பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசம்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசம்
ቤንሻንጉል ጉሙዝ | |
---|---|
எத்தியோப்பியாவின் பிரதேச மாகாணம் | |
எத்தியோப்பியாவின் மேற்கில் பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசத்தின் அமைவிடம் | |
நாடு | எத்தியோப்பியா |
தலைநகரம் | அஸ்சோசா |
அரசு | |
• ஆளுநர் | ஆசாதிலி உசைன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 50,699 km2 (19,575 sq mi) |
[1] | |
மக்கள்தொகை (2018) | |
• மொத்தம் | 11,27,001[2] |
ஐஎசுஓ 3166 குறியீடு | ET-BE |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019) | 0.476[3] low • 7th of 11 |
பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசம் (Benishangul-Gumuz), கிழக்கு ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியாவின் 11 பிர்தேசங்களில் ஒன்றாகும். இது எத்தியோப்பியாவின் வடமேற்கில், தெற்கு சூடான் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதனை தலைநகரம் அஸ்சோசா நகரம் ஆகும். நீல நைல் ஆறு பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசத்தையும், சூடான் நாட்டையும் பிரிக்கிறது.
போக்குவரத்து வசதிகள் மற்றும் தொலைதொடர்பு வசதிகள் குறைபாட்டால் பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசம் பொருளாதார வளர்ச்சி அடையாமல் உள்ளது. 2012-ஆம் ஆண்டில் இப்பிரதேசத்தின் மெடெக்கெல் பிராந்தியத்தையும், அஸ்சோசா பிராந்தியத்தையும் இணைக்க சீனா நாடு ஒரு பாலம் அமைதுள்ளது.
அமைவிடம்
[தொகு]இதன் வடமேற்கில் சூடான் நாடும், தென்மேற்கில் தெற்கு சூடான் நாடும், வடக்கிலும், வடகிழக்கிலும் அம்மாரா பிரதேசம், கிழக்கிலும், தெற்கிலும் ஒரோமியா பிரதேசம் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2007-ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில், 49,289 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 174,445 குடியிருப்புகளும் கொண்ட பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகை 7,84,345 ஆகும். அதில் ஆண்கள் 3,98,655 மற்றும் பெண்கள் 3,85,690 ஆவர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 15.91 பேர் வீதம் வாழ்கின்றனர். இப்பிரதேசத்தின் அம்மாரா இன மக்கள் 25.41%, பெர்தா இன மக்கள் 21.69%, குமூஸ் இன மக்கள் 20.88%, ஒரோமியா இன மக்கள் 13.55%, சினாஷா இன மக்கள் 7.73% மற்றும் அவி இன மக்கள் 4.22% வாழ்கின்றனர். இப்பிரதேசத்தில் முக்கிய மொழிகளாக பெர்தா மொழி (25.15%), அம்மாரா மொழி (22.46%), குமூஸ் மொழி (20.59%), ஒரோமிய மொழி (17.69%), சினஷா மொழி (4.58%) மற்றும் அவிங்கி மொழி (4.01%) பேசபடுகிறது. இசுலாம் 45% பேர்களும், பழைமைவாத கிறித்தவத்தை 33.3% பேரும், சீர்திருத்த கிறித்துவத்தை 13.5% பேரும் மற்றும் 7.09% தொல்குடி சமயத்தையும் பின்பற்றுகின்றனர். 2018-ஆம் ஆண்டில் இப்பிரதேச மக்கள் தொகை 1,127,001 ஆக இருக்கும் எனக்கணிக்கப்பட்டுள்ளது.
