பால்சமீன்
பா'அல் கோயில் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
இடம் | சிரியா |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | i, ii, iv |
உசாத்துணை | 23 |
UNESCO region | அரபு நாடுகள் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1980தொடர்) | (4வது
ஆபத்தான நிலை | போர் |
பால்சமீன் (Baalshamin) அல்லது பா'அல் சமெம் (Ba'al Šamem)[1] (அரமேயம்: ܒܥܠ ܫܡܝܢ), பொருள்: 'சொர்க்கத்தின் பிரபு', வடமேற்கு செமத்திய இனக் கடவுளாக அறியப்படுகின்றார். மத்திய கிழக்கின் வெவ்வேறு இடங்களுக்குத் தகுந்தபடி அல்லது வெவ்வேறு காலகட்டங்களில் இப்பட்டம் பல்வேறு கடவுளருக்கு உரித்தாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கேனான்/போனீசியா, சிரியா தொல்லியல் கல்வெட்டுக்களில் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். இது பெரும்பாலும் இடி/மழை கடவுளான அடாடுக்கு (பால்/ பா‘அல்) பயன்படுத்தப்படுகின்றது. பால்சமீன் இசுலாமியத்திற்கு முன்பான பல்மைராவில் கொண்டாடப்பட்ட இரு கடவுள்களில் ஒருவராவார். மற்ற முதன்மைக் கடவுள் பெல் ஆவார்.[2]கழுகும் மின்னல் கொடியும் இவரது சிறப்புக்கூறுகளாக உள்ளது. நிலாக் கடவுளான அக்ளிபோல், சூரியக் கடவுளான மாலக்பெல் ஆகியோருடன் இவரும் இணைந்து முக்கடவுளராக வழிபடப்பட்டனர்.[3]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ நூல்களில் சிரியாவின் கடவுளாகவும் போனீசியக் கடவுளாகவும் இவ்வாறே முறையாக அழைக்கப்படுகிறார். மற்ற பெயர்கள் வருமாறு: பா'அல் ஷமீன், பா'அல்-ஷமெம், பா'அல் ஷமீம், பால் ஷமெம்
- ↑ Dirven, Lucinda (1999). The Palmyrenes of Dura-Europos: A Study of Religious Interaction in Roman Syria. BRILL. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-11589-7. பார்க்கப்பட்ட நாள் 17 July 2012.
- ↑ Kaizer, Ted (2002). The Religious Life of Palmyra: A Study of the Social Patterns of Worship in the Roman Period. Franz Steiner Verlag. pp. 87, 88, 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-515-08027-9. பார்க்கப்பட்ட நாள் 17 July 2012.
வெளியிணைப்புகள்
[தொகு]- Kaizer, Ted: The religious life of Palmyra. Stuttgart: Franz Steiner Verlag, 2002.