பெருங்குடல் அழற்சி
பெருங்குடல் அழற்சி Colitis | |
---|---|
பெருங்குடலின் உட்புறத்தில் ஏற்படும் அழற்சி மற்றும் திசு காயத்தை காட்டும் நுண்வரைபடம் | |
சிறப்பு | இரையகக் குடலியவியல் |
பெருங்குடல் அழற்சி (Colitis) என்பது செரிமான அமைப்பிலுள்ள பெருங்குடலைப் பாதிக்கின்ற ஒரு குறைபாடாகும். இப்பாதிப்பு ஏற்பட்டால் பெருங்குடலில் வீக்கம் காணப்படும்.[1] இது ஒரு நீண்டகாலக் குறைபாடாகும். பெருங்குடல் அழற்சியானது ஒரு நீண்ட கால குறைபாடாகும். செரிமான நோய்களின் வகைக்கு இது பரவலாக பொருந்துகிறது.
மருத்துவ சூழலில், பெருங்குடல் அழற்சி என்ற பெயர் பின்வரும் நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது
- பெருங்குடலில் ஏற்படும் அழற்சிக்கு காரணம் தீர்மானிக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, நோய் கண்டறிதலில் தெரியாத நேரத்தில் குரோன் நோய்க்கு பெருங்குடல் அழற்சி என்ற தலைப்பை பயன்படுத்தப்படலாம் அல்லது
- வயிற்றுப்புண் நோய் கொண்ட ஒரு நபர் நோயறிதலை அறிந்த மருத்துவரிடம் தங்கள் பெருங்குடல் அழற்சி நோயைப் பற்றி பேசலாம்.
அறிகுறிகள்
[தொகு]பெருங்குடல் அழற்சியின் அறிகுறிகள் மிகவும் மாறுபடும். பெருங்குடல் அழற்சிக்கான காரணம் அதன் போக்கையும் தீவிரத்தன்மையையும் மாற்றியமைக்கும் காரணிகளைப் பொறுத்து அமைகிறது.[2]
வயிற்றுவலி மற்றும் குடலில் இரத்தக் கசிவு ஆகியவை பெருங்குடல் அழற்சியின் முதன்மையான காரணங்களாகும். அடிக்கடி மலங்கழித்தல், இரத்தம் கலந்த மலம் மற்றும் புண்கள், மலம் அடங்காமை, வாய்வு, சோர்வு, பசியின்மை, விவரிக்க முடியாத எடை இழப்பு போன்றவை பொதுவான அறிகுறிகளாகும்.[3]
மூச்சுத் திணறல், வேகமாக அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் காய்ச்சல் முதலியன மிகவும் கடுமையான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.[3]
கீல்வாதம், வாய் புண்கள், வலி, சிவப்பு மற்றும் வீங்கிய தோல் மற்றும் எரிச்சல், இரத்தம் தோய்ந்த கண்கள் போன்றவை பெருங்குடல் அழற்சியுடன் வரக்கூடிய பிற பொதுவான அல்லது அரிதான குறிப்பிடத்தக்கன அல்லாத அறிகுறிகள் ஆகும்.[3]
பெருங்குடலின் உள் மேற்பரப்பு சிவந்திருத்தல் , புண்கள் மற்றும் இரத்தக்கசிவு போன்றவை பெருங்குடல் அகநோக்கியல் சோதனையில் காணப்பட்ட அறிகுறிகளாகும்.[4]
நோய் கண்டறிதல்
