உள்ளடக்கத்துக்குச் செல்

பூஞ்சைப் பருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்தோள் கழுகு
நவ்மானின் நூலிலிருந்து
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
H. pennatus
இருசொற் பெயரீடு
Hieraaetus pennatus
(மெலின், 1788)
வேறு பெயர்கள்
  • Aquila minuta Brehm, 1831
  • Aquila pennata
ஜெர்மனி நாட்டிலிலுள்ள விஸ்படென் அருங்காட்சியகத்தில் பூஞ்சைப் பருந்தின் முட்டை

வெண்தோள் கழுகு[1] அல்லது பூஞ்சைப் பருந்து [Booted eagle (Hieraaetus pennatus)] ஒரு நடுத்தர அளவு கொண்ட இரு வகை உருவத் தோற்றங்களுடன் காணப்படக்கூடிய ஓர் ஊனுண்ணிப் பறவையாகும்[2]. அக்சிபிட்டிரிடே குடும்பத்தைச் சேர்ந்த இது, ஒரு வலசை போகும் கழுகாகும்.

பரவல்

[தொகு]

தென்மேற்கு ஐரோப்பா, வடமேற்கு ஆப்பிரிக்கா தொடங்கி கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா (மங்கோலியா உள்ளிட்ட நாடுகள்) வழியாக வடக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான், பெரும்பாலான இந்தியத் துணைக்கண்டம், தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இது காணப்படுகிறது[3].

உடலமைப்பும் கள அடையாளங்களும்

[தொகு]

வைரிப் பருந்தின் அளவையொத்தது (நீளம் = 42 - 51 cm). வளர்ந்த கழுகு இருவகை உருவத் தோற்றங்களிலும் இடைப்பட்ட பல்வகைத் தோற்றங்களிலும் காணப்படும்[4].

கருந்தோற்றம்: உடல் கரும்பழுப்பு நிறத்திலிருக்கும்; பறக்கும் போது கீழிருந்து பார்த்தால், இறக்கையின் முன்பாதி கரும்பழுப்பாகவும் பின்பாதி சற்றே வெளிரிய பழுப்பாகவும் இருக்கும்.

கருந்தோற்றத்தில் வெண்தோள் கழுகு (ஜெயமங்கலி புல்வாய் காப்பகத்தில்)
வெளிர் தோற்றத்தில் (தென்னாப்பிரிக்கா)

வெளிர் தோற்றம்: தலை இளம்பழுப்பாகவும் உடலின் கீழ்ப்பகுதி வெள்ளையாகவும் மேல்பகுதி கரும்பழுப்பு நிறத்திலும் இருக்கும்; பறக்கும் போது கீழிருந்து பார்த்தால், இறக்கையின் முன்பாதியும் வயிறும் வெண்மையாகவும் இறக்கையின் பின்பாதி (அதாவது, முதன்மை சிறகுகளும் இரண்டாம் நிலை சிறகுகளும்) கரும்பழுப்பாக இருகும். இரண்டு தோற்றங்களிலும் தோள்பட்டையின் இரு புறமும் வெள்ளையான திட்டு காணப்படும். இது பார்ப்பதற்கு வாகனத்தின் முன் விளக்குகளைப் போலத் தோன்றும்[1].

இவற்றில் ஆண் பெண் இரண்டும் தனித்துவமான இறகுகளைக்கொண்டு காணப்படுகிறது. வெளிறிய சாமபல் நிறத்துடன் இதன் தலைப்பகுதி காணப்படுகிறது. பூஞ்சைப் பருந்துவின் இறகுகள் விமான இறக்கைபோல் காட்சி அளிக்கிறது.

இனப்பெருக்கமும் வலசையும்

[தொகு]

ஐரோப்பா, மத்திய ஆசியப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. வடக்கு பாகிஸ்தான், இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசத்தையொட்டிய பகுதிகளில் வலசை செல்லாது அங்கேயே தங்கியிருக்கும் கூட்டங்களைத் தவிர பெரும்பாலும் வலசை போகும் கழுகு. இனப்பெருக்க இடங்களில் மேற்குப் பகுதிகளில் உள்ள கூட்டம் ஆப்பிரிக்காவிற்கும் கிழக்கிலுள்ள கூட்டம் இந்தியத் துணைக்கண்டத்திற்கும் வலசை போகின்றன. செப்டம்பர் மாதத்தில் இவை வலசை செல்ல ஆரம்பித்து மார்ச்சு-ஏப்ரலில் திரும்புகின்றன[5]. பெரிய மரங்கள், செங்குத்தான பாறைகளின் மேல் கூடுகட்டி வாழுகிறது. ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை இடுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 இராமநாதபுரம் வன உயிரின கோட்டம் (தமிழ்நாடு வனத்துறை). இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள் - அறிமுகக் களக்கையேடு. பக். 146
  2. http://www.iucnredlist.org/details/22696092/0
  3. "Booted Eagle -- Distribution". birdsoftheworld.org. பார்க்கப்பட்ட நாள் 03 சூன் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. "Booted Eagle -- Identification".
  5. "Booted Eagle - Movement".