உள்ளடக்கத்துக்குச் செல்

பிராங்க் எர்பெர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபிராங்க் ஹெர்பர்ட்

பிராங்க் எர்பெர்ட் ( Franklin Patrick Herbert, Jr 8 அக்டோபர் 1920–11 பிப்பிரவரி 1986) அமெரிக்க அறிவியல் புனைவு கதை எழுத்தாளர் ஆவார். டியூன் என்னும் புகழ் வாய்ந்த படைப்பின் மூலமாக இவர் பிரபலம் அடைந்தார். பிராங்க் எர்பெர்ட் செய்தித் தாள் எழுத்தாளராகவும் புகைப்படக்காரராகவும் சிறுகதை எழுத்தாளராகவும் நூல் விமர்சகராகவும் சூழலியல் ஆலோசகராகவும் விரிவுரையாளராகவும் இருந்தார்.

1962 இல் வெளிவந்த நூலான டியூன் மிக அதிகம் பேரால் பாதிக்கப்பட்ட அறிவியல் புனைவு கதைப் புத்தகம் ஆகும்.[1]

இளமைக்காலம்

[தொகு]

வாசிங்டனில் பிறந்த பிராங்க்ளின் எர்பர்ட் குடும்பத்தில் நிலவிய வறுமையின் காரணமாக தம் மாமாவுடன் ஓரிகான் மாநிலத்தில் உள்ள சேலம் என்ற பகுதிக்குக் குடி பெயர்ந்தார். அங்கேயே ஒரு பள்ளியில் கல்வி கற்றார். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கக் கப்பல் படையில் புகைப்படப் பத்திரிகையாளராக இணைந்தார். போர் முடிந்த பின்னர் அவரும் அவருடைய மனைவியும் கலிபோர்னியாவில் சாண்டா ரோசா டெமோகிராட் என்ற செய்தித்தாளில் பணியில் சேர்ந்தார்கள். வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். ஆனால் பட்டம் பெறாமல் படிப்பை இடையிலேயே விட்டுவிட்டார். இவருக்கு சென் பவுத்தத்தில் நாட்டம் ஏற்பட்டது.[2]

மேற்கோள்

[தொகு]
  1. "SCI FI Channel Auction to Benefit Reading Is Fundamental". PNNonline.org (Internet Archive). March 18, 2003. Archived from the original on September 28, 2007. பார்க்கப்பட்ட நாள் September 28, 2007. Since its debut in 1965, Frank Herbert's Dune has sold over 12 million copies worldwide, making it the best-selling science fiction novel of all time ... Frank Herbert's Dune saga is one of the greatest 20th Century contributions to literature.
  2. Irene Slattery had been a former student of Jung's in Zurich. See Touponce, William F. (1988), Frank Herbert, Boston, Massachusetts: Twayne Publishers imprint, G. K. Hall & Co, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8057-7514-5 (p. 9-10).