புவாத பகுதி
புவாத (Poadh, Powadh, Puadh அல்லது Powadha) பகுதி இந்தியாவின் வடமேற்கே உள்ள |பஞ்சாபு-அரியானா மாநிலங்களில் உள்ள ஒரு நிலப்பகுதியாகும். இது சத்துலுச்சு ஆற்றுக்கும் கக்கார்-அக்குரா ஆற்றுக்கும் இடைப்பகுதியிலும், தெற்கேயும் தென்கிழக்கேயும் உள்ள அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அம்பாலா மாவட்டத்துக்கும், பஞ்சாபின் உரூப்பநகர் மாவட்டத்துக்கும் அருகே உள்ள ஓரிடம்.[1]
பஞ்சாபி மொழியின் ஒரு வட்டார மொழியாகக் கருதப்படும் புவாதி மொழியை இப்பகுதியில் பேசுகின்றார்கள். இந்த புவாத பகுதி சத்துலுச்சு ஆற்றுக்கு அருகேயுள்ள உரூப்பநகர் மாவட்டத்தையும் தாண்டி கக்கர் ஆற்றையும் தாண்டி கிழக்கே இமாச்சலப் பிரதேசத்தின் காலா ஆம்பு வரை பரவியுள்ளது. இது இமாச்சலப் பிரதேசத்தையும் அரியானாவையும் பிரிக்கும் எல்லைப்பகுதியாகும். இதே புவாத பகுதியைச் சேர்ந்தவைதாம் பட்டேகார் சாகிபு மாவட்டத்தின் பகுதிகள் சிலவும், இராசபுரா போன்ற பாட்டியாலா மாவட்டத்தின் சில பகுதிகளும், பஞ்சகுல, அம்பாலா, யமுனாநகர், சகரன்பூர், பேகாத்து ஆகியவையும். இங்கே பேசுகின்ற புவாதி மொழி பஞ்சாபின் பிறபகுதிகளிலும் அரியானாவிலும் பேசுகின்றார்கள்.[2]
அடிக்குறிப்புகளும் மேற்கோளும்
[தொகு]- ↑ "Powadh or Puadh or Powadha is a region of Punjab and parts of Haryana between the Satluj and Ghaggar rivers. The part lying south, south-east and east of Rupnagar adjacent to Ambala District (Haryana) is Powadhi." இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304051133/http://www.thenewstribe.com/2012/01/16/major-punjabi-dialects/.
- ↑ "10. Pwadhi Punjabi" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304051133/http://www.thenewstribe.com/2012/01/16/major-punjabi-dialects/.