தெற்கு சூடானின் 36,400 அகதிகளுக்கு இப்பிரதேசத்தில் இரண்டு அகதிகள் முகாம்கள் உள்ளது. [4]
சமயம்
[தொகு]
இனக் குழுக்கள்
[தொகு]- பெர்த்தா இன மக்கள் - அஸ்சோசா மண்டலம்
- கவாமா இன மக்கள் - மாவோ-கொமோ சிறப்பு மண்டலம்
- சினசா இன மக்கள் - மெடெக்கெல் மண்டலம்
- அம்மாரா இன மக்கள் - மெடெக்கெல் மண்டலம்
- அகிவ் இன மக்கள் - மெடெக்கெல் மண்டலம்
- மாவோ இன மக்கள் - மாவோ-கொமோ சிறப்பு மண்டலம்
- பாம்பாசி இன மக்கள் - பம்பாசி சிறப்பு மண்டலம்
ஆளுநர்கள்
[தொகு]அரசியல் கட்சி | பதவிக்காலம் | |
---|---|---|
அட்டோம் முஸ்தபா | பெனிசாங்குல் மக்கள் விடுதலை இயக்கம் | 1991-க்குப் பிறகு |
அப்து முகமது அலி | பெனிசாங்குல் மக்கள் விடுதலை இயக்கம் | 1990களில் |
தயூப் அகமது | பெனிசாங்குல் மக்கள் விடுதலை இயக்கம் | 1990 - 1995 |
யாரேகல் அய்ஷேசூம் | பெனிசாங்குல்-குமூஸ் மக்கள் ஜனநாயக ஒற்றுமை முன்னணி | சூலை 1995 - நவம்பர் 2008 |
அகமது நசீர் அகமது | பெனிசாங்குல்-குமூஸ் மக்கள் ஜனநாயக ஒற்றுமை முன்னணி | நவம்பர் 2008 - மே 2016 |
ஆசாதிலி ஹசன் | பெனிசாங்குல் மக்கள் விடுதலை இயக்கம் | சூன் 2016 – தற்போது வரை |
(இந்த பட்டியல் அடிப்படையில் Worldstatesmen.org, John Young,[6] and the Ethiopian News Agency website[7])
நிர்வாகம்
[தொகு]- அஸ்சோசா மண்டலம்
- காமாஷி மண்டலம்
- மெடெக்கெல் மண்டலம்
- மாவோ-கொமோ சிறப்பு மண்டலம்
- பம்பாசி சிறப்பு மண்டலம்
- மாவோ-கொமோ சிறப்பு மண்டலம்
எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
[தொகு]- திக்ரே பிரதேசம்
- அபார் பிரதேசம்
- அம்மாரா பிரதேசம்
- சோமாலிப் பிரதேசம்
- ஒரோமியா பிரதேசம்
- தெற்குப் பிரதேசம்
- தென்மேற்குப் பிரதேசம்
- கம்பேலா பிரதேசம்
- சிதாமா பிரதேசம்
- அராரி பிரதேசம்
எத்தியோப்பிய நகரங்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]- திக்ரே மாகாணம்
- திக்ரே மக்கள் விடுதலை முன்னணி
- தக்கீசு ஆறு
- அக்சும் பேரரசு
- எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் - (1974 - 1980)
- எத்தியோப்பியா உள்நாட்டுப் போர் (2020-தற்போது வரை)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 2011 National Statistics பரணிடப்பட்டது மார்ச்சு 30, 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Population Projection of Ethiopia for All Regions At Wereda Level from 2014 – 2017. Federal Democratic Republic of Ethiopia Central Statistical Agency. Archived from the original on 6 June 2018. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
{{cite book}}
: More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help) - ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
- ↑ "Archived copy". Archived from the original on 2012-01-17. பார்க்கப்பட்ட நாள் 2012-05-23.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link), The UN Refugee Agency website - ↑ http://catalog.ihsn.org/index.php/catalog/3583/download/50086
- ↑ "Along Ethiopia's Western Frontier", p. 334
- ↑ "Benishangul Gumuz State Council appoints Ahmed Nasir as chief of state"[தொடர்பிழந்த இணைப்பு], Ethiopian News Agency, 4 November 2008
வெளி இணைப்புகள்
[தொகு]- Map of Benishangul-Gumuz Region at UN-OCHA[தொடர்பிழந்த இணைப்பு]
- Map of Benishangul-Gumuz Region at DPPA of Ethiopia
- House of Federation Official Ethiopian Government List of Members