[தொகு]மருத்துவ வரலாறு, உடல் பரிசோதனை மற்றும் ஆய்வக சோதனைகள் (முழுமையான இரத்த எண்ணிக்கை சோதனை, மின்பகுளிகள், மலப் பரிசோதனை மற்றும் உணர்திறன், மல கருமுட்டை மற்றும் ஒட்டுண்ணிகள் போன்றவை மூலம் பெருங்குடல் அழற்சியின் அறிகுறிகள் கண்டறியப்படுகின்றன. அடிவயிறு வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி சோதனை, அடிவயிறு எக்சு கதிர் சோதனை மற்றும் மலக்குடலில் பொருத்தப்பட்ட புகைப்படக் கருவி மூலம் பரிசோதனை (ஆசனவாயில் செருகப்பட்ட ஒரு நெகிழ்வான குழாய் மூலம் சிக்மாய்டு பெருங்குடலின் பரிசோதனை) ஆகியவை கூடுதல் பரிசோதனைகளில் அடங்கும்.[5] பெருங்குடல் அழற்சியின் மதிப்பீட்டில் ஒரு முக்கியமான ஆய்வு என்பது இழைமநோயியல் துறைக்கான திசு பரிசோதனை ஆகும். உள்நோக்குமானி சோதனையின் போது குடல் சளிச்சுரப்பியில் இருந்து மிகச்சிறிய திசுக்கள் (பொதுவாக சுமார் 2மிமீ) அகற்றப்பட்டு, நுண்ணோக்கியின் கீழ் இழைமநோயியல் வல்லுநர் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. திசு அறிக்கை பொதுவாக நோயறிதலைக் குறிப்பிடாது. ஆனால் நாள்பட்ட பெருங்குடல் அழற்சியின் ஏதேனும் இருப்பை, நோயின் செயல்பாட்டைக் குறிக்கும். அத்துடன் வெளியடுக்கில் சேதம் (அரிப்புகள் மற்றும் புண்கள்) இருப்பதைக் குறிக்கும்.[6]
பொதுவாக நாள்பட்ட பெருங்குடல் அழற்சியுடன் தொடர்புடைய இழைமநோயியல் கண்டுபிடிப்புகள் பின்வருமாறு:[6]
-
குழாய் சுரப்பி சிதைவு
-
குழாய்ச் சுரப்பி கிளை மற்றும் பிற கட்டமைப்புச் சிதைவுகள்
-
இரைப்பை இழைமம்-மாற்றுரு அடைவு (படம்) (இடது பெருங்குடல் மற்றும் மலக்குடலில் மட்டுமே பொருந்தும்)
அடித்தள பிளாசுமாசைடோசிசு மற்றும் சளிப்புரதம் குறைதல் ஆகியவை பிற கண்டுபிடிப்புகளில் அடங்கும்.[6]
செயலில் உள்ள பெருங்குடல் அழற்சியுடன் பொதுவாக தொடர்புடைய இழைமநோயியல் கண்டுபிடிப்புகளுடன் இவையும் அடங்கும்:[6]
-
குழாய்ச் சுரப்பி வெளி அடுக்கிற்குள் நடு வெள்ளணுக்கள்)
-
குழாய்ச் சுரப்பி கல்லீரல் கட்டிகள்
-
சுரப்பி அழிவு
-
புண் உண்டாதல் (வெளி அடுக்கு இங்கு காணப்படவில்லை, மற்றும் பல எலும்புப் புரத உயிரணுக்களுடன் மணித்திரளாக்கத் திசு)
பெருங்குடல் அழற்சி வகைகள்
[தொகு]பெருங்குடல் அழற்சியில் பல வகைகள் உள்ளன. அவை பொதுவாக காரணத்தை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன.
- தற்சாற்பு பெருங்குடல் அழற்சி
- குடல் அழற்சி நோய்- நாள்பட்ட பெருங்குடல் அழற்சியின் குழு- நாள்பட்ட பெருங்குடல் அழற்சி என்பது நோயெதிர்ப்பு செல்கள் பெருங்குடலின் உட்புறத்தை உள்ளடக்கிய திசுக்களைத் தாக்கி சேதப்படுத்தும் ஒரு நிலையாகும்.
