பாம்புச் செதில்கள்
Appearance
பாம்புகளின் உடலின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள செதில்கள் பாம்புச் செதில்கள் என்றழைக்கப்படுகிறது[1]. இச்செதில்கள் பல்வேறு வடிவத்திலும், அளவிலும் மற்றும் வண்ணங்களில் ஒவ்வொரு சிற்றினத்திற்கு தகுந்தாற்போல் காணப்படுகிறது.இந்த செதில்கள் பாம்புகளின் உடலின் வெப்பநிலையை தக்க அளவில் வைத்துக்கொள்ளவும், உருமறையவும், ஊர்ந்து செல்லவும் உதவுகிறது. மேலும் சில இனங்களில் இதில் உள்ள வண்ணங்களும் அதன் அமைப்புகளும் தன் எதிரியை பயமுறுத்தவும் பயன்படுகிறது.
வகைபடுத்த உதவுதல்
[தொகு]இச்செதிகளில் பல்வேறு வடிவத்திலும், அளவிலும் மற்றும் வண்ணங்களிலும் ஒவ்வொரு சிற்றினத்திற்கு தகுந்தாற்போல் காணப்படுவதால் ஒத்தபுறத்தோற்ற்த்தைக் கொண்ட சிற்றினங்களை வகைப்படுத்த இச்செதில்களின் எண்ணிக்கை மற்றும் அளவுகள் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Boulenger, George A. 1890 The Fauna of British India. page 1