.
பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் காரக் கரைசலே பேயர் வினைப்பொருள் எனப்படுகிறது. இது ஒரு ஆற்றல் வாய்ந்த ஆக்சிசனேற்றியாக வேதிவினையை ஒடுக்க ஏற்ற வேதிவினையாக ஆக்குகிறது. நிறைவுறாத பிணைப்புகளான இரட்டைப் பிணைப்பு (-C=C-) மற்றும் முப்பிணைப்புகளுடன் (-C≡C-) வினைபுரியும் போது அக்கரிமச் சேர்மத்தின் நிறம் செவ்வூதா சிவப்பிலிருந்து பழுப்பு நிறமாக மாறுகிறது. இது ஒரு சின் கூட்டுவினையாகும். ஆல்டிகைடுகளும் பார்மிக் அமிலமும், பார்மிக் அமில எசுத்தர்களும் இவ்வினைப் பொருளுடன் நேர்மறையான முடிவுகளையே தருகின்றன[1].
இவற்றையும் காண்க
[தொகு]- புரோமின் சோதனை, நிறைவுறாமையை கண்டறியும் மற்றொரு சோதனை
- அயோடின் சோதனை,நிறைவைக் கண்டறியும் மற்றொரு சோதனை