- புண்ணுறு பெருங்குடல் அழற்சி- பெருங்குடல் சளிச்சுரப்பியில் எழும் ஒரு நாள்பட்ட அழற்சி மற்றும் புண்ணாக்கும் நோயாகும், இது பெரும்பாலும் இரத்தம் தோய்ந்த வயிற்றுப்போக்கால் வகைப்படுத்தப்படுகிறது..[7]
- குரோன் நோய்-குடலில் ஏற்படக்கூடிய ஒரு அழற்சி நோயாகும். வாய் முதல் மலவாய் வரையில் உள்ள உணவு-குடல் பாதையில் எந்த இடத்திலும் இது தோன்றக்கூடும்.
- அறியா வகை பெருங்குடல் அழற்சி
- நுண்ணிய பெருங்குடல் அழற்சி - இந்த வகை பெருங்குடல் அழற்சியை கண்டுபிடிக்க நுண்ணோக்கி மூலம் மிகவும் நுண்ணியமாக பெருங்குடல் சார்ந்த திசுக்களை சோதித்துப் பார்க்கவேண்டும்; பொதுவாக பெருக்க ஆய்வில் பார்க்கும் போது அவை கண்ணுக்கு தெரியாமல் போகும்.
- நிண நீர் கலன்கள் சார்ந்த பெருங்குடல் அழற்சி.
- புரதம் சார்ந்த இணைப்புத் திசு பெருங்குடல் அழற்சி.
- சிகிச்சையால் ஏற்பட்ட பெருங்குடல் அழற்சி===
- மாற்றுவழி பெருங்குடல் அழற்சி
- வேதியியல் பெருங்குடல் அழற்சி
- வேதிச் சிகிச்சை பெருங்குடல் அழற்சி
- கதிரியக்கப் பெருங்குடல் அழற்சி
- புற்று நோய்த்தடுப்பாற்றல் சிகிச்சை பெருங்குடல் அழற்சி
- இரத்தநாள நோய்
- இசுகிமிக் பெருங்குடல் அழற்சி- பெருங்குடலுக்கான இரத்த ஓட்டம் செல்லுலார் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை பராமரிக்க முடியாத அளவிற்கு குறைக்கப்படும் போது ஏற்படும் ஒரு நிலையாகும்.
தொற்று வகை பெருங்குடல் அழற்சி
[தொகு]கிளோசுட்ரிடியம் டிபிசைல் பாக்டீரியாவின் [8] நச்சுத்தன்மை விளைவிக்கும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றின் விளைவால் உண்டாகும் போலிச்சவ்வு பெருங்குடல் அழற்சி, தொற்று பெருங்குடல் அழற்சியின் ஒரு நன்கறியப்பட்ட துணை வகையாகும்.
சிகா நச்சுபொருளைக் கொண்டுள்ள குருதி நுண்ணுயிர் வகையினால் குடல் இரத்த ஒழுக்கு பெருங்குடல் அழற்சியானது ஏற்படுகிறது.[9]
ஒட்டுண்ணி அழற்சி போன்ற பாதிப்புகள் காரணமாகவும் பெருங்குடல் அழற்சி ஏற்படலாம்.
வகைப்படுத்தமுடியாத பெருங்குடல் அழற்சிகள்
[தொகு]குரோன்சு நோய் மற்றும் புண் உண்டாக்கும் பெருங்குடல் அழற்சி ஆகிய இரண்டின் தன்மைகளையும் உடைய பெருங்குடல் அழற்சிக்கு தீர்மானிக்க முடியாத பெருங்குடல் அழற்சி என பெயரிட்டுள்ளனர்.[10]. தீர்மானிக்க முடியாத பெருங்குடல் அழற்சியின் இயல்பு வழக்கமாக குரோன்ஸ் நோயை விட புண் உண்டாக்கும் பெருங்குடல் அழற்சியை ஒட்டியே அமைந்துள்ளது[11].
