பாலக்காடு ராமா பாகவதர்
பாலக்காடு ராமா பாகவதர் ஒரு தென்னிந்திய இசை வித்துவான் ஆவார்.
இளமை வாழ்க்கை
[தொகு]ராமா பாகவதர், கேரள மாநிலம் பாலக்காட்டிலுள்ள சோரனூர் என்னுமிடத்தில் முந்தாயா (மலையாளம்: മുണ്ടായ) சிற்றூரில் பிறந்தார். தந்தையார் கஸ்தூரி ரங்கன், தாயார் அலமேலு மங்கை. தொடக்கத்தில் பாலக்காடு அனந்தராம பாகவதரிடம் குருகுல முறையில் இசைப் பயிற்சி பெற்றார். பின்னர் மகா வைத்தியநாதையர், உமையாள்புரம் சுவாமிநாத ஐயர் ஆகியோரிடம் கற்றார். சுவாமிநாத ஐயரிடம் பல தியாகராஜ கிருதிகளைக் கற்றுக்கொண்டார். தன்னுடன் இசை பயின்ற மகாராஜபுரம் விஸ்வநாத ஐயருடன் நட்புக் கொண்டார்.[1]
தொழில் வாழ்வு
[தொகு]இவரது முதல் இசைக்கச்சேரி கேரள மாநிலம் கல்பாத்தி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் நடைபெற்றது. இங்கேயே இவரது இறுதி இசைக்கச்சேரியும் இடம்பெற்றது. [1] தமிழ் நாடு, திருவையாறில் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவை இவர் கேரள மாநிலம் கல்பாத்தியிலும் நடைபெறச் செய்தார். அங்குள்ள ராம் தியான மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறுகிறது. [2]
பாராட்டுகளும் விருதுகளும்
[தொகு]- மைசூர் மன்னர் ஜெயசாமராஜ உடையார் ஒவ்வொரு ஆண்டும் மைசூரில் நடைபெறும் தசரா விழாவில் இவரது இசைக் கச்சேரி இடம்பெறச் செய்வார்.
- திருவிதாங்கூர் மகாராஜாவும் மகாராணியும் இவருக்கு சிறப்புகள் செய்தார்கள்.
- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சி. வி. ராமன் இவருக்கு காயக்க கேசரி என்ற விருதினை வழங்கினார். [1]
சொந்த வாழ்க்கை
[தொகு]1957 ஆம் ஆண்டு இவர் கேரளா, கல்பாத்தியில் இறந்தார். இவரது மனைவி ருக்மணி அம்மாள் 1991 இல் காலமானார். இவர்களுக்கு 7 மகன்களும் 4 மகள்களும் பிறந்தார்கள். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Palghat Rama Bhagavathar" (in ஆங்கிலம்). Archived from the original on 20 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 20 மே 2021.
- ↑ கே. கணபதி (25 திசம்பர் 2009). "Songs of Devotion'" (in ஆங்கிலம்). தி இந்து இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107150946/http://www.hindu.com/fr/2009/12/25/stories/2009122550980300.htm. பார்த்த நாள்: 11 செப்டம்பர் 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- யூடியூபில் நாதர் முடி மேலிருக்கும் - ராமா பாகவதர் பாடிய ஒரு பாடல்