உள்ளடக்கத்துக்குச் செல்

புனிதர் பட்டமளிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனிதர் பட்டம் அளிக்கும் நிகழ்வு (Canonization) இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப் பட்ட புனிதர்களின் பட்டியளில் சேர்க்கப்படும் நிகழ்வைக் குறிக்கும். புனிதர் பட்டம் அளிக்கப்படுவதால் ஒருவர் புனிதராவதில்லை. மாறாக அவர் புனிதராக கடவுளோடு இருக்கிறார் என்பதனை உலகிற்கு அறிவிக்கும் செயலேயாம்.

எவ்வகை புனிதராயினும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இப் பட்டம் திருத்தந்தையால் மட்டுமே அறிவிக்கப்படும். ஆனால் மரபுவழி திருச்சபைகளில் இரத்த சாட்சியாக மரிப்பவர்களுக்கு தனிப்பட்ட அறிவிப்பு தேவையில்லை. அவர்களது மரணமே அவர்களது புனிததுவத்திற்கு சாட்சியாக ஏற்கப்படும். பிற கிறித்துவ உட்பிரிவுகளில் எவ்வகை முறையான அறிவிப்பு முறைகள் இல்லை.

உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டத்திற்கான படிகள் நான்காகும். அவை:

  1. இறை ஊழியர் (Servant of God) என அறிவிக்கப்படல்
  2. வணக்கத்திற்குரியவர் (Venerable) என அறிவிக்கப்படல்
  3. அருளாளர் (Blessed) என அறிவிக்கப்படல்
  4. புனிதர் (Saint) என அறிவிக்கப்படல்
உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டத்திற்கான படிகள்
  இறை ஊழியர்   →   வணக்கத்திற்குரியவர்   →   அருளாளர்   →   புனிதர்