சிகிச்சை
[தொகு]பெருங்குடல் அழற்சி நிலைக்கான சிகிச்சையில் சிடீராய்டுகள் மற்றும் உணவு மாற்றங்கள் போன்ற மருந்துகள் பயன்படுகின்றன. சமநிலையான ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவதும் ஒரு சிகிச்சை முறையாகும். சில சந்தர்ப்பங்களில், மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
மேலும், சமீபத்தில் பல ஆய்வுகள் பெருங்குடல் அழற்சி மற்றும் பால் ஒவ்வாமை ஆகியவற்றுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்பைக் கண்டறிந்துள்ளன.[12][13][14] நோயாளிகள் இவ்வகை உணவுகளை நீக்குதலில் இருந்து பயனடையலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.
நுண்ணுயிர் மாற்றம்
[தொகு]நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டும், குறிப்பாக நன்மை பயக்கும் பண்புகள் கொண்ட நலநுண்ணூயிரி உணவுகளைக் கொடுப்பதன் மூலம் நோயின் கொடூரம் கட்டுப்படுத்தப்பட்டு பராமரிப்பு மருந்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குரோன் நோய் மற்றும் புண் உண்டாகும் பெருங்குடல் அழற்சி நோய் உள்ளவர்களுக்கு நிவாரணத்தை தூண்டுதல் மற்றும் பராமரிப்பது ஆகிய இரண்டிற்கும் சாத்தியமான சிகிச்சையாக இது கருதப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட காக்ரேன் மதிப்பாய்வு, மேற்கண்ட சிகிச்சையைத் தொடர்ந்து, குரோன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மேம்பட்ட நிவாரணம் அல்லது குறைவான பாதகமான நிகழ்வுகள் பற்றிய தெளிவான ஆதாரங்கள் எதையும் கண்டறியவில்லை என்கிறது.[15]
புண் உண்டாக்கும் பெருங்குடல் அழற்சிக்கு எதிர் அழற்சி மருந்துகள் மருத்துவ நிவாரணத்தின் நிகழ்தகவை அதிகரிக்கலாம் என்பதற்கான குறைந்த உறுதியான சான்றுகளே உள்ளன.[16]
நலநுண்ணூயிரி உணவுகளைப் பெறுபவர்கள் நோய் நிவாரணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு 73% அதிகம் மற்றும் மருந்தில்லா மருந்துகளைப் பெறுபவர்களுடன் ஒப்பிடும்போது அறிகுறிகளில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய அல்லது தீவிரமான பாதகமான விளைவுகளில் தெளிவான வேறுபாடு இல்லை.[16] 5-அமினோசாலிசிலிக் அமில சிகிச்சையுடன் ஒப்பிடும்போது, நலநுண்ணூயிரி உணவுகளால் அதிக நிவாரணம் கிடைப்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை என்றாலும், 5-அமினோசாலிசிலிக் அமில சிகிச்சையுடன் இணைந்து நலநுண்ணூயிரி உணவுகள் பயன்படுத்தப்பட்டால், நிவாரணம் 22% அதிகமாகும்.[16] அதேசமயம், ஏற்கனவே நிவாரணம் அடைந்து உள்ளவர்களில், நலநுண்ணூயிரி உணவுகள் எதிர்கால மறுதோன்றலை தடுக்க உதவுகின்றனவா என்பதும் தெரியவில்லை.[17]
ஆராய்ச்சி
[தொகு]நார்த்திசுப் புற்று ஆதார செல்கள் மூலம் எலிகளில் பரிசோதனைக்குரிய பெருங்குடல் அழற்சிக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.[18]
ஊவாங்கு மற்றும் பலர் மேற்கொண்ட கூடுதல் ஆராய்ச்சியில், பெருங்குடல் அழற்சி நோயாளிகளுக்கு பெருங்குடல் புற்றுநோய் வளர்ச்சியின் அபாயத்துடன் பெருங்குடல் புற்று நோய் வளர்ச்சிக்கான சாத்தியமும் இருப்பதாக ஒரு தொடர்பைக் காட்டியது.[19]
குடற்புழு காலனித்துவம் அரிதாக இருக்கும் உலகின் சில பகுதிகளில் பெருங்குடல் அழற்சி பொதுவானதாகும். மேலும் பெரும்பாலான மக்கள் புழுக்களை சுமக்கும் பகுதிகளில் இது அசாதாரணமானதாகும். குடற்புழு நோய்த்தொற்றுகள் நோயை ஏற்படுத்தும் தற்சார்பு பெருங்குடல் அழற்சியின் நிலையை மாற்றலாம். ஆரம்பகால குடற்புழுச் சிகிச்சைகள் தற்சார்பு வகை பெருங்குடல் அழற்சி நிலைகளுக்கு நம்பிக்கைக்குரிய முடிவுகள் கிடைத்தன.[20][21][22][23] ஆனால் பின்னர் சோதனைகள் கட்டம் 2 இல் தோல்வியடைந்தன, மேலும் பெரும்பாலானவை இறுதியில் நிறுத்தப்பட்டன.[24]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Colitis". www.pennmedicine.org. July 1, 2021. Archived from the original on 2022-11-18. பார்க்கப்பட்ட நாள் 2022-11-18.
