உள்ளடக்கத்துக்குச் செல்

பார்வைத் திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுநெல்லன் கண் அட்டவணை (Snellen eye chart)

பார்வைத் திறன் (Visual acuity ) என்பது ஒரு படத்தின் ஒரு சிறிய பகுதியிலிருந்து நிறைந்த செய்தியினைப் பெறும் திறனைக் குறிக்கும். பலமுறைகளில் இதனைத் தெரிந்து கொள்ள முடியும் என்றாலும், இசுநெல்லன் கண் அட்டவணை (Snellen eye chart) பெரிதும் பயன்படுகிறது. கண்மருத்துவத்தில் பார்வைத் திறனை பரிசோதிக்க இப்படிப்பட்ட அட்டவணைகளை பயன்படுத்துகின்றனர். இதில் அதிக ஒப்புமையுடைய எழுத்துக்களும் எண்களும் பயன்படுத்தப்படுகிறன. பார்வைத் திறன் சோதனை முடிவுகள் ஒரு விகிதாச்சாரத்தில் கொடுக்கப்படுகின்றன. ஒரு தனி மனிதன் அதிகபட்சமாக 25 அடித் தொலைவில் தெளிவாகப் பார்க்க முடிகிறது. பெரும்பாலானவர்கள் அதேபொருளை 40 அடித் தொலைவில் காணமுடிகிறதெனில், அவரது பார்வைத் திறன் 25\40 என்று கொடுக்கப்படுகிறது. இதன் பொருள் பெரும்பாலானவர்கள் 40 அடித் தொலைவில் தெளிவாகக் பார்க்கும் பொருள் இந்த மனிதரால் 25 அடித் தொலைவில் காணமுடிகிறது என்பதாகும்.

உசாத்துணை

[தொகு]
  • Medical Imaging Physics-Willium R Hendee&E.R.Ritenour
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வைத்_திறன்&oldid=1904613" இலிருந்து மீள்விக்கப்பட்டது