உள்ளடக்கத்துக்குச் செல்

பெகாசசு (உளவுநிரல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெகாசஸ் என்பது ஓர் இஸ்ரேலிய நிறுவனமான NSO குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுத்தப்படும் உளவு மென்பொருளாகும்.

மேலும் NSO நிறுவனம் சந்தா அடிப்படையில் இதன் ஒரு பதிப்பு மற்றும் அதன் ஒரு வருட லைசன்ஸ் தொகையாக 7-8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயித்து அரசு சார் உளவு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தருவதாக கூறப்படுகிறது.

2016ம் ஆண்டு ஆகத்து மாதம் மனித உரிமை ஆர்வலர்களின் ஐபோன்களில் நடத்தப்பட்ட இணைய தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த இணைய தாக்குதல் மூலம் ஒருவரின் அலைபேசியை தன் கட்டுப்பாட்டில் வைக்கமுடியும்.இதை பயன்படுத்தி உலகம் முழுதும் மொத்தம் 1400 நபர்களின் அலைபேசி தகவல்கள் களவாடப்பட்டுள்ளன.

அமெரிக்க நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் அளித்த தகவலின்படி இந்த தாக்குதல் மூலம் இந்தியாவில் உள்ள நூற்றிற்கும் மேற்பட்ட சமூக செயல்பாட்டாளர்களின் அலைபேசி இடைமறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய உள்துறை அமைச்சகம் அந்நிறுவன இந்திய பிரிவிடம் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.