- ↑ "Ulcerative colitis - Symptoms and causes". Mayo Clinic (in ஆங்கிலம்). Archived from the original on 2024-04-11. பார்க்கப்பட்ட நாள் 2024-04-11.
- ↑ 3.0 3.1 3.2 NHS Choices. "Ulcerative colitis - Symptoms - NHS Choices". www.nhs.uk. Archived from the original on 2016-03-21. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.
- ↑ "Colonoscopy for ulcerative colitis: Why to get one, prep, and more". 30 July 2021.
- ↑ "Diagnosis of Ulcerative Colitis | NIDDK". National Institute of Diabetes and Digestive and Kidney Diseases (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-18.
- ↑ 6.0 6.1 6.2 6.3 Kellermann L, Riis LB. (2021). "A close view on histopathological changes in inflammatory bowel disease, a narrative review.". Dig Med Res 4 (3): 3. doi:10.21037/dmr-21-1. https://dmr.amegroups.org/article/view/7171/html. பார்த்த நாள்: 2023-10-03.
- ↑ Elghobashy, Maiar; Steed, Helen (2024). "Ulcerative colitis". Medicine 52 (4): 232–237. doi:10.1016/j.mpmed.2024.01.001. பன்னாட்டுத் தர தொடர் எண்:1357-3039. https://doi.org/10.1016/j.mpmed.2024.01.001.
- ↑ "Clostridium Difficile Colitis - Overview". WebMD, LLC. பார்க்கப்பட்ட நாள் 2006-09-15.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Beutin L (2006). "Emerging enterohaemorrhagic Escherichia coli, causes and effects of the rise of a human pathogen". J Vet Med B Infect Dis Vet Public Health 53 (7): 299–305. doi:10.1111/j.1439-0450.2006.00968.x. பப்மெட்:16930272.
- ↑ Romano, C.; Famiani, A.; Gallizzi, R.; Comito, D.; Ferrau', V.; Rossi, P. (Dec 2008). "Indeterminate colitis: a distinctive clinical pattern of inflammatory bowel disease in children.". Pediatrics 122 (6): e1278-81. doi:10.1542/peds.2008-2306. பப்மெட்:19047226.
- ↑ Melton, GB.; Kiran, RP.; Fazio, VW.; He, J.; Shen, B.; Goldblum, JR.; Achkar, JP.; Lavery, IC. et al. (Jul 2009). "Do preoperative factors predict subsequent diagnosis of Crohn's disease after ileal pouch-anal anastomosis for ulcerative or indeterminate colitis?". Colorectal Dis. doi:10.1111/j.1463-1318.2009.02014.x. பப்மெட்:19624520.
