உள்ளடக்கத்துக்குச் செல்

பெசன்ட் நகர்

ஆள்கூறுகள்: 13°00′01″N 80°16′00″E / 13.0002°N 80.2668°E / 13.0002; 80.2668
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெசன்ட் நகர்
பெசன்ட் நகர் கடற்கரை
பெசன்ட் நகர் கடற்கரை
பெசன்ட் நகர் is located in சென்னை
பெசன்ட் நகர்
பெசன்ட் நகர்
பெசன்ட் நகர் (சென்னை)
பெசன்ட் நகர் is located in தமிழ் நாடு
பெசன்ட் நகர்
பெசன்ட் நகர்
பெசன்ட் நகர் (தமிழ் நாடு)
ஆள்கூறுகள்: 13°00′01″N 80°16′00″E / 13.0002°N 80.2668°E / 13.0002; 80.2668
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
புறநகர்சென்னை
மண்டலம்அடையாறு
வார்டு152
பெயர்ச்சூட்டுஅன்னி பெசண்ட்
அரசு
 • ஆளுநர்ஆர். என். ரவி[1]
 • முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
 • மாவட்ட ஆட்சியர்மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600 090
வாகனப் பதிவுTN-07
மக்களவைத் தொகுதிதென் சென்னை
சட்டமன்றத் தொகுதிவேளச்சேரி

பெசன்ட் நகர் (ஆங்கிலம்: Besant Nagar), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். சென்னை மாநகராட்சியில் உள்ள கடலை ஒட்டிய ஒரு பகுதியாகும். பெசன்ட் நகர் சுற்றுப்புறத்தில் அதிக வசதி படைத்த மக்கள் வசிக்கின்றனர்.

மெட்ராஸின் முன்னாள் கவர்னரான எட்வர்ட் எலியட்டின் பெயரிடப்பட்ட எலியட்ஸ் கடற்கரை, இந்த பகுதியின் பிரபலமான இடமாகும். இது இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஒரு கவர்ச்சியான இடமாக மாறிவிட்டது.

அமைவிடம்

[தொகு]

சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், பெசன்ட் நகர் அமைந்துள்ளது.

பெசன்ட் நகர் மற்றும் எலியட்ஸ் கடற்கரையின் வான்வழி காட்சி
பெசன்ட் நகர் 5-ஆவது அவென்யூ

வேளாங்கன்னி அன்னை திருத்தலம்

[தொகு]

இது சின்ன வேளாங்கன்னி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் மிகவும் பிரசிதிபெற்றது.

பேருந்து பணிமனை

[தொகு]

பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தில், 85 வெவ்வேறு பேருந்துகள் தினமும் 500 பயணங்களை மேற்கொள்கின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 பேர் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

அக்டோபர் 2012 இல், பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தை, ஒரு பணிமனையாக மாற்ற மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்.டி.சி.) முடிவு செய்தது. பணிமனை, பேருந்து நிலையத்தை விட 70 சதவீதம் பெரியதாக இருக்கும். 5 மில்லியன் டாலர் செலவில் இந்த பேருந்து பணிமனை கட்டி முடிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "1,500 கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு".தினமலர்
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Besant Nagar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=பெசன்ட்_நகர்&oldid=3697393" இலிருந்து மீள்விக்கப்பட்டது