புளோரோ ஆல்ககால்
புளோரோ ஆல்ககால்கள் (Fluoroalcohols) என்பவை ஓர் ஆல்ககால் வேதி வினைக்குழுவும் குறைந்த பட்சம் ஒரு குளோரின் - புளோரின் பிணைப்பும் கொண்ட கரிம வேதியியல் சேர்மங்களைக் குறிக்கும். கரிம புளோரின் சேர்மங்களாக வகைப்படுத்தப்படும் இவை தனித்துவமான கரைப்பான் பண்புகளைப் பெற்றிருக்கும்.[1]
பெர்புளோரோ ஆல்ககால்கள்
[தொகு]பெரும்பாலான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பெர்புளோரோ ஆல்ககால்கள் நிலைப்புத்தன்மை அற்றவையாகும். உதாரணமாக முப்புளோரோமெத்தனால் ஐதரசன் புளோரைடை இழந்து கார்பனைல் புளோரைடை உருவாக்குகிறது.[2] இந்த வினை மீளக்கூடிய ஒரு மீள்வினையாகும்.[3]
- CF3OH -> COF2 + HF
நோனாபுளோரோ-டெர்ட்-பியூட்டைல் ஆல்ககால் ((CF3)3COH), பெண்டாபுளோரோபீனால் (C6F5OH) உள்ளிட்ட ஆல்ககால்கள் நிலைப்புத்தன்மை கொண்ட பெர்புளோரினேற்ற ஆல்ககால்களாகும்.
பகுதியளவு புளோரினேற்ற ஆல்ககால்கள்
[தொகு]பல பகுதியளவு புளோரினேற்ற ஆல்ககால்கள் அறியப்படுகின்றன. இவை பயன்படுத்தக்கூடிய நிலைப்புத்தன்மையையும் கொண்டுள்ளன. முப்புளோரோயெத்தனால் மற்றும் அறுபுளோரோ ஐசோபுரோப்பனால் ஆகியவை ஆராய்ச்சியில் கரைப்பான்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. [4]புளோரோடெலோமர் ஆல்ககால்கள் பெர்புளோரோகார்பாக்சிலிக் அமிலங்கள் தயாரிப்பதற்கான முன்னோடி சேர்மங்களாகும். அணுக்கரு காந்த உடனிசைவு நிறமாலையியலில் பிர்க்கலின் ஆல்ககால் ஒரு நாற்தொகுதி மைய நகர்த்தி வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ivan A. Shuklov; Natalia V. Dubrovina; Armin Börner (2007). "Fluorinated Alcohols as Solvents, Cosolvents and Additives in Homogeneous Catalysis: Benefits from the Use of Fluorinated Alcohols in Homogeneous Catalysis". Synthesis: 2925–2943. doi:10.1055/s-2007-983902.
- ↑ Schneider, W. F. (1996). "Energetics and Mechanism of Decomposition of CF3OH". J. Phys. Chem. 100 (15): 6097–6103. doi:10.1021/jp952703m.
- ↑ Cheburkov, Yuri; Lillquist, Gerald J. (2002). "Perfluoroalcohols". Journal of Fluorine Chemistry 118 (1–2): 123–126. doi:10.1016/S0022-1139(02)00204-X.
- ↑ Colomer, Ignacio; Chamberlain, Anna E. R.; Haughey, Maxwell B.; Donohoe, Timothy J. (2017). "Hexafluoroisopropanol as a Highly Versatile Solvent". Nature Reviews Chemistry 1 (11). doi:10.1038/s41570-017-0088. https://ora.ox.ac.uk/objects/uuid:72dc250a-656e-4367-827d-17835acc28ba.