- ↑ "Effectiveness of dietary allergen exclusion therapy on eosinophilic colitis in Chinese infants and young children ≤ 3 years of age". Nutrients 7 (3): 1817–1827. March 2015. doi:10.3390/nu7031817. பப்மெட்:25768952.
- ↑ "Efficacy of Dietary Treatment for Inducing Disease Remission in Eosinophilic Gastroenteritis". Journal of Pediatric Gastroenterology and Nutrition 61 (1): 56–64. July 2015. doi:10.1097/MPG.0000000000000766. பப்மெட்:25699593.
- ↑ "Association of lymphocytic colitis and lactase deficiency in pediatric population". Pathology, Research and Practice 211 (2): 138–144. February 2015. doi:10.1016/j.prp.2014.11.009. பப்மெட்:25523228.
- ↑ Limketkai, Berkeley N; Akobeng, Anthony K; Gordon, Morris; Adepoju, Akinlolu Adedayo (2020-07-17). Cochrane Gut Group. ed. "Probiotics for induction of remission in Crohn's disease" (in en). Cochrane Database of Systematic Reviews 2020 (7): CD006634. doi:10.1002/14651858.CD006634.pub3. பப்மெட்:32678465.
- ↑ 16.0 16.1 16.2 Kaur, Lakhbir; Gordon, Morris; Baines, Patricia Anne; Iheozor-Ejiofor, Zipporah; Sinopoulou, Vasiliki; Akobeng, Anthony K (2020-03-04). Cochrane IBD Group. ed. "Probiotics for induction of remission in ulcerative colitis" (in en). Cochrane Database of Systematic Reviews 3 (3): CD005573. doi:10.1002/14651858.CD005573.pub3. பப்மெட்:32128795.
- ↑ Iheozor-Ejiofor, Zipporah; Kaur, Lakhbir; Gordon, Morris; Baines, Patricia Anne; Sinopoulou, Vasiliki; Akobeng, Anthony K (2020-03-04). Cochrane IBD Group. ed. "Probiotics for maintenance of remission in ulcerative colitis" (in en). Cochrane Database of Systematic Reviews 3 (3): CD007443. doi:10.1002/14651858.CD007443.pub3. பப்மெட்:32128794.
- ↑ "Human umbilical cord-derived mesenchymal stem cells ameliorate experimental colitis by normalizing the gut microbiota". Stem Cell Research & Therapy 13 (1): 475. September 2022. doi:10.1186/s13287-022-03118-1. பப்மெட்:36104756.
- ↑ "Identification of hub genes and pathways in colitis-associated colon cancer by integrated bioinformatic analysis". BMC Genomic Data 23 (1): 48. June 2022. doi:10.1186/s12863-022-01065-7. பப்மெட்:35733095.
- ↑ "Trichuris suis therapy for active ulcerative colitis: a randomized controlled trial". Gastroenterology 128 (4): 825–32. 2005. doi:10.1053/j.gastro.2005.01.005. பப்மெட்:15825065.
- ↑ Pommerville J (2014). Fundamentals of microbiology. Burlington, MA: Jones & Bartlett Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4496-8861-5.
- ↑ "Where are we on worms?". Current Opinion in Gastroenterology 28 (6): 551–6. November 2012. doi:10.1097/MOG.0b013e3283572f73. பப்மெட்:23079675.
- ↑ "Translatability of helminth therapy in inflammatory bowel diseases". International Journal for Parasitology 43 (3–4): 245–51. March 2013. doi:10.1016/j.ijpara.2012.10.016. பப்மெட்:23178819. "Early clinical trials suggested that exposure to helminths such as Trichuris suis or Necator americanus can improve IBD.".
- ↑ Coronado Biosciences (November 7, 2013). "Coronado Biosciences Announces Independent Data Monitoring Committee Recommendation to Discontinue Falk Phase 2 Trial of TSO in Crohn's Disease". Archived from the original on August 16, 2016. பார்க்கப்பட்ட நாள் August 16, 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]வகைப்பாடு | |
---|---|
வெளி இணைப்புகள் |